Skip to main content

Posts

Showing posts from August, 2020

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...

களவழி நாற்பது - ஒரே ஒரு புறநூல் -பதினெண் கீழ்க்கணக்கு நூல் -"களவழி நாற்பது" நூல் விளக்கம்

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே புறப்பொருள் குறித்து பாடப்படும் ஒரே பாடல் "களவழி நாற்பது" இந்நூலினை சோழ மன்னனான கோச்செங்காகானுக்கும் சேரமான் கணைக்காலிரும் போறைக்கும் இடையே கழுமலத்தில் இடம்பெற்ற போரின் பின்னணியில் எழுதப்பட்டதுு தான் "களவழி நாற்பது". களவழி நாற்பது நூலினை இயற்றியவர் பொய்கையார். இவர் சேர மன்னனுடைய நண்பர் ஆவார். அங்கு நடைபெற்ற போரில் சேரன் தோற்று கைதி ஆகிறான். அவனை விடுவிக்கும் நோக்கில் பாடப்பட்டது என வரலாறுகள் கூறுகின்றன. இதில் உள்ள 40 பாடல்கள் அக்காலத்து போர்க்காலக் காட்சிகளையும் சோழனும் அவனது படைகளும் புரிந்த வீரப் போர் பற்றி கவி நயத்துடன் எடுத்துக்காட்டுகின்றன. மேலும் இந்நூலில் உள்ள பெரும்பாலான பாடல்களில் யானைப் படைகளை குறிப்பிடுவது அக்காலத்தில் யானைப் படைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம். களவழி நாற்பது பெயர் வரக் காரணம்: நெல் முதலான விளைச்சலை அடித்து    அழி தூற்றும் களத்தை பாடுவதே "ஏரோர் களவழி" எனவும் பகைவரைை அழிக்கும் போர்க்களத்தை பற்றிப் பாடுவது "தேரோர் களவழி" இவ்விரண்டில் தேரோர் களவழி கைப்பற்றி பா...

கார் நாற்பது - அகநூல்களில் மிகவும் சிறியது - தெளிவான நூல் விளக்கம்

  சங்கம் மருவிய காலத் தமிழ் இலக்கிய நூல் தொகுப்பான பதினெண் கழ்க்கணக்கு நூல்களுள் அகப்பொருள் சார்ந்த நூல்களுள் ஒன்றான "மதுரையைச் சார்ந்த கண்ணன் கூத்தனார்" எனும் புலவரால் பண்டையக்கால தமிழரின் "அக வாழ்க்கையின் அம்சங்களையும்" மற்றும் தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காக ஏக்கத்தோடு   "கார்காலப் பின்னணியில் எடுத்துரைக்கும் நூல்" தான் "கார் நாற்பது" பற்றி விரிவாக காண்போம். இந்நூல் கார்காலத்தின் இயற்கை நிகழ்வுகளையும் அக்காலத்தில் நிகழும் பண்பாட்டு நிகழ்வுகளையும் தலைவியின் மனநிலையோடு சேர்த்து இந்நூல் எடுத்துக் கூறுகிறது. கார்நாற்பது எடுத்துக் கூறும் திருவிழா: கார்கால திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத் திருவிழா அன்று மக்கள் வீடுுுு வீடாக விளக்குகளை ஏற்றி வழிபடுவர். அதே போல வரிசையாக எங்கும் பூக்கள் பூக்கும் படியாக தலைவனின் வருகையை அறிவிக்கும் தூதாக " மழை வந்துள்ளது" எனும் பொருளில் வரும் பாடல் பின்வருமாறு. நலமிகு  கார்த்திகை  நாட்டவ   ரிட்ட               தலைநாள்  விளக்கி  றகையுடைய  ...

கைந்நிலை - புல்லங்காடனார் - இந்நூலினை "ஐந்திணை அறுபது"என்றும் அழைக்கப்படுவர்..

  கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுதியில் அடங்கிய ஒரு நூல் தான் "கைந்நிலை" இந்நூலினை புல்லங்காடனார் என்னும்  புலவரால் இயற்றப்பட்டது. கைநிலை ஒரு அகப்பொருள் நூல் ஆகும். மேலும் இது 60 பாடல்களைக் கொண்டுள்ளது . ஐந்துு தமிழர் நிலத்திினை பின்னணியாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதற்கு ஐந்திணை அறுபது  என்றும் பெயர் உண்டு . சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழக முறை இந்நூலுக்கு உள்ளது. கை என்றாால் ஒழுக்கம் என்று அழைக்கப்படுகிறது. ஆகவே ஐந்திணை ஒழுக்க நிலை பற்றி கூறும் நூல் ஆதலால்     கைந்நிலை  என பெயர் பெற்றது. இந்நூலில் இடம் பறும் வடசொற்கள் பின்வருமாறு: ஆசை, பாசம், கேசம், இரசம், இடபம், உத்திரம்.   கைந்நிலை  திணை வைப்பு முறை முதலில் குறிஞ்சித் திணையில்  தோன்றி பாலை, முல்லை, மருதம் நெய்தல் திணையில் முடிவடைகிறது.   கைந்நிலை  பாடல்களின் எண்ணிக்கை: குறிஞ்சித்திணை - 12 பாடல்கள். பாலைத் திணை - 7 பாடல்கள். முல்லைத்திணை - 3 பாடல்கள். மருதத்திணை - 11 பாடல்கள். நெய்தல் திணை - 12 பாடல்கள்....

திணைமாலை நூற்றைம்பது - அகப்பொருள் நூல்களில் மிகவும் பெரிய நூலான திணைமாலை நூற்றைம்பது விரிவான விளக்கம்

திணைமாலை 150 (ஐந்திணை தொகுப்பில் ஒன்று) நூல் விளக்கம்:  பண்டைய தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான 153 பாடல்களைக் கொண்ட அகப்பொருள் சார்ந்த சமண சமயத்தைச் சார்ந்த கணிமேதாவியார் என்ற புலவரால் இயற்றப்பட்ட "திணைமாலை 150" என்ற நூலினை சற்றுுுு விரிவாக இங்கே காண்போம். கணிமேதாவியார் திணைமாலை 150 மட்டுமின்றி மற்றொரு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான "ஏலாதி என்ற நூலையும் இயற்றியுள்ளார்". மேலும் திணைமாலை 150 ஐந்திணையின் கீழ் இயற்றப்பட்டுள்ளது. மேலும் இங்கே ஒவ்வொரு திணையும் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளன என்பதை சற்று விரிவாக காணலாம். திணைமாலை 150 இடம்பெறும் திணை வைப்பு முறை முதலில் குறிஞ்சித் திணையில் தோன்றி நெய்தல், பாலை, முல்லை, மருதம் திணையில் முடிவடைகிறது. இதனடிப்படையில் ஒவ்வொரு திணையிலும் உள்ள பாடல்களின் எண்ணிக்கை பின்வருமாறு காணலாம். குறிஞ்சித்திணை ( 1 முதல் 31 பாடல்கள் வரை)  நெய்தல் திணை ( 32 முதல் 62 பாடல்கள் வரை)   பாலைத் திணை ( 63 முதல் 92 பாடல்கள் வரை) முல்லைத்திணை ( 93 முதல் 123 பாடல்கள் வரை) மருதத்திணை ( 124 முதல் 153 பாடல்கள் வரை) திணைம...

திணைமொழி ஐம்பது - எதுகை, மோனை யைக் கொண்டு அமையப்பெற்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்.

  கிபி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான 50 அகப்பொருள்  பாடலை கொண்ட நூல் தான் "திணைமொழி ஐம்பது" இந்நூலினை சாத்தந்தையார் என்ற பெரியாரின் மகனாகிய கண்ணன் சேந்தனார் என்ற புலவரால் இயற்றப்பட்டது. பண்டைய தமிழ் இலக்கியங்களில் காணும் வழக்கிற்கு அமைந்த அகப்பொருள் இலக்கியமான இது ஐந்துு வகையான திணைகளை (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டதுு என்பது குறிப்பிடத்தக்கது. திணைமொழி ஐம்பது திணைவைப்பு முறை பற்றி விரிவாக காண்போம்: முதலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம்,நெய்தல் ( கடைசியில் முடிகிறது). திணைமொழி ஐம்பது முக்கிய குறிப்புகள்: * திணைமொழி ஐம்பது உள்ள பாடல்களின் எண்ணிக்கை 50 பாடல்கள். * திணைக்கு பத்து பாடல்கள் மூலம் 50 பாடல்களைக் கொண்டதால் "திணைமொழி ஐம்பது" என பெயர் பெற்றது. * இந்நூலின் அனைத்து பாடல்களும் எதுகை, மோனை கொண்டு அமையப் பெற்றது. திணைமொழி ஐம்பது இல் இடம்பெறும் முக்கிய பாடல் வரிகள்:                           ...

ஐந்திணை எழுபது - திணை வைப்பு முறை-விநாயகர் வணக்கத்தை கடவுள் வாழ்த்தாக கொண்ட நூல் ஐந்திணை எழுபது

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அகப்பொருள் குறித்து அமையும் நூலான சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய ஐந்திணை எழுபது என்ற நூலினை இயற்றியவர் மூவாதியார்.   இந்நூலில் குறிப்பிடப்படும் ஐந்து திணைகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்து வகையான பண்டைய கால தமிழ் நிலப் பரப்புகள் ஆகும். மூவாதியார் பற்றி சில வரிகள்: மூவாதியார் ஐ சமணர் என்று கூறுவர் சிலர் ஆனால் இதற்குச் சான்றுகள் எதுவும் கிடையாது. இவருடைய பெயருக்கு உரிய காரணம் புலப்படவில்லை. ஒருவேளை அயன், மால், சிவன் எனும் மூன்று கடவுளுக்கும் மூலமான பரம்பொருள் இன்றுு நூலுக்கு விளக்கம் கூறலாம். இந்த ஐந்து திணைகளையும் பின்னணியாகக் கொண்டு திணைக்கு 14 பாடல்கள் வீதம் மொத்தம் 70 பாடல்கள் கொண்டுள்ளதால் இதனை ஐந்திணை எழுபது என்று அழைக்கப்படுகிறது.  இந்நூலின் திணை வைப்பு முறை பற்றி சற்று விரிவாக காண்போம் இந்நூலில் முதலில் இடம்பெறும் திணை குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல். இத்திணைகளில் பாலை நிலம் முல்லையும் குறிஞ்சியும் தம் இயல்பு கெட்டு தோன்றுவதால் ஆதலால் நான்கு திணைகளுக்கும் பொதுவாய் அமைந்த திணை ஆதலால் " நடுவண் திணை"...

ஐந்திணை ஐம்பது - முல்லை திணையை முதன்மையாகக் கொண்டு பாடப்படும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று தான் ஐந்திணை ஐம்பது

  கிபி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த மாறன் பொறையனார் என்னும் புலவரால் அகப்பொருள் குறித்துக் கூறும் நூல்களுள் இவை பதினெணகீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ஐந்திணை ஐம்பது நூலைப் பற்றி சற்றுு விரிவாக காண்போம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை என நிலங்களை 5 திணைகளாாகப்   பிரிப்பது பண்டையகால தமிழ் வழக்கு.  அக்கால தமிழ் இலக்கியங்களிலும் அத்தகைய இலக்கியங்களில்  எடுத்தாளப்படும் விடயங்களுக்கு பின்னணியாக இத் திணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. ஐந்திணை ஐம்பதில் மேற்காட்டிய ஒவ்வொரு திணையின் பின்னணியிலும் பத்துப் பத்துப் பாடல்களாக 50 பாடல்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக: பாலை திணையை பின்னணியாக கொண்ட ஒரு பாடல் இது. வாழ்ந்த சூழலின் வசதிகளையும் பசுமையான நினைவுகளையும் விடுத்து காதலருடன் வறண்ட பாலைநில பகுதியூடாக செல்கிறாள் தலைவி. பாலை நிலத்துக்கு இயல்பான கடுமைை வாடடும்  எனினும் காதல் வயப்பட்ட உள்ளங்களுக்கு இயல்பான விட்டுக் கொடுப்புக்கள் அவர்களைை மேலும் நெருக்கமாகும். இக்கருத்தை விளக்கும் இனிய பாடல் பின்வருமாறு சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென்  றேண்ணிப்  பிணைமான் இனிதுண்ண வே...

சிறுபஞ்சமூலம் - தமிழ் விக்கிமூலம்

"மா" என்ற அடைமொழி கொண்டு பாயிர செய்யுளில் சிறப்பித்து அழைக்கப்படும் சமண புலவர்களில் ஒருவரான 97 செய்யுள்கள் கொண்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் நீதி நூல்களில் ஒன்றான நான்கு அடிகளால் அமைந்த 100 பாடல்களைக் கொண்ட "மா" என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் "காரியாசனால் இயற்றப்பட்ட சிறுபஞ்சமூலம் " என்ற நீதிிநூல் உண்மைப் பற்றி விரிவாக காண்போம். இந்நூலில் அமைந்துள்ள ஒவ்வொரு பாடலும் நீதி புகட்டுவதற்காக எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பான ஐந்து விடயங்களை எடுத்துரைக்கிறது. ஆனால் அனைத்து பாடல்களிலும் ஐந்து விடயங்கள் இருப்பதில்லை என்ற காரணத்தினால் இந்நூலினை சிறுபஞ்சமூலம் என்று அழைக்கப்படுகிறது. சிறுபஞ்சமூலம் காரியாசன் என்ற சமண புலவரால் இயற்றப்பட்டது. சிறுபஞ்சமூலம் பெயர் காரணம்: பஞ்சம்  என்றால் 5 என்றும், மூலம் என்றால்  வேர் என்பது பொருளாகும். பண்டைய காலத்தில் தமிழர் மருத்துவத்தில் உடல் நோய்களை தீர்ப்பதற்கு கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சில் ஆகிய ஐந்தின் வேர்களை சேர்த்து மருந்தாக்குவது போல ஐந்து விடயங்கள் மூலம் நீதியை போதித்து இந்நூல் ஒழுக்கக...

பழமொழி நானூறு - முப்பெரும் அற நூல்களில் ஒன்றான பழமொழி நானூறு தெளிவான விளக்கம்

  கிபி ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்க மருவிய கால தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான சமண முனிவர்களால் இயற்றப்பட்ட என்ற பெருமைக்குரிய ஆசிரியர் மூன்றுறை அரையனார் என்பவரால் பாயிரமும் கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த (401) பாடல்களைக் கொண்ட நீதி நூலான (பழமொழி நானூறு) பற்றி விளக்கமாகப் பார்ப்போம். பழமொழி என்றால் என்ன: பழம் தின்ன சுவைப்பது, உன் பாரின் உடல் வளத்துக்கும் உதவுவது, இவ்வாறு கேள்விக்கு இனிதாகவும் அறிவிற்கு வளம் சேர்ப்பதாகவும் விிிலங்கும் அறிய வாக்குகளையே "பழமொழி" என்றழைக்கிறோம். இந்நூல் 34 தலைப்பில் அமைந்த பாடல்களை தன்னுள் கொண்டுள்ளது அப்பாடலைப் பற்றி சற்று விரிவாக காண்போம். 1. கல்வி - 10 பாடல்கள் 2. கல்லாதவர் - 6 பாடல்கள் 3. அவையரிதல் - 9 பாடல்கள் 4. அறிவுடைமை - 8 பாடல்கள் 5. ஒழுக்கம் - 9 பாடல்கள் 6. இன்னா செய்யாமை - 8 பாடல்கள் 7. வெகுளாமை - 9 பாடல்கள் 8. பெரியோரை பிழையாமை - 5 பாடல்கள் 9. புகழ்தல்லின் கூறுபாடு - 4 பாடல்கள் 10. சான்றோர் இயல்பு - 12 பாடல்கள் 11. சான்றோர் செய்கை - 9 பாடல்கள் 12. கீழ்மக்கள் இயல்பு - 7 பாடல்...

ஆசாரக்கோவை - தமிழரின் வாழ்க்கை முறையை தெளிவாக உணர்த்தும் நூல்

  மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக் கூறும் வன்கயத்தூரை சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவரால் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் குறிப்பிடப்படும் நீதி நூல்களில் ஒன்றான " ஆசாரக்கோவை" பற்றி விளக்கமாகப் பார்ப்போம். இன்னூல் பல்வேறு வெண்பா வகைகளால் ஆன 100 பாடல்களை உடையது. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்துரைக்கிறது. ஆசாரக்கோவையில் இடம்பெறும் ஒழுக்கத்தைப் பற்றிய பட்டியல் பின்வருமாறு காணலாம்: 1. ஆசார வித்து. 2. ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள். 3. தக்கிணை முதலியவை மேற்கொள்ளல். 4. முந்தையோர் கண்ட நெறி. 5. எச்சிலுடன் தீண்டத் தகாதவை. 6. எச்சிலுடன் காணக் கூடாதவை. 7. எச்சில்கள். 8. எச்சிலுடன் செய்யக் கூடாதவை. 9. காலையில் கடவுளை வணங்குக. 10. நீராட வேண்டிய சமயங்கள். 11. பழமையோர் கண்ட முறைமை. 12. செய்யாமல் தவிர்க்க வேண்டியவை. 13. செய்யத் தகாதவை. 14. நீராடும் முறை. 15. உடலைப் போல் போற்றத்தக்கவை. 16. யாவரும் கூறிய நெறி. 17. நல்லறிவாளர் செயல். 18. உணவு உண்ணும் முறைமை. 19. கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை. 20. உண்ணும் விதம். 2...

திருக்குறள் - திருவள்ளுவர்.

  சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கிமு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கிமு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக ஆய்வுகள் தெரிவிக்கின்ற ஒரு சரித்திர நாவலை படைத்து உலகறிய உலகப் பொதுமறை என்றுு போற்றக் கூடிய வகையில் இந்் நூலின் பெருமையை இவ்வுலகத்திற்கு கொண்டுவந்த மிகப்பெரிய மற்றும் மிகவும் புகழ்பெற்ற திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளைப் பற்றி விரிவாக இங்கு காண்போம். திருக்குறள்: திருக்குறள் புகழ்பெற்ற தமிழ் இலக்கியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் என்று என்ற வேறு பெயர்களும் திருக்குறளுக்கு உள்ளன.  திருக்குறள் சங்க இலக்கிய வரலாற்றில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கின்றது. மேலும் திருக்குறள் அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல் ஆகும்.  திருக்குறள்் முதன்முதலாக 1812 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. அதன் பிறகு இதன் அருமை பெருமை காரணமாக உலகறிய வைக்க ஆங்கிலத்தில் 1840 ஆண்டு அச்சிடப்பட்டது . திருக்குறள் நூலானதுு திருவள்ளுவரின்  சுுயசிந்தனை அடிப்படையில் இயற்...

முதுமொழிக்காஞ்சி - பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

பதினெட்டு நூல்களின் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் தமிழ் தொகுதியில் மிகவும் சிறிய பாடலான முதுமொழிக்காஞ்சி பற்றிி விளக்கமாக காண்போம்: கிபி ஐந்தாம் நூற்றாண்டில் சங்கம் மருவிய காலத்தைச் சார்ந்த மதுரைக் கூடலூர் கிழார் என்பவரால் முதுமொழி என்ற பழமொழி உடன் திகழும் "முதுமொழிக் காஞ்சி" என்ற நூலைை இயற்றினார். இதில் குறிப்பிடப்படும் "முதுமொழி" என்பது "பழமொழி" என்ற சொற்்  பொருளோடு தொடர்புடையது. மற்றும் "முதுமொழி" என்பது "மூதுரை"மற்றும்" முதுசொல்" எனவும் பொருள்் தருகின்றது.மேலும் இதில்் குறிப்பிடப்படும் "   காஞ்சி" என்ற சொல்லானது காஞ்சித் திணையில் " தொல்காப்பியம் காட்டும் ஒரு துறையை" விளக்குகிறது.  அத்துறையை பற்றி கூறும் வரிகள் "கழிந்தோர் ஒழிந்தோர்க்கு காட்டிய முறைமை"  எனும் துறைை விளக்கப்பட்டுள்ளது. முதுமொழிக்காஞ்சி 10 பாடல்களைக் கொண்ட "பத்து பதிகம்" கொண்டது. அதாவது 100 பாடல்கள் உள்ளது. இதில்் குறிப்பிடப்படும் ஒவ்வொரு பதிகமும் "ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்...