Skip to main content

Posts

Showing posts from January, 2021

விக்கிரம சோழன் உலா - ஒட்டக்கூத்தர்

  விக்கிரம சோழன் முதலாம் குலோத்துங்கனுக்கும், இரண்டாம் ராஜேந்திர  சோழனின் மகள் மதுராந்திக்கும் நான்காவது மகனாக பிறந்தவர் "விக்கிரம சோழன்" ஆவார். மூத்தவர்களை விட்டுு இவனே சோழ ராஜ்யத்தின் அரசனாக கங்கைகொண்ட சோழபுரத்தில் முடிசூட்டப்பட்டான் . பெரும்பாலும் இவன் ஆட்சியை போர்் இன்றியே அமைந்துள்ளது. விக்கிரம சோழன் உலா இயற்றியவர் ஒட்டக்கூத்தர் ஆவார். மேலும் இந் நூலின் அமைப்பு பற்றிிி சற்று விரிவாக பின்வருமாறுு காண்போம். விக்கிரம சோழனின் வரலாறு: விக்ரம சோழனின் தந்தை - முதலாம் குலோத்துங்க சோழன். முன்னவன்- முதலாம் குலோத்துங்க சோழன். பின்னவன்- இரண்டாம் குலோத்துங்க சோழன். விக்ரம சோழன் ஆட்சி செய்த நகரம் - கங்கைகொண்ட சோழபுரம். விக்கிரம சோழன் பிறந்த இடம்- கங்கைகொண்ட சோழபுரம். விக்கிரம சோழன் இறந்த இடம்- கங்கைகொண்ட சோழபுரம். விக்கிரம சோழன் வாழ்ந்த காலம்- கிபி  1118 முதல் 1136 வரை. விக்ரம சோழனை பற்றி கூறும் வரலாற்று சிறப்புகள்: * வேங்கிப் போர் * கலிங்கப் போர் * கங்காவடிப் போர்  * தேச அளவு * திருசிற்றம்பலம் * தியாக சமுத்திரம். விக்ரமசோழன் உலா நூல் அமைப்பு: விக்கிரம சோழன் உலா 342 கண்ணிக...

நந்திக்கலம்பகம் - மூன்றாம் நந்திவர்மன்

  நந்திக் கலம்பகத்தின் வரலாறு: கிபி 3 நூற்றாண்டு  முதல் கிபி ஒன்பதாம் நூற்றாண்டு வரை  தமிழகத்தை ஆண்டனர் பல்லவர்கள். இவர்கள் தமிழ் மொழியை வளர்த்துு தமிழ் மொழியைை ஆதரித்தனர்். ஆனால் தமிழ் மொழியை ஆதரித்து வளர்த்த பல்லவ மன்னர்களில் மூன்றாம் நந்திவர்மன் குறிப்பிடத்தக்கவர். ஆகையால் மூன்றாம் நந்திவர்மன் மீது பாடப்பட்டதே "நந்திக்கலம்பகம்" ஆகும். இந்நூல் மற்ற நூல்களை போல அல்லாமல் வரலாற்றில் மிகவும் முக்கியம் வாய்ந்த நூலாக திகழ்கிறது. "உள்ளதை உள்ளவாறு கூறுவது வரலாறு", உள்ளதை உயர்த்தி கூறுவது "இலக்கியம்" ஆகும். நந்திகலம்பகத்தில் மூன்றாம் நந்திவர்மனின் அரசியல் தொடர்பான செய்திகள் அதிகம் மிகுந்துள்ளது. இலக்கியத்தில் மூன்றாம் நந்திவர்மனின் வரலாற்றுச் செய்திகளை புறத்துறைகள் வாயிலாகவும், தலைவி தன் மகிழ்ச்சியை கூறுவதாக அமைந்து அகப்பொருள் சுவையுடன் விளங்குகிறது. நந்திக்கலம்பகத்தில் மூன்றாம் நந்திவர்மனின் வரலாறு குறித்த கல்வெட்டு, செப்பேடு செய்திகளும்,  நந்திகலம்பகத்தில் உள்ள செய்திகளும் ஒன்றாக இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நந்திக் கலம்பகத்தில் மூன்றாம் நந்தி...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

முத்தொள்ளாயிரம்

 முத்தொள்ளாயிரம் என்பது ஒரு சுவையான கவிதை தொகுப்பு ஆகும். மூவேந்தர்கள் ஆன சேரர், சோழர், பாண்டியர் இம்மூன்று மன்னர்களைப் பற்றியும் மற்றும் அந்நாட்டின் வளம்,போர்த்திறன், போர் நெறி, வள்ளல் தன்மை, பண்பு நலன்கள், நாட்டின் இயற்கை வளங்கள், படை யானைகளின் வலிமை, வேல் முதலிய கருவிகளின் சக்தி ஆகியவைை பற்றியும், அந்த மன்னர்களின் பால் ஒரு தலை காதல் கொண்டு உள்ளம் வாடுகின்ற பெண்ணின் உணர்ச்சிகளை பற்றி சொல்லும் சொல் ஓவியங்கள் பற்றியும் முத்தொள்ளாயிரம் எனும் சொல்லிற்கேற்ப 2700 பாடல்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் பலவித கால அழிவிற்குப் பின்னர் நமக்குக் கிடைத்துள்ளவை 108 பாடல்கள் மட்டுமே.  இவைகள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ளது. 21 பாடல்கள் சேர மன்னனைப் பற்றியும், 30 பாடல்கள் சோழ மன்னனைப் பற்றியும், 57 பாடல்கள் பாண்டிய மன்னனைப் பற்றியும் எடுத்துரைக்கின்றது. முத்தொள்ளாயிரம் நூல் அமைப்பு: வெண்பாவால் எழுதப்பட்ட நூல் முத்தொள்ளாயிரம். இந்நூல் மன்னர்களின் பெயர்களை குறிப்பிடாமல் சேரர், சோழர், பாண்டியர் எனப் பொதுவாக பாடுகிறது. மூன்று மன்னர்களை பற்றி பாடப்பட்டு 900 பாடல்களைக் கொண்ட...

கலிங்கத்துப்பரணி - ஜெயங்கொண்டார்.

  முதல் குலோத்துங்கச் சோழரின் அரசவைப் புலவராகத் திகழ்ந்த பரணிக்கோர் செயங்கொண்டார் என பலபட்டடை சொக்கநாத புலவரால் பாராட்டப்பட்ட மற்றும் இசையாயிரம், உலா மடல் ஆகிய நூல்களைைை இயற்றிய ஜெயங்கொண்டார் இயற்றிய நூலான   "கலிங்கத்துப்பரணி" பற்றிி சற்று விரிவாக இங்கே காணலாம். ஜெயங்கொண்டார் கிபி 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். பரணி என்பது ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற வீரனை புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்கு "பரணி என்று பொருள்". கலிங்கத்துப்பரணிிிிி 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகும். பரணி இலக்கியங்களில் தமிழில் தோன்றிய முதல் நூல் கலிங்கத்துப்பரணி ஆகும். கலிங்கத்துப்பரணி நூலமைப்பு: கலிங்க மன்னன் அனந்தப்பன் மண்மீது முதல் குலோத்துங்க சோழன் போர் தொடுத்து வெற்றி பெற்றான். வெற்றியை பாராட்டி பாடும் நூல் மேலும் தோல்வியுற்ற கலிங்க நாட்டின் பெயரால் அமைந்துள்ளதால் இந்நூலினை கலிங்கத்துப்பரணி என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்நூலில் 599 தாழிசைகள் உள்ளன. ஜெயங்கொண்டார் இன் சமய காலப் புலவரான ஒட்டக்கூத்தர் கலிங்கத்துப் பரணியை "தென்தமிழ் தெய்வ பரணி"  என்று பாராட்டி உள்ளார். செயங்...