தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.


தமிழ் விடு தூது நூல் அமைப்பு:

தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும்.

தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்:

தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது.

தமிழ்விடு தூது சிறப்பு;

தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்  இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது.

தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்:

* தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது.

* தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இரண்டு  பூக்களைக் கொண்டு தொடுக்கப்படும் மாலைக்கு கன்னி என்று பொருள்படும்.

* வாயில் இலக்கியம் மற்றும் சந்து இலக்கியம் என்று அழைக்கப்படும் நூல் தமிழ்விடு தூது.

* தூது இலக்கியத்திற்கு மற்றொரு பெயர் வாயில் இலக்கியம், சந்து இலக்கியம்.

* தமிழ்விடு தூது அமைந்துள்ள கண்ணிகள் எண்ணிக்கை 268 கண்ணிகள் உள்ளன.

* தமிழ்விடு தூது வை முதல் முதலில் பதிப்பித்தவர் 1930 ஆம் ஆண்டு உ.வே.சா பதிப்பித்தார்.

* தமிழ்விடு தூது இயற்றியவர் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

* கலிவெண்பாவால் பாடப்பெறும் சிற்றிலக்கியம் தூது இலக்கியம்.

* தூதுவிடும் பொருட்கள் மொத்தம் 10.

* சிற்றிலக்கிய வகை சாராதது சீவக சிந்தாமணி.

* தாமஸம் என்பதன் பொருள் சோம்பல்.

* தமிழின் வண்ணங்கள் மொத்தம் 100 வண்ணங்கள்.

* உணவின் சுவை மொத்தம் 6 சுவை.

* தமிழின் சுவை மொத்தம் 9 சுவை.

* தேவர்கள் குணம் 3 குணம்.

* தமிழின் குணம் 10 குணம்.

* இனிக்கும் தெளிந்த அமுதம் என்று அழைக்கப்படும் மொழி தமிழ் மொழி.

* ஒளியா வனப்பு மொத்தம் எட்டு (8).

* அழியா வனப்பு ஒன்று (1).

* தமிழ்விடு தூது அமைந்துள்ள வெண்பா கலிவெண்பா.





Post a Comment

Previous Post Next Post