Skip to main content

பழமொழி நானூறு - முப்பெரும் அற நூல்களில் ஒன்றான பழமொழி நானூறு தெளிவான விளக்கம்

 

கிபி ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்க மருவிய கால தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான சமண முனிவர்களால் இயற்றப்பட்ட என்ற பெருமைக்குரிய ஆசிரியர் மூன்றுறை அரையனார் என்பவரால் பாயிரமும் கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த (401) பாடல்களைக் கொண்ட நீதி நூலான (பழமொழி நானூறு) பற்றி விளக்கமாகப் பார்ப்போம்.

பழமொழி என்றால் என்ன:

பழம் தின்ன சுவைப்பது, உன் பாரின் உடல் வளத்துக்கும் உதவுவது, இவ்வாறு கேள்விக்கு இனிதாகவும் அறிவிற்கு வளம் சேர்ப்பதாகவும் விிிலங்கும் அறிய வாக்குகளையே "பழமொழி"என்றழைக்கிறோம்.

இந்நூல் 34 தலைப்பில் அமைந்த பாடல்களை தன்னுள் கொண்டுள்ளது அப்பாடலைப் பற்றி சற்று விரிவாக காண்போம்.

1. கல்வி - 10 பாடல்கள்

2. கல்லாதவர் - 6 பாடல்கள்

3. அவையரிதல் - 9 பாடல்கள்

4. அறிவுடைமை - 8 பாடல்கள்

5. ஒழுக்கம் - 9 பாடல்கள்

6. இன்னா செய்யாமை - 8 பாடல்கள்

7. வெகுளாமை - 9 பாடல்கள்

8. பெரியோரை பிழையாமை - 5 பாடல்கள்

9. புகழ்தல்லின் கூறுபாடு - 4 பாடல்கள்

10. சான்றோர் இயல்பு -12 பாடல்கள்

11. சான்றோர் செய்கை - 9 பாடல்கள்

12. கீழ்மக்கள் இயல்பு - 7 பாடல்கள்

13. கீழ்மக்கள் செய்கை -17 பாடல்கள்

14. நட்பின் இயல்பு -10 பாடல்கள்

15. நட்பில் விலக்கு - 8 பாடல்கள்

16. பிறர் இயல்பைக் குறிப்பால் அறிதல் - 7 பாடல்கள்

17. முயற்சி - 13 பாடல்கள்

18. கருமம் முடித்தல் - 15 பாடல்கள்

19. மறை பிறர் அறியாமை - 6 பாடல்கள்

20. தெரிந்து செய்தல் - 13 பாடல்கள்

21. பொருள் - 9 பாடல்கள்

22. பொருளைப் போற்றுதல் -8 பாடல்கள்

23. நன்றியில் செல்வம் - 14 பாடல்கள்

24. ஊழ் -14 பாடல்கள்

25. அரசியல்பு  - 17 பாடல்கள்

26. அமைச்சர் -8 பாடல்கள்

27. மன்னரைச் சேர்ந்தொழுகல் - 19 பாடல்கள்

28. பகை திறன் -26 பாடல்கள்

29. படைவீரர் -16 பாடல்கள்

30. இல்வாழ்க்கை -21 பாடல்கள்

31. உறவினர் -9 பாடல்கள்

32. அறம் செய்தல் -15 பாடல்கள்

33. ஈகை -15 பாடல்கள்

34. வீட்டு நெறி -13 பாடல்கள்


புராணங்களைப் பற்றி பழமொழி நானூறு எவ்வாறு விளக்குகிறது:

பொலந்தார் ராமன் தன்  துணையாக தான் போந்து (பாகம் -258) இராமாயணம்.

அரக்கிலுள் பொய்யற்ற ஐவரும் போயினார் (பாகம் -235) பாரதம்.

உலகந்தாவிய அண்ணலே (பாகம்  -178) உலகம் அளந்த வாமனன்.


பழமொழி நானூற்றில் இடம்பெறும் வரலாற்றுக் குறிப்புகள்:

நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான் சோழன் (பாகம் - 7) கரிகால் சோழன்.(சுடுபட்டு உய்ந்த சோழன் மகனும்)

தீயினால் கொளுத்தப்படும் அதிலிருந்து பிழைத்த இளம்சேட் சென்னி சோழன் மகனாகிய கரிகால் சோழன்.

குறுநில வள்ளல் பாரி மற்றும் பேகன்(முல்லைக்குத் தேரும் மயிலுக்கு போர்வையும் (பாகம்-75) .


பழமொழி நானூறில் இடம்பெறும் முக்கிய பழமொழிகள் சில:

* கற்றலின் கேட்டலே நன்று.

* முள்ளினாள் முள் களையுமா.

* ஆயிரம் காக்கைக்கு ஒரு கல்.

* திங்களை நாய்க் குறைத்ன்று.

* இறைத்தோறும் ஊறும் கிணறு.

* பாம்பறியும் பாம்பின் கால்.

* கடன் கொண்டும் செய்வார் கடன்.

* குன்றின் மேல் இட்ட விளக்கு.

* தனிமரம் காடாதல் இல்.

* நுணலும் தன் வாயால் கெடும்.

* அணியல்லாம் ஆடையின் பின்.


பழமொழி நானூறு முக்கிய குறிப்புகள்:

* பழமொழி நானூறு பாவகை செப்பல் ஓசை

* பழமொழி நானூறு இயற்றிய ஆசிரியரின் மற்றொரு பெயர் மூன்றையர் (பாண்டிய நாட்டில் உள்ள ஓர் ஊர்)

* மூன்றுறை அரையனார் என்பதன் பொருள் மூன்றுரை -அவர் பிறந்த ஊர், அரையன் - அரசன் அல்லது குடிப்பெயர்.

* பழமொழி நானூறு எனப் பெயர் பெற காரணம் ஒவ்வொரு பாட்டிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி சொல்லப்பட்டுள்ளதால் "பழமொழி நானூறு"எனப் பெயர் பெற்றது.

* பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள முப்பெரும் அறநூல்கள் திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு.

* தொல்காப்பியர் பழமொழியை "முதுமொழி"என்று அழைக்கிறார்.

* பழமொழி என்ற சொல் முதன் முதலில் அகநானூற்றில் வருகிறது.

* பழமொழி நானூறு முதலில் பதிப்பித்தவர் செல்வசேகரன் முதலியார்.

* பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மிகுதியான வரலாற்றுக் கூறுகளை குறிக்கும் நூல் பழமொழி நானூறு.

* ஆற்றுணா வேண்டுவது இல் இதில் குறிப்பிடப்படும் ஆற்றுணா -ஆறு + ஊணா இன்றும் ஆறுு என்பதன் பொருள்  வழி எனவும்,  ஊணாஎன்பதன் பொருள் உணவு.

* பண்டைய காலத்தில் வழிநடை உணவை கட்டுச் சோறு என்று அழைப்பார்கள்.


பழமொழி நானூற்றில் வேறு பெயர்கள்

மூதுரை

முதுசொல்

முதுமொழி

உலக வசனம்


Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...