பாரதியார் வாழ்க்கை வரலாறு...

மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு:

சுப்பிரமணிய பாரதி டிசம்பர்  11 ம் நாள் 1882 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் எனும் ஊரில் பிறந்தார். சுப்பிரமணிய பாரதி ஒருு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி இன்னும் பல்வேறு கோணங்களில் பிரபலமானார்.
இவரை மகாகவி என்றும் பாரதியார் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.


பாரதியார் தமிழில் கவிதையிலும், உரைநடையிலும் புலமை பெற்றவர். நவீன கவிதைகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.
மகாகவி பாரதியார் தம் எழுத்துக்கள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.
எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி "கலைமகள் எனும் பொருள்படும் பாரதி எனும் பட்டத்தை வழங்கினார்". 


பாரதியார் எழுதிய நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டன.


**இந்தியாவில் முதன்முறையாக நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல் பாரதியாருடைய இலக்கிய நூலாகும்.**பாரதியாரின் வாழ்க்கை குறிப்பு:
சுப்பிரமணியன் மற்றும் சுப்பையா எனும் புனைப்பெயர் கொண்ட மகாகவி பாரதியார் டிசம்பர் 11 ,1882 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்தார்.

பாரதியார் தந்தையின் பெயர் - சின்னசாமி ஐயர்.
பாரதியார் தாயின் பெயர் - இலக்குமி அம்மாள்.
1887 ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் இறந்த பிறகு பாரதியார் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.


பாரதி தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும் போது கவி திறமையையும் ஆற்றலையும் கொண்டுள்ள பாரதி 1897 ஆம் ஆண்டு தனது மனைவியான செல்லம்மாளை மணந்தார்.
1898 ஆம் ஆண்டு தனது தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையை அடைந்த பாரதி எட்டயபுர மன்னருக்கு தனக்கு பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் எழுதினார். பின்னர் எட்டையபுரம் அமைச்சரவையில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது.
பணி கிடைத்த சில காலத்திலேயே அப்பணியை விடுத்து 1898 முதல் 1902 வரை காசிக்குச் சென்று அங்கு சிறிது காலம் தங்கி இருந்தார்.
பின்னர் எட்டையபுரம் மன்னரால் அழைத்து வரப்பட்டு எட்டயபுர அரண்மனையில் வாழ்ந்தார். 

பின்னர்ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்த பாரதி 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் "விவேகபானு இதழில் வெளியானது".

பாரதியார் வாழ்நாள் முழுவதும் பல்வேறு காலகட்டங்களில் இதழ் ஆசிரியராகவும், மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.**பாரதியாரின் மொழித்திறன்:
பாரதியார் தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் வல்லமை பெற்றவர்.**பாரதியாரின் இலக்கிய பணி:
பாஞ்சாலி சபதம்:
இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி நிரூபித்துள்ளார் பாரதியார். பாஞ்சாலி சபதம் அழகிய இலக்கிய நயத்தையும், மிக அழகான கவிநயத்தையும் கொண்டுு தமிழின் அழியாக் காவியமாக பாண்டி சபதம் திகழ்கிறது. 

1. பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப்பட்டது.

2. பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் கொண்டது.

3. ஐந்து சுருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டுள்ளது.**பாரதியின் பெண்ணுரிமைப் போராளி:

""பெண்ணடிமை தீருமட்டும் பேசும்  
இத்திருநாட்டில்
மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே".
என பெண்ணுரிமையை ஏத்தினார்.
பெண்களின் கல்வியறிவு காக சட்டங்களை இயற்றவும் கனவு கண்ட பாரதி "சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள்  தகுதி படைத்தவர்கள் என்று கூறுகிறார். **பாரதியார் நினைவுச் சின்னங்கள்:
1. பாரதியார் அவர் நினைவாக தமிழ்நாடு அரசு அவர் வாழ்ந்த எட்டையபுர நினைவுச் சின்னம்(வாழ்ந்த இல்லம்).
2. சென்னை திருவல்லிக்கேணி வாழ்ந்த இல்லம்.
3. புதுச்சேரியில் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை நினைவு இல்லமாக போற்றி வருகிறது.
4. இவர் பிறந்த எட்டயபுரத்தில் மகளிருக்காக பல்தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றையும், பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.

**இதன் மைய மண்டபத்தில் பாரதியாரின் 7 அடி உருவசிலை அமைக்கப்பட்டு 13-02-2000 ஆம் ஆண்டு பஞ்சாப் முதல்வராக இருந்த தர்பார் சிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. மேலும் இங்குு பாரதியாரின் புகைப்பட காட்சிகளும், ஏற்றிய இலக்கிய நூல்களும் வைக்கப்பட்டுள்ளதுு.**மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகள்:
1. குயில் பாட்டு
2. கண்ணன் பாட்டு
3. பாப்பா பாட்டு
4. சுயசரிதை (பாரதியார்)
5. தேசிய கீதங்கள்
6. பாரதி அறுபத்தாறு
7. ஞானப் பாடல்கள்
8. தோத்திரப் பாடல்கள்
9. விடுதலைப் பாடல்கள்
10. விநாயகர் நான்மணிமாலை
11. பாரதியார் பகவத் கீதை
12. பதஞ்சலி யோக சூத்திரம்
13. நவதந்திரக் கதைகள்
14. உத்தம வாழ்க்கை சுதந்திரச் சங்கு
15. ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)
16. சின்னஞ்சிறு கிளியே
17. ஞானரதம்
18. பகவத் கீதை
19. சந்திரிகையின் கதை
20. பாஞ்சாலி சபதம்
21. புதிய ஆத்திச்சூடி
22. பொன் வால் நரி
23. ஆறில் ஒரு பங்கு**பாரதியாரின் மறைவு:
1921 ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயில் யானை தாக்கியதில் ஜூலை மாதம் நோய்வாய்ப்பட்டார். அதன் பிறகு ஏற்படும் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 அதிகாலை 01.30am மணி அளவில் இயற்கை எய்தினார். இவர் கடைசியாக வாழ்ந்த வீடு திருவல்லிக்கேணியில் உள்ளது.
1 Comments

  1. முக்கிய மேற்கோள்கள்:???

    ReplyDelete
Previous Post Next Post