Skip to main content

உடுமலை நாராயணகவி (தமிழ் திரைப்பட பாடலாசிரியர்) - வாழ்கை வரலாற்று குறிப்பு

 உடுமலை நாராயணகவி 


தோற்றம்: செப்டம்பர் 25, 1899

மறைவு   : மே 23, 1981

உடுமலை நாராயணகவி செப்டம்பர் மாதம் 25ஆம் நாள் 1899 ஆம் ஆண்டு பிறந்தார்.  முன்னாள் தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார். விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர் இவர். முத்துசாமி கவிராயரின் மாணவரான இவர். ஆரம்ப காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார். இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும் தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன. 1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்து நாராயணகவி என்று பெயர்  சூட்டிக்கொண்டு கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டார்.

ஆரம்ப காலத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி மகாகவி பாரதியாரின் நட்புக்கு பின்னர் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பியவர். கலைவாணர் என். எஸ் கிருஷ்ணனுக்கு  கிந்தனார்  "கதாகாலட்சேபம்" எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர்.

அறிஞர் அண்ணா எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி போன்ற படங்களுக்கும் கலைஞர் மு கருணாநிதி கதை, வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா திரைப்படங்களுக்கும் பிரபாவதி, காவேரி, சொர்க்கவாசல், தூக்குத்தூக்கி, தெய்வப்பிறவி, மாங்கல்ய பாக்கியம், சித்தி, எங்கள் வீட்டு மகாலட்சுமி, ரத்தக்கண்ணீர், ஆதிபராசக்தி, தேவதாஸ் போன்ற படங்களுக்கு பாடல் எழுதியவர். 

ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர். நேர்மையும், திறமையும் மிக்கவர் எவ்வகையிலும் தலை வணங்காத உறுதி உடையவர். பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர் திரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர்.

உடுமலை நாராயணகவி இளமை வரலாறு:

1899ம் ஆண்டில் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள பூவிளைவாடி எனும் பூளவாடி சிற்றூரில் கிருஷ்ணசாமி, முத்தம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நாராயணசாமி என்பதாகும்.

இளம் வயதிலேயே தம் தாய் தந்தையாரை இழந்த நாராயணசாமி வறுமையில் உழன்றர். தனது தமையனார் தனுஷ்கோடியின் ஆதரவில் வாழ்ந்தார். சுற்றுப்புற கிராமத்திற்கு தீப்பெட்டிகளை சுமந்து சென்று விற்றார் இதனால் ஒரு நாளைக்கு 25 பைசா வருமானம் கிடைத்தது. நான்காம் வகுப்போடு தனது பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்ட நாராயணசாமி கிராமியக் கலைகளான புரவியாட்டம், சிக்குமேளம், தம்பட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில்கும்மி போன்ற கொங்கு மண்ணின் கலைகளை மிகுந்த ஈடுபாடு கொண்டு ஆர்வத்துடன் பங்கேற்றார்.


உடுமலை நாராயணகவியின் விடுதலைப் போரில் ஈடுபாடு:

மதுரையில் நாராயணசாமி பல நாடகங்களுக்கு  உரையாடல்களும் பாடல்களும் எழுதினார். அதேசமயத்தில் தேசத்தில் சுதந்திர வேள்வித்தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது அப்போது தன் பங்கான ஏராளமான தேசிய உணர்வு பாடல்களை எழுதி அன்றைய மேடையில் தோன்றும் முழங்க வைத்தார். 


உடுமலை நாராயணகவியின் திராவிட இயக்க தொடர்பு:

இவர் மதுரையில் வாழ்ந்த போது அங்கு முகாமிட்டிருந்த டி. கே. எஸ் நாடக குழுவினரோடு ஏற்பட்ட தொடர்பால் என். எஸ் கிருஷ்ணன் உடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. கலைவாணர் தொடர்பால் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், முதலிய திராவிட இயக்க தலைவர்களின் நட்பு கிடைத்தது இவருக்கு. அதனால் திராவிடர் இயக்கப்படும் பகுத்தறிவு பார்வையும் உடுமலை நாராயணகவி கிடைத்தன. 


உடுமலை நாராயணகவியின் திரையுலக பயணம்:

இயக்குனர் ஏ. நாராயணன் உடுமலை நாராயணகவி யை கிராமபோன் கம்பெனிக்கு பாட்டு எழுதி தர வருமாறு சென்னைக்கு அழைத்தார். அதன் மூலம் திரைப்பட பாடல் உலகிலும் உடுமலை நாராயணகவி தன் முதல் அடியெடுத்து வைத்தார். உடுமலை நாராயணகவி முதன் மதலாக கவிதை எழுதிய திரைப்படம் "சந்திரமோகன்" அல்லது சமூகத் தொண்டு ஆகும்.

இவரின் திறமையை கண்டு "கவிராயர்" என திரையுலகத்தினர் அழைக்கப்பட்ட இவரிடம் பாடல்களை பெற அந்நாளில் திரைப்பட தயாரிப்பாளர்கள் நடையாய் நடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் புகழ்பெற்ற கவிஞர் பாபநாசம் சிவன் ஐ விட அதிகமான பாடல்களை எழுதிய "நாராயணகவிராயர்" ஆவார். 

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன் போன்றோர் இவருக்குப் பின்னர் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைக்கு இவரால் எழுதப்பட்ட பாடல்கள் கருத்துக் கருவூலமாக இருந்தது.

  புதிய யுத்திகளை கையாண்ட நாராயணகவி உழைப்பாளர்களை பற்றியும் ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார். தமிழ் திரைப்படத்தில் அறிவை புகுத்தி மக்களை பண்பட வைத்தவர். நல்ல செய்திகளை மட்டுமே நாட்டுக்கு சொல்லி உலகை உயர்த்த பாடுபட்டவர் என்ற பெருமைக்கு உரியவர் ஆவார். 


உடுமலை நாராயணகவி எழுதிய சில திரைப்பட பாடல் வரிகள்:

கா... கா... கா...(பராசக்தி)

அந்தக்காலம்  (நல்லதம்பி ,1949, பாடியவர் என். எஸ். கிருஷ்ணன்) 

நல்ல, நல்ல நிலம் பார்த்து நாளும்  விதை விதைக்கணும் (விவசாயி -1967)

1954இல் ரத்தக்கண்ணீர் படத்தில் இவர் எழுதிய "குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது??

ஒண்ணுலஇருந்து 20 (முதல் தேதி, 1955, இசை: ஜி. ராமநாதன், பாடியவர் என். எஸ் கிருஷ்ணன்) 

1956 ஆம் ஆண்டு வெளியான "மதுரை வீரன்" படத்தில் உழைப்பவர்களுக்கு என பாடிய "சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்; சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்" போன்ற பாடல்கள் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.


உடுமலை நாராயணகவி திரைப்படத்துறையில் பாடல் எழுதிய திரைப்படங்கள்:

1. வேலைக்காரி

2. ஓர் இரவு

3. ராஜகுமாரி

4. நல்லதம்பி

5. பராசக்தி

6. மனோகரா

7. பிரபாவதி

8. காவேரி

9. சொர்க்கவாசல்

10. தூக்குத்தூக்கி

11. தெய்வப்பிறவி

12. மாங்கல்ய பாக்கியம்

13. சித்தி

14. எங்கள் வீட்டு மகாலட்சுமி

15. ரத்தக்கண்ணீர்

16. ஆதிபராசக்தி

17. தேவதாஸ்


உடுமலை நாராயண கவியின் சிறப்புகள்:

"கலைமாமணி" எனும் பட்டம் பெற்றார்.

இந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் 31.12.2008 இல் இந்திய அஞ்சல் துறை அவர் நினைவாக  "அஞ்சல்தலை" வெளியிடப்பட்டது.


உடுமலை நாராயணகவியை தமிழ்நாடு அரசு எவ்வாறு கௌரவப்படுத்தியது:

தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த கோயமுத்தூர் மாவட்டம்(தற்போது திருப்பூர் மாவட்டம்), உடுமலைப்பேட்டையில் உடுமலை நாராயணகவி நினைவை போற்றும் வகையில் "மணிமண்டபம்" அமைத்துள்ளது. 

இங்கு உடுமலை நாராயணகவியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. 


Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...