Skip to main content

நந்திக்கலம்பகம் - மூன்றாம் நந்திவர்மன்

 


நந்திக் கலம்பகத்தின் வரலாறு:

கிபி 3 நூற்றாண்டு முதல் கிபி ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆண்டனர் பல்லவர்கள். இவர்கள் தமிழ் மொழியை வளர்த்துு தமிழ் மொழியைை ஆதரித்தனர்். ஆனால் தமிழ் மொழியை ஆதரித்து வளர்த்த பல்லவ மன்னர்களில் மூன்றாம் நந்திவர்மன் குறிப்பிடத்தக்கவர். ஆகையால் மூன்றாம் நந்திவர்மன் மீது பாடப்பட்டதே "நந்திக்கலம்பகம்" ஆகும்.

இந்நூல் மற்ற நூல்களை போல அல்லாமல் வரலாற்றில் மிகவும் முக்கியம் வாய்ந்த நூலாக திகழ்கிறது."உள்ளதை உள்ளவாறு கூறுவது வரலாறு", உள்ளதை உயர்த்தி கூறுவது "இலக்கியம்" ஆகும். நந்திகலம்பகத்தில் மூன்றாம் நந்திவர்மனின் அரசியல் தொடர்பான செய்திகள் அதிகம் மிகுந்துள்ளது.

இலக்கியத்தில் மூன்றாம் நந்திவர்மனின் வரலாற்றுச் செய்திகளை புறத்துறைகள் வாயிலாகவும், தலைவி தன் மகிழ்ச்சியை கூறுவதாக அமைந்து அகப்பொருள் சுவையுடன் விளங்குகிறது.


நந்திக்கலம்பகத்தில் மூன்றாம் நந்திவர்மனின் வரலாறு குறித்த கல்வெட்டு, செப்பேடு செய்திகளும், நந்திகலம்பகத்தில் உள்ள செய்திகளும் ஒன்றாக இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நந்திக் கலம்பகத்தில் மூன்றாம் நந்திவர்மனின் "கொடைச் சிறப்பு, தமிழ் பற்று, சிவபெருமான் மீது கொண்ட பக்தி, வீரம், அறிவு போன்ற பண்புகளுடன் நந்திக்கலம்பகத்தில் மேலும் போற்றப்படுகிறது.


நந்திக்கலம்பகம் மேற்பார்வை:

தமிழில் உருவான கலம்பக இலக்கியங்களில் ஒன்று தான் நந்திக்கலம்பகம். இது காஞ்சியைத் தலைநகரகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் "தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன்"குறித்து பாடப்பட்டுள்ளது. மூன்றாம் நந்திவர்மனின் காலம் கிபி-825-850 ஆகையால் நந்திக் கலம்பகத்தின் காலம் கிபி 9 ஆம் நூற்றாண்டு ஆகும். நந்திக்கலம்பகத்தில் காஞ்சி, மல்லை (மகாபலிபுரம்), மயிலை (மயிலாப்பூர்) ஆகிய நகரங்கள் பற்றி இந்நூலில் சிறப்பாக போற்றப்பட்டுள்ளதுு.

ஆனால் சிறந்த சொற்சுவை, பொருட்சுவையோடு விளங்கிய இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


நந்திக்கலம்பகம் நூல் அமைப்பு:

கடவுளுக்கு 100, முனிவருக்கு 95, அரசருக்கு 90, அமைச்சருக்கு 70, வணிகருக்கு 50, வேளாளருக்கு 30 எனும் அளவில் கலம்பக பாடல்கள் அமைய வேண்டும் என்பது விதி. ஆனால் கலம்பகத்தில் மேற்கூறிய அளவுகளை மீறி பாடப்பட்டுள்ளது. நந்திக் கலம்பகத்தில் அகம், புறம் ஆகிய துறைகள் கலந்து வர அமையப்பெற்றுள்ளது. ஆனால் இக் கலம்பகத்தில் அகத்திணைகள் பெருந்தன்மையாகவும், புறத்திணைகள் சிறு தன்மையாகவும் உள்ளது. நந்திக்கலம் மொத்தம் 144 பாடல்கள் உள்ளன. ஆனால் அரசர் மீதுு பாடப்படும் கலம்பக பாடல் 90 பாடல்கள் இருக்க வேண்டும் என்பது நியதி. எனவே இதில் உள்ள 54பாடல்கள் பிற்காலத்தில் எழுதி சேர்க்கப்பட்டு இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.


நந்திக்கலம்பகம் கூறும் செய்திகள்:

இந்நூலில் நந்திவர்மனின் தெள்ளாறு வெற்றியைப் பற்றிக் கூறும் 16 பாடல்கள் சிறப்பாக கூறுகின்றன. கொற்ற வாயில் முற்றும், விரியலூர், வெள்ளாறு, தெள்ளாறு போன்ற பல்வேறு போர்க்களங்கள் பற்றிி கூறும் அளவுக்கு சிறப்பு மிக்கது.


நந்திக் கலம்பகத்தில் இடம் பெறும் முக்கிய வினா-விடை தொகுப்பு:

* தமிழில் உருவான முதல் கலம்பகம் நந்திக்கலம்பகம்.

* நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன்.

* நந்திக் கலம்பகத்தின் காலம் கிபி 9 ஆம் நூற்றாண்டு.

* கலம்பகம் பிரித்து எழுதுக கலம்+பகம்.

* கலம் என்றால் 12 என்று பொருள்.

* பகம் என்றால் பகுதி அல்லது பாதி என்று பொருள்.

* கலம்பகம் என்ற பெயர் வரக் காரணம் 18 இலக்கிய உறுப்புகள் சேர்ந்து வருவது கலம்பகம் ஆகும்.


* கலம்பகத்தின் உறுப்புக்கள்

1. புய வகுப்பு 

2.தவம்

3. அம்மானை

4. வண்டு

5. ஊர்

6. ஊசல் 

7. பாண் 

8. மதங்கு 

9.மடக்கு 

10. கைக்கிளை

11. சிந்து

12. கிளி

13. மறம்

14. காலம்

15. இரங்கல்

16. சம்பிரதம்

17. கார்

18. தூது 

தமிழுக்காக உயிரை விட்ட பல்லவ மன்னன் "நந்திவர்மன்"













Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...