Skip to main content

விக்கிரம சோழன் உலா - ஒட்டக்கூத்தர்

 


விக்கிரம சோழன் முதலாம் குலோத்துங்கனுக்கும், இரண்டாம் ராஜேந்திர  சோழனின் மகள் மதுராந்திக்கும் நான்காவது மகனாக பிறந்தவர் "விக்கிரம சோழன்"ஆவார். மூத்தவர்களை விட்டுு இவனே சோழ ராஜ்யத்தின் அரசனாக கங்கைகொண்ட சோழபுரத்தில் முடிசூட்டப்பட்டான். பெரும்பாலும் இவன் ஆட்சியை போர்் இன்றியே அமைந்துள்ளது.

விக்கிரம சோழன் உலா இயற்றியவர் ஒட்டக்கூத்தர் ஆவார். மேலும் இந் நூலின் அமைப்பு பற்றிிி சற்று விரிவாக பின்வருமாறுு காண்போம்.


விக்கிரம சோழனின் வரலாறு:

விக்ரம சோழனின் தந்தை - முதலாம் குலோத்துங்க சோழன்.

முன்னவன்- முதலாம் குலோத்துங்க சோழன்.

பின்னவன்- இரண்டாம் குலோத்துங்க சோழன்.

விக்ரம சோழன் ஆட்சி செய்த நகரம் - கங்கைகொண்ட சோழபுரம்.

விக்கிரம சோழன் பிறந்த இடம்- கங்கைகொண்ட சோழபுரம்.

விக்கிரம சோழன் இறந்த இடம்- கங்கைகொண்ட சோழபுரம்.

விக்கிரம சோழன் வாழ்ந்த காலம்- கிபி  1118 முதல் 1136 வரை.



விக்ரம சோழனை பற்றி கூறும் வரலாற்று சிறப்புகள்:

* வேங்கிப் போர்

* கலிங்கப் போர்

* கங்காவடிப் போர் 

* தேச அளவு

* திருசிற்றம்பலம்

* தியாக சமுத்திரம்.


விக்ரமசோழன் உலா நூல் அமைப்பு:

விக்கிரம சோழன் உலா 342 கண்ணிகளால் அமைந்தது. கண்ணிி என்பது இரண்டு வரிகளை உடையது என்பதன் பொருள். இந்நூலில் இடம்பெற்றுள்ள முதல் 43 கண்ணிகளில் விக்கிரம சோழனின் முன்னோர்களின் பெருமையும், விக்கிரம சோழன் பிறப்பு, பள்ளி எழுதல், இறைவனை வணங்குதல் போன்றவற்றைைைக் குறிப்பிடுகின்றது.

44 முதல் 51 வரையிலான கண்ணிகளில் விக்கிரம சோழன் அலங்காரம் செய்வது பற்றி கூறுகிறது.

52 முதல் 60 வரையிலான கண்ணிகளில் விக்கிரம சோழனின் பட்டத்து யானையின் பெருமையை கூறுகிறது.

90-வது கன்னி வரை உலாவில் சூழ வரும் சிற்றரசர்கள் ஆகியோர்களின் விவரங்கள் கூறப்பட்டுள்ளது.

91 முதல் 112வது கண்ணிவரை கூடவரும் பரிவாரங்கள் பற்றியும், அவர்கள் கூறுவது பற்றியும் இடம்பெற்றுள்ளது.

பின்னர் 113 முதல் 7 வகை பெண்களின் அழகைப் பற்றியும், அவர்கள் விக்கிரம சோழன் மீது கொண்டுள்ள காதல் பற்றியும் கூறும் கண்ணிகள் தனித்தனியாக இடம்பெற்றுள்ளன.


மூவருலா என்பது யாது:

விக்ரமசோழன் உலா உலா எனும் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும். இன்று சோழ மன்னர்களின் அவையில் அவைக்களப் புலவராகத் திகழ்ந்த ஒட்டக்கூத்தர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது.

இவர் இயற்றிய விக்கிரம சோழன் உலா உடன், குலோத்துங்க சோழன் உலா மற்றும் ராஜ ராஜ சோழன் உலா இம் மூன்றும் சேர்த்து "மூவருலா"என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய மூவர் உலாா வில்் விக்கிரம சோழனுலா மிக சிறந்ததாக கருதப்படுகிறது. விக்ரமசோழன் உலா கிபி 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. 


விக்ரமசோழன் உலா முக்கிய வினா-விடை தொகுப்பு:

* உலா என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.

* உலாவிற்கு அழைக்கப்படும் வேறு பெயர் பெண்பாற் கைக்கிளை.

* உலா இலக்கியத்தை குறிக்கும் தொல்காப்பிய வரிகள் "ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப"

* உணவிற்கு வழங்கும் வேறு பெயர்கள் உலா புறம், பவானி உலா, பவானி, பெண்பாற் கைக்கிளை.

* பாட்டுடைத் தலைவன் வீதியில் உலா வர அவனை கண்டு ஏழுுவகை பெண்களும் காதல் கொண்டு பாடப்படும் நூல் உலா.

* ஏழு வகை மகளிர் பெயர்

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம்பெண்.

* தமிழில் தோன்றிய முதல் உலா திருக்கயிலாய ஞான உலா. 

* திருக்கயிலாய ஞான உலா வின் ஆசிரியர் சேரமான் பெருமான் நாயனார் ஆவார்.

* ஆதி உலா என அழைக்கப்படும் நூல் திருக்கயிலாய ஞான உலா.

* உலாவில் இத்தகைய பருவம் பாடுவது மிகவும் கடினம் பெதும்பைப் பருவம்.

* விக்கிரம சோழன் உலாவின் ஆசிரியர் ஒட்டக்கூத்தர்.

* ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் கூத்தர்.

* ஒட்டக்கூத்தர் இயற்றிய வேறு நூல்கள்

ட்டி எழுபது, 4000 கோவை, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், தக்கத்து பரணி, அரும்பைத் தொள்ளாயிரம் 

* ஒட்டக்கூத்தரின் வேறு பெயர்கள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசன், கால கவி, ஷர் வஞ்சக கவி.

* தியாக சமுத்திரம் அனங்கன் கண் என்று அழைக்கப்படுபவர் விக்ரமாதித்தன்.

* சிதம்பரம் கோவிலில் உள்ள புறமதிலுக்கு யாருடைய பெயர் விக்கிரம சோழன் பெயர்சூட்டப்பட்டுள்ளது.

* திருவரங்க நாதர் கோவிலில் ஐந்தாவது மதிலை கட்டியவர் விக்கிரம சோழன்.







Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...