Skip to main content

Posts

Showing posts from June, 2021

பிரமிள் (தருமு சிவராம்) புதுக்கவிதை கவிஞர் வாழ்க்கை குறிப்பு....

  புதுக்கவிதை - தருமு சிவராம் ( பிரமிள்): தோற்றம்: 20-04-1939                              மறைவு : 06-01-1997 சிவராமலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட தருமு சிவராம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலையைச் சேர்ந்தவர். எழுபதுகளின் ஆரம்பத்திலேயே தமிழ்நாடு வந்து விட்டார் பிறகு பெரும்பாலான வாழ்நாளை சென்னையிலேயே கழித்தார்.  தருமு சிவராம் சிறப்புப் பெயர்: 1. பானு சந்திரன் 2. பிரமிள் 3. பானு அரூப்  4. அரூப் சிவராம்  5. படிமக் கவிஞர் 6. ஆன்மீக கவிஞர் தருமு சிவராமு எழுதிய இதழ்கள்: 1. தருமு சிவராமு "எழுத்து " எனும் சி. சு. செல்லப்பாவின்   பத்திரிக்கைகளில் முதன்முதலில்  கவிதைகளையும் விமர்சனங்களையும் எழுத ஆரம்பித்தார். 2. மௌனியின்  கதை தொகுப்பிற்கு முன்னுரை எழுதி உள்ளார்.  தருமு சிவராமு பற்றிய முக்கிய குறிப்புகள் : 1. இலங்கையில் பிறந்த இவர் தமிழினத்தின் எழுத்தாளர் ஆவார். 2. தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர், ஓவியர் என்ற பல்வேறு வகையில் இவரை அழைக்கப்படு...

சங்க இலக்கியம்

  சங்க இலக்கியம்: சங்க இலக்கியம் தமிழில் கி.மு 500 லிருந்து கி.பி 200 வரை உள்ள காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்களில ஒன்றாகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப் புலவர்களுள் பலதரப்பட்ட தொழில் நிலை உள்ளோரும் பெண்களும் நாடாளும் மன்னரும் உள்ளனர். சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமை படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன ஆகையால் பண்டைய தமிழகத்தில்  காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளை சங்க இலக்கியப் பாடல்கள் அறியத் தருகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களான சி. வை. தாமோதரம்பிள்ளை, உ .வே. சாமிநாதையர் ஆகியோரது முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சு பெறப்பட்டன.  சங்க இலக்கிய நூல்கள் : 1. எட்டுத்தொகை நூல்கள் 2. பத்துப்பாட்டு நூல்கள் 3. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்   1. எட்டுத்தொகை நூல்கள்: * நற்றினை * குறுந்தொகை * ஐங்குறுநூறு * பதிற்றுப்பத்து * பரிபாடல் * கலித்தொகை * அகநானூறு * புறநானூறு 2. ...

தமிழ் இலக்கியம்

  தமிழ் இலக்கியம்: தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று ஆகும். வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி, 96 வகை சிற்றிலக்கியங்கள் எனப் பல வடிவங்களில் உள்ளன தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கியம் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது : 1. பழங்காலம்  2. இடைக்காலம் 3. இக்காலம் பழங்காலம் : * சங்க இலக்கியம் ( கி-மு 500 முதல் கி.பி 300 வரை) * நீதி இலக்கியம் ( கி.பி 300 முதல் கி.பி 500 வரை ) இடைக்காலம்: * பக்தி இலக்கியம் ( கி.பி 700 முதல் கி.பி 900 வரை) * காப்பிய இலக்கியம் ( கி.பி 900 முதல் கி.பி 1200 வரை) * உரைநூல்கள் ( கி.பி 1200 முதல் கி.பி 1,500 வரை)  * புராண இலக்கியம் ( கி.பி 1500 முதல் கி.பி 1800 வரை)         1. புராணங்கள், தலபுராணங்கள்        2. இஸ்லாமிய தமிழ் இலக்கியம் இக்காலம் : 1. பத்தொன்பதாம் ...

சி. சு. செல்லப்பா (வாடிவாசல் நாவல்) வாழ்க்கை வரலாறு..

  சி. சு. செல்லப்பா  தோற்றம் : 29-09-1912                                              மறைவு : 18-12-1998 சி. சு. செல்லப்பா ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். " எழுத்து" என்ற பத்திரிக்கையை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி. சு. செல்லப்பா ஆவார். பல நல்ல எழுத்தாளர்களையும், விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிகையின் மூலம் ஊக்குவித்தவர். செல்லப்பா சிறந்த விமர்சகர்களாலும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட்சமிநாதன், நா.முத்துசாமி , பிரமீள் மற்றும் பல எழுத்தாளர்கள் சி சு செல்லப்பாவின் ஆல் ஊக்குவிக்கப்பட்வர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், சுதந்திர தாகம் போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர் திகழ்ந்தவர்.  சி. சு. செல்லப்பா வாழ்க்கை வரலாறு: தேனி மாவட்டம் சின்னமனூரில் 1912 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி சி சு செல்லப்பா தன் தாய் மாமாவின் ஊரான வத்தலகுண்டில் ...

ந. பிச்சமூர்த்தி (தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை) வாழ்க்கை குறிப்பு...

 ந. பிச்சமூர்த்தி  : 15-08-1900 முதல் 04-12-1976 ந. பிச்சமூர்த்தி அண்மைய தமிழ் இலக்கிய முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். தமிழ் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் "பிச்சமூர்த்தி". தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் பாணியை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் பிச்சமூர்த்தி வழக்கறிஞர் பட்டம் பெற்று பணியாற்றிய பிச்சமூர்த்தி இந்து அறநிலையத் துறை அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரின் படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. ந. பிச்சமூர்த்தியின் வாழ்க்கை குறிப்பு: கும்பகோணத்தில் வாழ்ந்த நடேச தீட்சிதர் மற்றும் காமாட்சி அம்மாள் ஆகிய இருவருக்கும் நான்காவது குழந்தையாக 1900ஆம் ஆண்டு ஆகத்து 15 பிச்சமூர்த்தி பிறந்தார் . அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் வேங்கட மகாலிங்கம் . நடேச தீட்சிதர் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு மற்றும் மராட்டிய மொழிகளில் ஹரிகதா சொற்பொழிவு செய்யும் அளவிற்கு தேர்ச்சி பெற்றவர் சைவ புராணங்கள் செய்தவர். பிச்சமூர்த்தி கும்பகோணத்தில் தன் பள்ளிப் படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்தார். தத்துவத்தில் பட்டம் பெற்று சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார் 19...

மரபுக் கவிஞர் - மருதகாசி வாழ்க்கை வரலாறு

மருதகாசி வாழ்க்கைக் குறிப்பு : அரியலூர் மாவட்டம் மேலக்குடிகாடு கிராமத்தில் பிறந்தவர் மருதகாசி. இவரின் தந்தை பெயர் அய்யம்பெருமாள் உடையார் தாயார் பெயர் மிளகாயி அம்மாள் ஆவார். உள்ளூரில் தொடக்கக் கல்வி பயின்றபின் ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புவரை கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.  அதன் பிறகு கும்பகோணம் அரசு கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி கற்றார். 1940 ஆம் ஆண்டில் திருமணமான இவரின் மனைவியின் பெயர் தனக்கோடி அம்மாள் மேலும் மருதகாசிக்கு 6 மகன்கள் 3 மகள்கள் உள்ளனர். 1949இல் பாடல்கள் எழுதத் தொடங்கிய மருதகாசி சுமார் 550 க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார். நாடக பாடல்களில் மருதகாசியின் பங்கு: மருதகாசி சிறு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலை பெற்றிருந்தார் கல்லூரிப் படிப்பிற்கு பிறகு குடந்தையில் " தேவி நாடக சபையில் " நாடகங்களுக்கு ஒரு சில பாடல்கள் எழுதிவந்தார். முத்தமிழ் அறிஞர்                  மு. கருணாநிதி எழுதிய " மந்திரிகுமாரி " போன்ற நாடகங்களுக்கு பாடல் எழுதினார்... கவிஞர் கா. மு. ஷரீபின்...

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் திரைப்படப் பாடல்கள் .....

  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய திரைப்படப் பாடல்கள்: இயற்கையை மையமாக வைத்து எழுதிய பாடல்கள்: 1. ஆடுமயிலே ( ரத்தினபுரி இளவரசி 1959) 2. ஓ மல்லியக்கா ( மக்களை பெற்ற மகராசி 1957) 3. வம்பு மொழி ( பாண்டித்தேவன் 1959) 4. வா வா வெண்ணிலவே ( சௌபாக்கியவதி 1957 ) 5. கனியிருக்கு ( எதையும் தாங்கும் இதயம் 1962) 6. கொக்கரக் கொக்கரக்கோ சேவலே ( பதி பக்தி 195 8) 7. சலசல ராகத்திலே கங்கையக்கா ( ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 1960) 8. துணிந்தால் துன்பமில்லை ( ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 1960) 9. காக்காய்க்கும் ( பிள்ளைக் கனியமுது) 10. வா வா சூரியனே ( பாண்டித் தேவன் 1959) 11. என்னருமைக் காதலிக்கு வெண்ணிலவே ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960) சிறுவர்களை மையமாக வைத்து எழுதிய பாடல்கள் : 1. குழந்தை வளர்வது அன்பிலே ( ரத்தினபுரி இளவரசி 1959) 2. அன்புத் திருமணியே ( ரத்தினபுரி இளவரசி 1959) 3. அமுதமே என் அருமைக்கனியே ( உலகம் சிரிக்கிறது 1959) 4. சின்னஞ்சிறு கண்மலர் ( பதி பக்தி 1958 ) 5. அழாதே பாப்பா ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 ) 6. ஆனா ஆவன்னா ( அன்பு எங்கே 1958) 7. இந்த மாநிலத்தை பாராய் மகனே ( கல்யாணிக்கு கல்யா...

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை வரலாறு........

  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்  தோற்றம்: 13-04-1930 மறைவு   : 08-10-1959 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் மற்றும் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது வல்லவர் ஆவார். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. வாழ்க்கைக் குறிப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு எனும் சிற்றூரில் அருணாச்சலம்,  விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 1930-ஆம் ஆண்டு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். இவருக்கு கணபதி சுந்தரம் என்ற மூத்த சகோதரரும், வேதநாயகி என்கிற இளைய சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்தையும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பால். 1959 ஆம் ஆண்டு இவருடைய குழந்தை குமரவேல் பிறந்ததே அதே ஆண்டில் இவர் அகாலமரணம் அடைந்தார். எழுத்தாற்றல...

உடுமலை நாராயணகவி (தமிழ் திரைப்பட பாடலாசிரியர்) - வாழ்கை வரலாற்று குறிப்பு

 உடுமலை நாராயணகவி  தோற்றம் : செப்டம்பர் 25, 1899 மறைவு    : மே 23, 1981 உடுமலை நாராயணகவி செப்டம்பர் மாதம் 25ஆம் நாள் 1899 ஆம் ஆண்டு பிறந்தார்.  முன்னாள் தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார். விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர் இவர். முத்துசாமி கவிராயரின் மாணவரான இவர். ஆரம்ப காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார். இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும் தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன. 1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்து நாராயணகவி என்று பெயர்  சூட்டிக்கொண்டு கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டார். ஆரம்ப காலத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி மகாகவி பாரதியாரின் நட்புக்கு பின்னர் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பியவர். கலைவாணர் என். எஸ் கிருஷ்ணனுக்கு  கிந்தனார்  "கதாகாலட்சேபம் " எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர். அறிஞர் அண்ணா எழுதிய வேலைக்...

கவியரசு கண்ணதாசன் வாழ்க்கை வரலாறு

  கண்ணதாசன் வாழ்க்கை வரலாறு: கண்ணதாசனின் இயற்பெயர் - முத்தையா   கண்ணதாசன் பிறந்த ஊர் - ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள  சிறுகூடல்பட்டி . கண்ணதாசனின் பெற்றோர் - சாத்தப்பன், விசாலாட்சி அம்மையார். கண்ணதாசன் வாழ்ந்த காலம் - 1927 முதல் 1981 வரை. கண்ணதாசனின் புனைப்பெயர் : 1. காரை முத்துப் புலவர் 2. வணங்காமுடி 3. கமகப்பிரியா 4. பார்வதி நாதன் 5. துப்பாக்கி 6. ஆரோக்கியசாமி  கண்ணதாசனின் வேறு பெயர்கள் (சிறப்புப் பெயர்கள்) : 1. கவியரசு 2. கவிச்சக்கரவர்த்தி 3. குழந்தை மனம் கொண்டவர் கவிஞர் கண்ணதாசனின் படைப்புகள் : 1. மாங்கனி 2. ஆட்டனத்தி ஆதிமந்தி 3. கவிதாஞ்சலி 4. பொன்மலை  5. அம்பிகா 6. அழகு தரிசனம் 7. பகவத் கீதை விளக்கவுரை 8. ஸ்ரீ கிருஷ்ண கவசம் 9. பாரி மலைக்கொடி 1o. அர்த்தமுள்ள இந்துமதம் 11. சந்தித்தேன் சிந்தித்தேன்  12. அனார்கலி 13. தெய்வ தரிசனம் 14. பேனா நாட்டியம் இயேசு காவியம் (இறுதியாக எழுதிய காப்பியம்) கவிஞர் கண்ணதாசனின் நாவல்கள்: 1. சேரமான் காதலி ( சாகித்திய அகடமி விருது ) 2. குமரி காண்டம்  3. வேலன்குடி திருவிழா 4. விளக்கு மட்டுமா சிவப்பு 5. ஆயிரங்கால் மண்டப...

உவமை புலவர் - சுரதா வாழ்க்கை வரலாறு Tnpsc group 4 pdf download

மரபுக் கவிதை - சுரதா.   தோற்றம்:23-11-1921   மறைவு   :20-06-2006 தஞ்சை மாவட்டத்தில் பழையனூர் (சிக்கல்) எனும் ஊரில்    திருவேங்கடம் மற்றும் செண்பக அம்மையார் ஆகிய இருவருக்கும் மகனாகப் பிறந்தவர் இராசகோபாலன் என்ற இயர்பெயரால் அழைக்கப்படும் "கவிஞர் சுரதாவின் சிறப்பினை" இங்குு காணலாம். கவிஞர் பாரதிதாசன் மீது கொண்ட பற்றினால் பாரதிதாசனின் இயற்பெயரான சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக் கொண்டார். தன் மாற்றுப் பெயரில் சுருக்கமாக சுரதா என்ற பெயரில் பல மாற்று கவிதைகளைை தொகுத்துள்ளார்.  செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் பெற்றார். இதனால் இவரை உவமை புலவர் என சிறப்பித்துக் கூறுகின்றனர். மேலும் இவர் சீர்காழி அருணாசல தேசிகர் என்பவரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார். பாரதிதாசன் உடன் தொடர்பு: 1941ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் நாள் பாவேந்தர் பாரதிதாசனை முதன்முதல் கண்டு பழகிய சுரதா அவருடன் சிலகாலம் தங்கி இருந்து அவரின் கவிதைப் பணிக்குத் துணை நின்றார். * பாவேந்தர்  பாடல்களைப் படியெடுத்தல். * அச்சு பணிகளை...

மரபுக் கவிதை - வாணிதாசன் TNPSC GROUP 4

  மரபுக்கவிதை  - வாணிதாசன் :  தோற்றம்: 22-07-1915  மறைவு: 07-08-1974 1. வாணிதாசன் வாழ்க்கை குறிப்பு: புதுச்சேரி மாநிலத்தை அடுத்துள்ள வில்லியனூரில் ,22-07-1915  ஆம் ஆண்டுு  தெலுங்கை தாய்மொழியாக கொண்ட அரங்க. திருகாமு மற்றும் துளசியம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் தான் கவிஞர் வாணிதாசன். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு. மேலும் இவர் ""ரமி"" என்ற புனைப் பெயர் கொண்டவர்.  * வாணிதாசன்  பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக் கல்வி பெற்றவர்  * வாணிதாசனின் பாடல்கள் சாகித்திய அகாதெமி வெளியிட்ட "தமிழ் கவிதை களஞ்சியம்" என்ற நூலிலும் , தென் மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட  "புதுத்தமிழ் கவிமலர்கள்" என்ற நூலிலும்    மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.  * வாணிதாசன் "தமிழ் பிரெஞ்சு கையகர முதலி " என்ற நூலை வெளியிட்டார்.  * பிரெஞ்சுக் குடியரசு தலைவர் இவருக்கு "செவ்வா லியர் விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது" * வாணிதாசனின் முதல் பாடல் பாரதி நாள். 2. வாணிதாசனின் சிறப்பு பெயர்கள் : * புதுமைக...

மரபுக் கவிஞர் - முடியரசன் வாழ்க்கை வரலாறு

முடியரசன் வாழ்க்கை வரலாறு: முடியரசன் வாழ்ந்த காலம் : அக்டோபர் 7 -1920 முதல் டிசம்பர் 3 1998. முடியரசன் பிறந்த ஊர் : பெரியகுளம் (தேனி மாவட்டம்) முடியரசனின் பெற்றோர்கள்: தந்தை (சுப்பராயலு), தாய் (சீதாலட்சுமி) முடியரசனின் இயற்பெயர் : துரைராசு  முடியரசன் செய்த பணி : காரைக்குடியில் உள்ள மீ.சு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். முடியரசன் இயற்றிய நூல்கள் மற்றும் இலக்கிய பங்களிப்பு: 1. முடியரசன் கவிதைகள் 2. காவியப் பாதை 3. கவியரங்கில் முடியரசன் 4. பூங்கொடி 5. தமிழ் இலக்கணம் 6. வீரகாவியம் 7. பாடும் குயில்கள்  8. ஊன்றுகோல் 9. நெஞ்சு பொறுக்கவில்லையே 10. மனிதனை தேடுகின்றேன் 11. சீர்திருத்த செம்மல் வை.சு. சண்முகனார் 12. தமிழ் முழக்கம் 13. பாடுங் குயில்  14. நெஞ்சிற் பூத்தவை 15. ஞாயிறும் திங்களும் 16. வள்ளுவர் கோட்டம் 17. புதியதொரு வீதி செய்வோம்  18. எக்கோவின் காதல்  19. அன்புள்ள பாண்டியனுக்கு  20. அன்புள்ள இளவரசனுக்கு 21. தாய்மொழி காப்போம் 22. எப்படி வளரும் தமிழ் 23. மனிதரைக் கண்டுகொண்டேன் 24. இளம் பெருவழுதி 25. பாட்டு பறவையின் வாழ்க்கை பயணம் கவிஞர் ம...