Skip to main content

பிரமிள் (தருமு சிவராம்) புதுக்கவிதை கவிஞர் வாழ்க்கை குறிப்பு....

 புதுக்கவிதை - தருமு சிவராம்(பிரமிள்):


தோற்றம்: 20-04-1939                              மறைவு: 06-01-1997

சிவராமலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட தருமு சிவராம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலையைச் சேர்ந்தவர். எழுபதுகளின் ஆரம்பத்திலேயே தமிழ்நாடு வந்து விட்டார் பிறகு பெரும்பாலான வாழ்நாளை சென்னையிலேயே கழித்தார். 

தருமு சிவராம் சிறப்புப் பெயர்:

1. பானு சந்திரன்

2. பிரமிள்

3. பானு அரூப் 

4. அரூப் சிவராம் 

5. படிமக் கவிஞர்

6. ஆன்மீக கவிஞர்


தருமு சிவராமு எழுதிய இதழ்கள்:

1. தருமு சிவராமு "எழுத்து" எனும் சி. சு. செல்லப்பாவின்  பத்திரிக்கைகளில் முதன்முதலில்  கவிதைகளையும் விமர்சனங்களையும் எழுத ஆரம்பித்தார்.

2. மௌனியின்  கதை தொகுப்பிற்கு முன்னுரை எழுதி உள்ளார். 


தருமு சிவராமு பற்றிய முக்கிய குறிப்புகள்:

1. இலங்கையில் பிறந்த இவர் தமிழினத்தின் எழுத்தாளர் ஆவார்.

2. தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர், ஓவியர் என்ற பல்வேறு வகையில் இவரை அழைக்கப்படுகின்றனர்.

3.புதுக்கவிதை முன்னோடிகளின் முக்கியமாக ஒருவராகவும் கருதப்படுகிறார்

4. புத்தகங்களிலும், இதழ்களிலும்   தருமு சிவராமு வரைந்த ஓவியங்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5. 1971 இல் "கண்டி பிரான்சு நட்புறவு" கழகத்தில் இவரது ஓவியக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது.

6. இவர் ஆரம்ப கால கல்வி மட்டும் ராமகிருஷ்ண மடம் நடத்திய இரவு பாடசாலையில் படித்தார்.


7. களிமண் சிற்பங்கள் செய்வதில் சிறந்தவராக தருமு சிவராமு விளங்கினார்.

8. அடிக்கடித் தன் பெயரை மாற்றி புதுப்பித்து கொண்டிருப்பவர் தருமு சிவராம்.

9. இவரது கவித்துவம் 2000ம் ஆண்டு தமிழ் கவிதை வரலாற்றில் தனித்து  உயர்ந்து உயர்ந்து திகழ்ந்தது. 

10. ஆன்மீக எழுத்துக்கள் குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் நூல்கள் தெளிவாக எழுதியவர் இவர்தான்.


தருமு சிவராமு பெற்ற விருதுகள்:

1. நியூயார்க்  விளக்கு அமைப்பு "புதுமைப்பித்தன் விருதை" இவருக்கு வழங்கியது. 

2. கும்பகோணம் சிலிக்குயில் "புதுமை பித்தன் வீறு" விருதை வழங்கியது.


தருமு சிவராமு பற்றி புலவர்கள் கூற்று:

1. பிரமில் விசித்திரமான படிமவாதி - சி. சு செல்லப்பா. 

2. உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர் - சி. சு செல்லப்பா. 

3. தமிழின் மாமேதை - ஜானகிராமன்.


தருமு சிவராமு எழுதிய கவிதை நூல்கள்:

1. கண்ணாடி உள்ளிருந்து

2. கைப்பிடியளவு கடல்

3. மேல்நோக்கிய பயணம்

4. பிரமிள் கவிதைகள் 

5. விடிவு 


தருமு சிவராமு எழுதிய  நாவல் நூல்கள்:

1. ஆயி 

2. பிரசன்னம் 


தருமு சிவராமு எழுதிய நாடக நூல்:

 நட்சத்திரவாசி 


தருமு சிவராமு எழுதிய உரைநடை நூல்:

மார்க்சும் மார்க்கீசியமும்  


தருமு சிவராமு எழுதிய சிறுகதை நூல்கள்:

1. கருடனுர்  ரிப்போர்ட் 

2. அங்குலிமாலா

3. சந்திப்பு

4. சாமுண்டி

5. கிசு கிசு

6. பாறை

7. நீலம் 

8. கோடாரி

9. அசரீரி

10. காடன் கண்டது 


தருமு சிவராமின் கவிதை பற்றிய விமர்சனங்கள்:

பௌதிக எதார்த்தத்தை மீறி நிதர்சனங்களை பற்றி விசாரயமான  பிரமிப்புகளின் வெளிப்பாடுகளே கவிதைகள். 


தருமு சிவராமின் சாதியைப் பற்றிய விமர்சனம்:

வைதீகம் நுழையும் இடத்தில் படைப்பூக்கம் விடைபெறும்  


தருமு சிவராமின் மேற்கோள்கள்:

* கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும் என்ற தலைப்பில் பாரதியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

* சாது அப்பாத்துரையின் தியான தாரா எனும் நூல் சிறந்த மெயில் வாழ்க்கை நெறிநூல் ஆகும்.


தருமு சிவராமின் மறைவு:

1997 இல் வேலூர் அருகில் உள்ள  கரடிகுடியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.












Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...