Skip to main content

Posts

Showing posts from April, 2021

பாரதியார் வாழ்க்கை வரலாறு...

மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு: சுப்பிரமணிய பாரதி டிசம்பர்  11 ம் நாள் 1882 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் எனும் ஊரில் பிறந்தார். சுப்பிரமணிய பாரதி ஒருு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி இன்னும் பல்வேறு கோணங்களில் பிரபலமானார். இவரை மகாகவி என்றும் பாரதியார் என்றும் அழைக்கப்படுகிறார்கள். பாரதியார் தமிழில் கவிதையிலும், உரைநடையிலும் புலமை பெற்றவர். நவீன கவிதைகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர். மகாகவி பாரதியார் தம் எழுத்துக்கள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி "கலைமகள் எனும் பொருள்படும் பாரதி எனும் பட்டத்தை வழங்கினார்".  பாரதியார் எழுதிய நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டன. **இந்தியாவில் முதன்முறையாக நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல் பாரதியாருடைய இலக்கிய நூலாகும். **பாரதியாரின் வாழ்க்கை குறிப்பு: சுப்பிரமணியன் மற்றும் சுப்பையா எனும் புனைப்பெயர் கொண்ட மகாகவி பாரதியார் டிசம்பர் 11 ,1882 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எ...

மாநில அரசு நிர்வாகம் - செயல்பாடு

மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது: நம் நாட்டில் மத்திய மற்றும் மாநில அரசு என இரண்டு வகை அரசாங்கங்கள் நடைமுறையில் உள்ளன. இந்தியாவில் 28 மாநிலங்கள் தற்போது உள்ளது. மேலும் ஒவ்வொரு மாநிலமும் தனது நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள தனக்கே என ஒரு அரசை கொண்டுள்ளது. அத்தகைய வகையில் மாநில அரசு மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம், மற்றும் மாநில நீதித்துறை  எனும் மூன்று பிரிவுகள் உள்ளன. மாநில நிர்வாகம் மாநில ஆளுநர் மற்றும் மாநில முதலமைச்சரின் தலைமையில் செயல்படுகிறது. மாநில நிர்வாகம்: *ஆளுநர் *முதலமைச்சர் ஆளுநர்: * மாநில அரசின் தலைவராக மாநில ஆளுநர் இருப்பார் என இந்திய அரசமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது. மாநில ஆளுநர் இந்திய குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார். * மாநில ஆளுநரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஆளுநரின் பதவிக் காலம் முடியும் முன்பே  அவரை ஆளுநரின் பதவிலிருந்து குடியரசுத் தலைவரால் நீக்கப்படலாம். அல்லது தாமாக முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்யலாம். ஆளுநரின் பதவிக் காலம் நீட்டிக்கப்படலாம் அல்லது வேறு மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யலாம். * ஆனால் மாநில அரசாங்கம் ஆளுநரை ஆளுநர் பதவிய...

சமய முன்னோடிகள் - பெயர்கள்

  சமய முன்னோடிகள் பின்வருமாறு: 1. அப்பர்( திருநாவுக்கரசர்) 2. சம்பந்தர் 3. சுந்தரர் 4. மாணிக்கவாசகர் 5. திருமூலர் 6. குலசேகர ஆழ்வார் 7. ஆண்டாள் 8. சீத்தலை சாத்தனார் 9. எச். ஏ. கிருஷ்ணப் பிள்ளை 10. உமறுப் புலவர் . * திருநாவுக்கரசர் (அப்பர்) வேறு பெயர்கள்: 1. மருள்நீக்கியார் ( இயற்பெயர்) 2. தருமசேனர் (சமண சமயத்தில் இருந்த பொழுது) 3. அப்பர் (ஞானசம்பந்தர்) 4. வாகீசர் 5. தாண்டக வேந்தர் 6. ஆளுடைய அரசு 7. திருநாவுக்கரசர் (இறைவன் அளித்த பெயர்) 8. சைவ உலகின் செங்ஞாயிறு  * திருஞானசம்பந்தர் வேறு பெயர்கள்: 1. ஆளுடைய பிள்ளை (இயற்பெயர்) 2. திருஞானம் பெற்ற பிள்ளை 3. காழி நாடு உடைய பிள்ளை 4. ஞானசம்பந்தர் 5. சத்புத்திரன்  * சுந்தரர் வேறு பெயர்கள்: 1. வன் தொண்டர் 2. தம்பிரான் தோழர் 3. சேரமான் தோழர் 4. திருநாவலூரார் 5. ஆலால சுந்தரர் 6. ஆளுடைய நம்பி  * மாணிக்கவாசகர் வேறு பெயர்கள்: 1. திருவாதவூரார் 2. தென்னவன் பிரம்மராயன் 3. அழுது அடியடைந்த அன்பர் 4. வாதவூர் அடிகள் 5. பெருந்துறை பிள்ளை 6. அருள் வாசகர் 7. மாணிக்கவாசகர்  * குலசேகர ஆழ்வார் வேறு பெயர்கள்; 1. கொல்லி காவலன் 2. கூடல் நாயக...

இரட்டுற மொழிதல் - சந்தக்கவி தமிழ் அழகர்.

  இரட்டுற மொழிதல் - சந்தக்கவி தமிழ் அழகர். இரட்டுற மொழிதல் : ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள்பட வருவது இரட்டுறமொழிதல் அணி எனப்படும். இதனை சிலேடை அணி எனவும் அழைக்கப்படலாம்.  செய்யுள்களிலும், உரைநடையிலும்,மேடைப் பேச்சிலும் இத்தகைய சிலேடை அணி பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டு : ஆடு - கதவு. செம்மொழி சிலேடை அணி: ஒரு சொல் பிடிபடாமல் தனித்து நின்று பல பொருள் தருவது செம்மொழி சிலேடை எனப்படும். பிரிமொழிச் சிலேடை அணி: சொற்றொடர் பல வகையாக பிரிக்கப்பட்டு பல பொருள் தருவது பிரிமொழிச் சிலேடை எனப்படும். சந்தக்கவி தமிழ் அழகர் ஆசிரியர் குறிப்பு:  இயற்பெயர் - சண்முகசுந்தரம். பிறந்த தேதி - 21 - 04 -1929. தந்தை பெயர் - வேலு. தாயார் பெயர் - வள்ளியம்மை. பிறந்த ஊர் - தூத்துக்குடி  மறைவு - 02 - 10 - 2015. சந்தக்கவி தமிழ் அழகர் பெற்ற விருதுகள் : * பாரதிதாசன் விருது  * கலைமாமணி விருது * சந்தக்கவி மாமணி விருது  * தமிழ் காவலர் * கவிஞானி * தமிழ் சுடர். இரட்டுற மொழிதல் - இரண்டு + உற + மொழிதல் + அணி எனப் பிரிக்கப்படும்.