உ. வே. சாமிநாதையர் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள்
உ .வே. சா. பிறப்பு : 19 - 02 - 1885
உ. வே. சா. இறப்பு : 28 - 04 - 1942
உ. வே. சா. ஆசிரியர் : மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
உ.வே.சா. சிறப்பு பெயர் : தமிழ் தாத்தா, கும்பமுனி.
உ. வே. சா. இயற்பெயர் : சாமிநாதன்
உ .வே. சா. பிறந்த ஊர் : உத்தமதானபுரம் (திருவாரூர் மாவட்டம்)
உ. வே. சா - உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதன்
உ. வே. சாமிநாத ஐயர் வாழ்க்கை குறிப்பு:
சாமிநாதன் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி 1855ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் வட்டம் (உத்தமதானபுரம்) எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர் மற்றும் சரசுவதி அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார்.
இவரின் தந்தை இசையுடன் ஹரிதா கலாட்சேபம் செய்பவர். உ.வே.சா. தமது தொடக்க தமிழ் கல்வியையும், இசை கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடம் கற்றறிந்தார்.
பின்னர் தன் 17 ஆம் வயதில் நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறை (சைவ ஆதீனத்தில்) தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ்பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திருச்சிராப்பள்ளி மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார்.
மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவராக உ. வே. சாமிநாத ஐயர் இருந்தார்.
தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த சாமிநாதன் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக பணியாற்றினார்.
உ. வே. சாமிநாத ஐயரின் சிறப்புகள்:
உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் என்பதை சுருக்கமாக உ.வே.சா. என அழைக்கப்பட்டார். இவர் தமிழ் மொழிக்கு செய்த தொண்டினால் "தமிழ்த்தாத்தா" என தமிழர்களால் அழைக்கப்படுகிறார்.
இவர் ஒரு தமிழறிஞர் மற்றும் தமிழ் மொழியில் அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி தேடி அலைந்து பெற்று அச்சிட்டு பதிப்பித்தவர்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டு ஆற்றியவர்கள் உ. வே. சாமிநாத ஐயர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். மேலும் அவர் தமது அச்சு பதிப்பிற்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும் செழுமையையும் அறியச் செய்தவர்.
உ.வே.சா. அவர்கள் 90க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதிப்பித்தது மட்டுமன்றி மூவாயிரத்திற்கும் (3000) மேற்பட்ட அதிகமான ஏட்டுச் சுவடிகளையும் கையெழுத்து ஏடுகளையும் சேகரிக்கத் இருந்தார்.
உ.வே.சா - வின் எழுதிய என் சரித்திரம்:
* உ.வே.சா என்று அழைக்கப்படும் உ.வே. சாமிநாத ஐயர் உழைக்காமல் இருந்திருந்தால் தமிழுலகிற்கு சிலப்பதிகாரத்தைப் பற்றி தெரியாமலேயே போயிருக்கும்.
* அகநானூற்றுக்கும், புறநானூற்றுக்கும் வேறுபாடு தெரிந்திருக்காது.
* மணிமேகலை மண்ணோடு மறைந்து இருக்கும். இப்படி நூற்றுக்கணக்கான நூல்களை அழிவிலிருந்து காப்பாற்றி பதிப்பித்து தந்தவர் என்ற பெருமை எப்போதும் உ.வே .சாமிநாத அய்யரை சாரும்.
* மேலும் உ.வே.சா. தன்னுடைய சொத்துக்களையும் விற்று பல தமிழ் இலக்கிய நூல்களை பதிப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய அரிய சேவைக்காக அவரின் சீரிய முயற்சிகள் தாராளம் மற்றும் பட்ட சிரமங்களும் யாராலும் இருந்தும் மனம் தளராது இச்சேவையில் ஈடுபட்டு வெற்றியும் கண்டவர் தான் சாமிநாத ஐயர்.
* சங்க இலக்கியங்களைப் பற்றி இன்று நம்மால் பேச முடிவதற்கு காரணம் உ.வே. சாமிநாத ஐயர் தான்.
* சங்ககால மக்களின் வாழ்க்கை பண்பாடு போன்றவற்றை பற்றி இன்று நமக்கு துல்லியமாக தெரிய இவருடைய உழைப்பு பெரிதும் உதவியது.
* இவர் ஏட்டுச் சுவடிகளை பார்த்து அப்படியே அவைகளை பதிப்பித்தல் மட்டும் செய்யவில்லை சிதைந்து மறைந்துவிட்ட அடிகளையும், சொற்களையும் கண்டு முழு பொருள் விளங்கும்படி வடிவமைத்தவர்.
* ஆசிரியர் குறிப்பு, நூல்குறிப்பு போன்ற செய்திகளையும் தொகுத்து வழங்கி இந்த நூல்களை குறித்து முழு புரிதலுக்கும் வழிவகுத்தவர் உ. வே. சா.
* அவர் தோன்றிய காலத்தில் இருந்த தமிழின் நிலைக்கும் அவர் மறைந்த காலத்தில் உயர்ந்து நின்ற தமிழின் நிலைக்கும் பெரிய வேறுபாடு உள்ளது.
* சீவக சிந்தாமணியை கற்றுக் கொடுக்க முயன்றபோது ஏட்டுச் சுவடியில் இருந்த நூலை மிகுந்த சிரமத்திற்கு இடையில் கற்பித்து பாடம் சொல்லிக் கொடுத்ததால் இந்நூலில் உள்ள செய்திகளை உணர்ந்தவர் மற்றும் நூலை 1887-ஆம் ஆண்டு முதன்முதலாக வெளியிட்டவர் இவர்தான்.
* இவருடைய வாழ்க்கை வரலாறு தமிழ் பால் அன்பு கொண்ட அனைவரும் போற்றும் ஒரு கருத்துக் கருவூலமாக இருக்கின்றது.
* சிறிய வயதில் இவரிடம் யாராவது ஆங்கிலம் இவ்வுலக வாழ்விற்கும், வடமொழி உலக ஆன்மீக வாழ்விற்கும் பயன்படும் என அறிவுறுத்தினால் என் அன்னை தமிழானது இவ்வுலகம் மற்றும் இவ்வுலக வாழ்வு இரண்டிற்கும் இன்றியமையாதது என்று கூறுவாராம்.
* உ. வே. சாமிநாத ஐயரின் குடும்பம் தீராத வறுமையில் வாடியது தனது குடும்பம் பிழைப்பதற்கும், இவர் கல்வி கற்பதற்கும் இவர் தந்தை மிகுந்த முயற்சி எடுத்துள்ளார். மேலும் இவர் குடும்பம் ஓர் ஊரில் நிலையாக தங்குவதற்கு வசதி இல்லாமல் ஊர் ஊராக இடம்பெயர்ந்து வாய்ப்புகளைத் தேடி அலைந்து உள்ள போதிலும் மனம் தளராமல் இவ்வளவு கடினமான சூழ்நிலையில் தமிழை விடாமுயற்சியுடன் கற்றுக் கொண்டுள்ளார்.
* இவர் பிற்காலத்தில் அடைந்த இமாலய வெற்றிக்கு இவர் கற்ற கல்வியும் குடும்பத்தின் தியாகமும் விடாமுயற்சியும் பெரும் அடித்தளமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உ. வே. சா. விருது:
1. உ. வே. சா. விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும்.
2. 2012ஆம் ஆண்டு முதல் இந்த விருது உ. வே. சாமிநாத ஐயர் நினைவாக வழங்கப்படுகிறது.
3. கல்வெட்டுகள், அகழ்வாய்வுகள், ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துப் படிகள் கிடைத்தற்கரிய நூல்கள் முதலியவற்றை அரும் பெரும் முயற்சியால் கண்டறிந்து வெளிக்கொணர்ந்து தமிழுக்கு வளம் சேர்க்கும் பணிகளை மேற்கொள்ளும் தமிழர்களின் சேவைகளை பாராட்டும் விதமாக இந்த விருது அளிக்கப்படுகிறது.
4. இந்த விருதுக்கு ஒரு லட்சம் (1,00,000)ரூபாய் பரிசுத் தொகையும், 8 கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச் சான்று அளித்து சிறப்பிக்கப்படுகிறது.
உ.வே.சா. விருது பெற்றவர்கள் பட்டியல்:
1. புலவர் செ. இராசு - 2012
2. ம. வே. பசுபதி - 2013
3. ம. அ. வேங்கட கிருஷ்ணன் - 2017
4. ச. கிருஷ்ணமூர்த்தி - 2018
உ .வே. சா - வின் ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் இடங்கள்:
* கீழ்த்திசை சுவடிகள் நூலகம் - சென்னை.
* அரசு ஆவணக் காப்பகம் - சென்னை.
* உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - சென்னை.
* சரஸ்வதி நூலகம் - தஞ்சாவூர்.
உ.வே.சா எழுதிய கவிதைகள்:
* கடைவீதியில் ஒரு புத்தகக்கடை
உ. வே. சாமிநாதையர் நூலகம்:
உ .வே. சா - நூலகம் வரலாறு பற்றிய குறிப்புகள்:
* 1942 ஆம் ஆண்டு உ.வே.சாமிநாதையர் மறைவுக்குப் பிறகு அவரால் சேகரிக்கப்பட்ட நூல்களைப் பாதுகாத்து ஒரு நூலகமாக அவரது மகனான கல்யாண சுந்தர ஐயர் விரும்பினார்.
* இவரது விருப்பத்திற்கு இணங்க பிரம்மஞான சபையின் உறுப்பினரும் கலாஷேத்திரா- வின் தலைவியான ருக்மணிதவி அருண்டேல் அவர்கள் உ.வே.சாவின் சேகரிப்பில் இருந்த சுவடிகளையும் அறிய குறிப்புகளையும் பெற்று சென்னை அடையாற்றில் உள்ள பிரம்மஞான சபையின் தலைமை அலுவலக கட்டடத்தில் மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் நிலையம் என்ற பெயரில் நூல் நிலையத்தை 1943 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5-ஆம் நாள் நிறுவினார்.
* இந்த நூலகமானது இருந்த இடத்திலேயே சுமார் 20 ஆண்டுகள் இயங்கி வந்தது.
* அதன்பன்னர் திருவான்மியூருக்கு மாற்றப்பட்டு கலாசேத்திரா கட்டடத்தின் ஒரு பகுதியில் இயங்கி வந்தது.
* அதன் பின்னர் இந்த நூலகத்திற்கு சொந்த கட்டடம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது இதை எடுத்து நூலகக் கட்டடம் கட்ட நடுவன் அரசு பாதி தொகையை ஏற்க முன் வந்தது அதன் பின்னர் தமிழக அரசு அளித்த தொகை மற்றும் தமிழன்பர்கள் அளித்த நன்கொடையை கொண்டு நூலகத்திற்கு சொந்த கட்டடத்தை சென்னை பெசன்ட்நகரில் உள்ள அருண்டேல் கடற்கரை சாலையில் கட்டடம் கட்டும் பணிகள் 1962ல் தொடங்கி பணிகள் முடிந்ததையடுத்து 1967 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி அன்று திறக்கப்பட்டது.
* இந்த நூலகத்தின் நுழைவாயிலில் 1997ஆம் ஆண்டு உ. வே. சாமிநாத ஐயருக்கு வெங்கல சிலை நிறுவப்பட்டது.
உ .வே. சாமிநாத ஐயர் நூலகம் முகவரி:
#2 Arun Dale Beach Road - அருண்டேல் கடற்கரைச் சாலை, kalakshetra colony - கலாஷேத்திரா காலனி, சென்னை - 600090.
* இந்த நூலகத்தில் 1832 நூல்களும், 939 அறிய தமிழ் சுவடிகளும், உ.வே.சா தம் கைப்பட பிற தமிழ் அறிஞர்களுக்கு எழுதிய 3000 கடிதங்களும் மற்றும் அவரின் நாட் குறிப்புகளும் உள்ளது.
* மேலும் இந்த நூலகத்தில் பல அச்சுப் பாதிக்கப்படாத சுவடிகளும் உள்ளன.
* இந்த நூலகம் தமிழ்நாடு அரசின் பொது நூலக இயக்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
உ. வே. சா - பதிப்பித்த நூல்கள்:
1. சீவக சிந்தாமணி
2. சிலப்பதிகாரம்
3. மணிமேகலை
4. பரணி
5. மும்மணிக்கோவை
6. இரட்டைமணிமாலை
7. அந்தாதி
8. பிற பிரபந்தங்கள்
9. கோவை
10. தூது
11. எட்டுத்தொகை
12. உலா
13. பத்துப்பாட்டு
14. புராணங்கள்
15. வெண்பா நூல்கள்
உ. வே. சா - இயற்றிய நூல்கள்:
ஒரு பெரிய மனிதரிடம் சென்று நெல் வேண்டுமென்று - உவேசா இயற்றிய முதல் செய்யுள் நூல்.
1. கலைமகள் துதி
2. திருலோக மாலை
3. ஆனந்தவல்லி அம்மை
4. பஞ்சரத்தினம்
உ.வே.சா - நினைவு இல்லம்:
உத்தமதானபுரம் உ. வே. சா. வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லம் ஆக்கப்பட்டுள்ளது.
1942இல் இவர் பெயரால் சென்னை வசந்த நகரில் (பெசன்ட் நகரில்) உ.வே.சா - நூல் நிலையம் அமைக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.