Skip to main content

மாநில அரசு நிர்வாகம் - செயல்பாடு

மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது:

நம் நாட்டில் மத்திய மற்றும் மாநில அரசு என இரண்டு வகை அரசாங்கங்கள் நடைமுறையில் உள்ளன. இந்தியாவில் 28 மாநிலங்கள் தற்போது உள்ளது. மேலும் ஒவ்வொரு மாநிலமும் தனது நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள தனக்கே என ஒரு அரசை கொண்டுள்ளது. அத்தகைய வகையில் மாநில அரசு மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம், மற்றும் மாநில நீதித்துறை  எனும் மூன்று பிரிவுகள் உள்ளன. மாநில நிர்வாகம் மாநில ஆளுநர் மற்றும் மாநில முதலமைச்சரின் தலைமையில் செயல்படுகிறது.


மாநில நிர்வாகம்:

*ஆளுநர்

*முதலமைச்சர்



ஆளுநர்:

* மாநில அரசின் தலைவராக மாநில ஆளுநர் இருப்பார் என இந்திய அரசமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது. மாநில ஆளுநர் இந்திய குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார்.

* மாநில ஆளுநரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். ஆளுநரின் பதவிக் காலம் முடியும் முன்பே  அவரை ஆளுநரின் பதவிலிருந்து குடியரசுத் தலைவரால் நீக்கப்படலாம். அல்லது தாமாக முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்யலாம். ஆளுநரின் பதவிக் காலம் நீட்டிக்கப்படலாம் அல்லது வேறு மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யலாம்.

* ஆனால் மாநில அரசாங்கம் ஆளுநரை ஆளுநர் பதவியிலிருந்து நீக்க இயலாது.

* மாநில ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு ஒருவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் என்பது வரை முறையாகும். 

* ஆளுநர் பதவி வகிக்கும் போது 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.

மேலும் அவர் பாராளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. இதுதவிர ஆதாயம் தரும் எந்த ஒரு பதவியையும் அவர் வகிக்க  கூடாது.



ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்:

* ஆளுநர் ஒரு மாநிலத்தின் பெயர் அளவு நிர்வாகியாக செயல்படுவார். மாநில அரசின் நிர்வாக அதிகாரங்கள் அவரிடம் உள்ளன. மேலும் மாநில அரசாங்கத்தின் அனைத்து நிர்வாக செயல்பாடு களும் ஆளுநரின் பெயரால் மேற்கொள்ளப்படுகிறது.

* ஆளுநர் முதலமைச்சர்களையும் மற்ற ஏனைய அமைச்சர்களையும் நியமிக்கும் பொறுப்பு ஆளுநரிடம் உள்ளது.

* மாநில அரசின் தலைமை வழக்கறிஞர், மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்வதோடு இதர நியமனங்களை மேற்கொள்ள படுகிறார்.

* ஆளுநரின் அறிக்கையின்படி குடியரசு தலைவர் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356 ஐ பயன்படுத்தி ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்துகிறார்.

* மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் செயல்படுகிறார்.

* மாநில சட்டமன்ற கூட்டத்தை கூட்டவும், ஒத்தி வைக்கவும் அதிகாரம் மற்றும் சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரமும் ஆளுநர் கொண்டுள்ளார்.

* ஆளுநரின் ஒப்புதலுக்கு பின்னரே பணம் மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வர முடியும்.

*முக்கிய குறிப்பாக (சட்டமன்றம் அல்லது சட்டமன்றத்தின் ஈரவை யாக இருக்கும் போது கூட்டுதொடர் நடைபெறாத போது ஆளுநர் அவசர சட்டத்தை பிறப்பிக்க அதிகாரம் உண்டு.

* மாநில அரசாங்கத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பண மசோதா உள்ளிட்ட அனைத்து மசோதாக்களும் ஒப்புதல் அளிக்கிறார்.

* மாநில அரசின் எதிர்பாரா செலவின நிதி ஆளுநரின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கும்.

***குடியரசுத் தலைவர் மாநில ஆளுநரை நியமிக்கும் போது மத்திய அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயல்படுகிறார். மேலும் தொடர்புடைய மாநில அரசையும் கலந்து ஆலோசிக்கிறார். முக்கியமாக ஒருவர் ஆளுநராக அவரது சொந்த மாநிலத்தில் நியமிக்கப்படுவதில்லை.





முதலமைச்சர்:

ஆளுநர் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை கொண்டுள்ள கட்சியின் தலைவரை மாநில முதலமைச்சராக நியமிக்கப்படுகிறார். முதலமைச்சர் அமைச்சரவையின் தலைவர் ஆவார்.

*முதலமைச்சரின் பதவிக்காலம் நிலையான ஒன்று அல்ல. 

அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ளவரை முதலமைச்சர் பதவியில் நீடிக்கலாம். சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை இழக்கும் போது அவர் பதவி விலக வேண்டும்.

முதலமைச்சர் பதவி விலகல் என்பது ஒட்டுமொத்த அமைச்சரையும் பதவி விலகலை குறிக்கும்.

ஒருவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படும் போது முதலமைச்சர் மாநில சட்டமன்றத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். 

அப்படி இல்லாவிட்டால் 6 மாதத்திற்குள் சட்டமன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.


முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்:

* முதலமைச்சர் மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார். 

* மாநில அரசின் பல்வேறு முக்கிய முடிவுகள் அவரது தலைமையின் கீழ் செயல்படுகிறது.

* மாநில முதலமைச்சர் அமைச்சரவையை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

* முதலமைச்சரின் ஆலோசனையின் பெயரில் அமைச்சர்களை ஆளுநர் நியமிக்கிறார்.

* பல்வேறு துறைகளை கண்காணித்து ஆலோசனை வழங்குகிறார் மேலும் அவர் பல்வேறு துறைகளில் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.

* முதலமைச்சர் மாநில அரசாங்கத்தின் கொள்கைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.

* முதலமைச்சர் மாநில அரசின் கொள்கைகள் மக்களின் நலனுக்கு எதிராக இல்லாததை உறுதி செய்கிறார்.

* மாநில அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் அவரது முடிவை இறுதியாக இருக்கும்.

* மாநில அரசாங்கத்தின் உயர் பதவிகளில் நியமனம் செய்யும் முக்கிய அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.

* முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின்படி ஆளுநர் பல்வேறு உயர் அதிகாரிகளை நியமிக்கிறார்.



மாநில சட்டமன்றம்:

இந்தியாவில் மாநில சட்டமன்றம் என்பது ஒரு ஆளுநர் அல்லது இரண்டு அவைகளையும் கொண்டிருக்கும்.

1. மேலவை (மேலவை என்பதே சட்டமன்ற மேலவை எனவும்)

2. கீழவை (கீழவை என்பது சட்டமன்றப் பேரவையை குறிக்கும்.)


****இந்தியாவில் தற்போது 6 மாநிலங்களில் மட்டுமே சட்டமன்ற மேலவை நடைமுறையிலுளளது அவைகள் பின்வருமாறு:

**** ஈரவை சட்டமன்றம் கொண்ட மாநிலங்கள் பின்வருமாறு:

1. ஆந்திரப் பிரதேசம்

2. மகாராஷ்டிரம்

3. தெலுங்கானா

4. கர்நாடகம்

5. உத்திரப் பிரதேசம்

6. பீகார் 



சட்டமன்ற மேலவை:

*ஒரு  மாநிலத்தில் சட்டமன்ற மேலவை ஆனது 40 உறுப்பினர்களுக்கு குறையாமலும், அம் மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

* இதன் உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

* மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் நகர நகராட்சி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

* மேலும் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப் படுகின்றனர்.

* பன்னிரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

* மற்றொரு பன்னிரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பல்கலைக்கழக ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

* ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மாநில ஆளுநர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

சட்டமன்ற மேலவை ஒரு நிலையான அவையாகும். இதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வு பெறுவர். அக்காலி பணியிடங்களுக்கு  தேர்தல் நடைபெறும்.

உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.

* உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவது ஒருவர் இந்தியக் குடிமகனாகவும், 30 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும்.

* இவர் மாநில சட்டமன்றத்திலும் அல்லது பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் உறுப்பினராக இருத்தல் கூடாது.

* தலைமை அலுவலராக அவைத்தலைவர் இருப்பார்.

* அவைத் தலைவர் இல்லாத போது துணைத்தலைவர் அவையை நடத்தும் பொறுப்பினை கொண்டிருப்பார்.

* சட்டமன்ற மேலவையின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை அவையின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.



சட்டமன்றப் பேரவை:

* மாநில அரசாங்கத்தின் சட்டங்களை உருவாக்குபவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் MLA என அழைக்கப்படுகிறார்.

* ஒரு சட்டம ன்ற தொகுதி என்பது 1 லட்சம் & அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையை கொண்டிருக்கும்.

* ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.



சட்டப்பேரவை தேர்தல்:

சட்டமன்ற பேரவைக்கான தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகள் ஒவ்வொரு தொகுதிக்கும் தமது வேட்பாளர்களை நியமிக்கின்றன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களிடம் தமக்கு வாக்களிக்குமாறு கூறுகின்றனர். பின்பு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர் ஒருவர் 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.

* ஒருவர் ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடலாம்.

* எந்தக் கட்சியையும் சாராதவர் ஒருவரும்  தேர்தலில் போட்டியிடலாம். இவ்வாறு போட்டியிடும் வேட்பாளர் சுயேச்சை வேட்பாளர் என அழைக்கப்படுகிறார்.

* ஒவ்வொரு கட்சியும் தனக்கென ஒரு சின்னத்தை கொண்டிருக்கும்.

* சுயேட்சை வேட்பாளர்களுக்கும் சின்னம் வழங்கப்படும்.

* சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

* ஒரு சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உண்டு.

* அரசியலமைப்பின் படி ஒரு மாநில சட்டமன்றத்தில் 500 உறுப்பினர்களுக்கு மேலாகவும், 60 உறுப்பினர்களுக்கு குறைவாகவும் இருத்தல் கூடாது.

* அட்டவணை பிரிவினர், பழங்குடியினர்களுக்கு சட்டமன்றத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

* மாநில ஆளுநர் சட்டமன்றத்திற்கு ஒரு ஆங்கிலோ இந்திய உறுப்பினரை நியமனம் செய்கிறார்.

* சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்து ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

***ஆனால் மாநில ஆளுநர் சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே அதனைக் கலைத்து புதிய தேர்தல் நடத்த அழைப்பு விடுக்கலாம்.

* சட்டமன்றக் கூட்டத்திற்கு சபாநாயகர் தலைமை ஏற்கிறார்.

* இவர் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

* சபாநாயகர் இல்லாத நேர்வுகளில் துணை சபாநாயகர் சட்டமன்றக் கூட்டத்திற்கு தலைமை ஏற்கிறார்.



தமிழ்நாடு மாநில அமைச்சரவை:


தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் 118 க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி ஆளுநரால் ஆட்சி அமைக்க அழைக்கப்படுகிறது.

* முதலமைச்சர் (இவரும் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருத்தல் வேண்டும்).



மாநில அரசாங்கத்தின் செயல்பாடுகள்:

* சட்டமன்றம் ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று முறை கூடும்.

* மாநிலத்திற்கான சட்டங்களை இயற்றுவது சட்ட மன்றத்தின் முக்கிய பணியாகும்.

* சட்டமன்றம் மாநிலப் பட்டியல் மற்றும் மத்தியப் பட்டியலில் உள்ள துறைகள் தொடர்பாக சட்டத்தை இயற்றும்.

* இருப்பினும் நெருக்கடிநிலை நடைமுறையில் உள்ள போது சட்டமன்றம் தனது சட்டமியற்றும் அதிகாரத்தை பயன்படுத்த இயலாது.

**அமைச்சரவையின் செயல்பாடுகளில் திருத்தி ஏற்படாவிட்டால் மாநில சட்டமன்றத்தில் ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை இயற்றி அமைச்சரவையை நீக்கம் செய்திடலாம்.

* மாநில சட்டமன்றம் அவனது மாநிலத்தின் நிதியை கட்டுப்படுத்துகிறது.

* நிதி மசோதாவை சட்டமன்றத்தில் மட்டுமே கொண்டு வர இயலும்.

* சட்டமன்றத்தின் அனுமதி இல்லாமல் மாநில அரசாங்கம் வரியினை விதிக்கவோ, அதிகரிக்கவோ, குறைக்கவோ, விளங்கிக் கொள்ளவோ இயலாது.

* சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பங்கேற்கின்றனர்.

* மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் சட்டமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் பங்கு கொள்கின்றனர்.

* அரசியலமைப்பில் திருத்தம் சில நேர்வுகளில் சட்டமன்றம் பங்கு வகிக்கிறது.

***எனவே அரசாங்கமானது சட்டத்தை உருவாக்குதல், சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், நீதியை உறுதி செய்தல் ஆகிய மூன்றும் அடிப்படை பணிகளை கொண்டுள்ளது.



மாநில அரசாங்கத்தில் சட்டங்கள் எவ்வாறு இயற்றப்படுகின்றன:

நாட்டு மக்களுக்கு பல்வேறு வகையான விதிகள் மற்றும் சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

* நீங்கள் ஒரு துப்பாக்கியை உரிமம் இல்லாமல் வைத்துக் கொள்ள இயலாது அல்லது சட்டப்படி ஒரு பெண் 18 வயதிற்கு முன்பாகவும் அல்லது ஒரு ஆண் 21 வயதிற்கு முன்பாகவும் திருமணம் செய்து கொள்ள இயலாது.


சட்டங்களை நடைமுறைப் படுத்துதல்:

* சட்டங்களை நடைமுறைப்படுத்துவது மாநில அமைச்சரவையின் பணியாகும்.

* தமிழ்நாடு சட்டமன்றம் சென்னையில் அமைந்துள்ளது.

* ஒரு மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் அமைச்சரவை பொதுவாக எங்கு செயல்படுகிறதோ அதுவே மாநிலத்தின் தலைநகரம் ஆகும்.

***சட்டமன்றப் பேரவை சட்டமன்ற மேலவை யைக் காட்டிலும் அதிக அதிகாரம் கொண்டுள்ளது.


சட்டமன்றத்தில் உருவாக்கப்பட்ட சட்டங்களை நடைமுறை படுத்துபவர்கள்:

* மாவட்ட ஆட்சியர்கள்

* வட்டாட்சியர்கள் 

* வட்டார வளர்ச்சி அலுவலர்கள்

* வருவாய் அலுவலர்கள்

* கிராம நிர்வாக அலுவலர்கள்

* காவலர்கள்

* ஆசிரியர்கள்

* மருத்துவர்கள்

மேற்கூறிய பல லட்சக்கணக்கான பணியாளர்கள் மாநில அரசாங்கத்தால் பணி அமர்த்தப்படுகிறார்கள்.

அவ்வகையான அலுவலர்களுக்கு மாநில அரசாங்கம் ஊதியம் வழங்குகிறது. மேலும் இவர்கள் மாநில அரசின் ஆணை களை பின்பற்றி நடத்தல் வேண்டும்.



மாநிலத்தின் நீதித்துறை:


**உயர் நீதிமன்றம் 

மாநிலத்தில் உயரிய நீதி அமைப்பாக உயர்நீதிமன்றம் விளங்குகிறது. இந்திய அரசியலமைப்பின் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உயர் நீதிமன்றம் இருக்க வேண்டும். 

* எனினும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கு பொதுவாக ஒரு உயர் நீதிமன்றம் இருக்கலாம்.

* மாநில உயர் நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதியையும், குடியரசு தலைவர் தேவைக்கு ஏற்ப அவ்வப்போது நியமனம் செய்யும் இதர நீதிபதிகளையும் கொண்டிருக்கும். 

* உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நிலையாகவும் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை.

* குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், மாநில ஆளுநர் ஐயும் கலந்தாலோசித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனம் செய்கிறார்.



உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்க வேண்டிய தகுதிகள்:

* இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.

* 1 அல்லது அதற்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாக  குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

* உயர்நீதிமன்ற நீதிபதி 62 வயது வரை அப்பதவியில் இருப்பார். 



உயர் நீதிமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்:

1. ஒவ்வொருு உயர்நீதிமன்றமும் தனது அதிகார எல்லைக்குள் உள்ள ராணுவ நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் நீங்கலாக அனைத்து சார்நிலை நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் கண்காணிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.

2. சார்நிலை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கில் அதில் சட்ட முகாந்திரம் உள்ளது என உயர் நீதிமன்றம் திருப்தி வரும்போது இவ்வழக்கினை எடுத்து தாமே முடிவு செய்யலாம்.

3. உயர் நீதிமன்றம் மாநிலத்தில் உள்ள அனைத்து சார்நிலை நீதிமன்றங்கள் ஐயும் கட்டுப்படுத்துகிறது.

4. நீதி நிர்வாகத்திற்காக ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

5. ஒவ்வொரு மாவட்டமும் மாவட்ட நீதிமன்றத்தின் எல்லைக்குள் அமைந்திருக்கும்.

6. மாவட்ட நீதிபதிகளை ஆளுநர் நியமிக்கபடுகிறார். 



மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது பற்றிய முக்கிய வினா விடைகள்:

1. மாநிலத்தின் ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்.

2. மாநில அமைச்சரவையின் குழுவின் தலைவர் ஆளுநர்.

3. மாநில சட்டமன்ற கூட்டத்தை கூட்டம் ஒத்தி வைக்கவும் அதிகாரம் பெற்றவர் ஆளுநர்.

4. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 62 வயதாகும்.

5. உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பது பங்கு பெறாதவர் முதலமைச்சர்.

6. இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை 28.

7. ஆளுநரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள்.

8. மாவட்ட நீதிபதிகள் ஆளுநர்கள் ஆல் நியமிக்கப்படுகிறார்கள்.

9. ஆளுநர் ஒரு மாநிலத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கிறார்.

10. ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்க 25 வயது அடைந்தவராக இருக்க வேண்டும்.

11. ஒருவர் சட்ட மேலவை உறுப்பினராக இருக்க 30 வயது உடையவராக இருக்க வேண்டும்.









Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...