இரட்டுற மொழிதல் - சந்தக்கவி தமிழ் அழகர்.
இரட்டுற மொழிதல் :
ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள்பட வருவது இரட்டுறமொழிதல் அணி எனப்படும்.
இதனை சிலேடை அணி எனவும் அழைக்கப்படலாம். செய்யுள்களிலும், உரைநடையிலும்,மேடைப் பேச்சிலும் இத்தகைய சிலேடை அணி பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு : ஆடு - கதவு.
செம்மொழி சிலேடை அணி:
ஒரு சொல் பிடிபடாமல் தனித்து நின்று பல பொருள் தருவது செம்மொழி சிலேடை எனப்படும்.
பிரிமொழிச் சிலேடை அணி:
சொற்றொடர் பல வகையாக பிரிக்கப்பட்டு பல பொருள் தருவது பிரிமொழிச் சிலேடை எனப்படும்.
சந்தக்கவி தமிழ் அழகர் ஆசிரியர் குறிப்பு:
இயற்பெயர் - சண்முகசுந்தரம்.
பிறந்த தேதி - 21 - 04 -1929.
தந்தை பெயர் - வேலு.
தாயார் பெயர் - வள்ளியம்மை.
பிறந்த ஊர் - தூத்துக்குடி
மறைவு - 02 - 10 - 2015.
சந்தக்கவி தமிழ் அழகர் பெற்ற விருதுகள் :
* பாரதிதாசன் விருது
* கலைமாமணி விருது
* சந்தக்கவி மாமணி விருது
* தமிழ் காவலர்
* கவிஞானி
* தமிழ் சுடர்.
இரட்டுற மொழிதல் - இரண்டு + உற + மொழிதல் + அணி எனப் பிரிக்கப்படும்.