Skip to main content

"சொல்லின் செல்வர்" - ரா.பி.சேதுப்பிள்ளை வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்...........

 ரா. பி. சேதுப்பிள்ளை வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்:


1. வாழ்ந்த காலம்: (02 - 03 -1896 முதல் 25 -04- 1961)

2. பிறந்த ஊர்: தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில்               இராசவல்லிபுரம் என்னும் ஊரில் பிறவிப் பெருமாள் பிள்ளை மற்றும் சொர்ணம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் தான் ரா.பி.சேதுப்பிள்ளை ஆவார்.

3. இயற்பெயர்: சேது (ரா.பி. சேதுப்பிள்ளை யின் முன் எழுத்துகளாக அமைந்த "இரா" என்பது இராசவல்லிபுரதையும்  "பி" என்பது பிறவி பெருமாள் பிள்ளை அவர்களையும் குறிப்பிடுகின்றது.

4. கார்காத்த வேளாளர் குலத்தில் சேது பிறந்தார்.

5. இவர் தந்தையார் சேதுகடலாடி ராமேஸ்வரத்தில் உள்ள இறைவனை பூசித்ததனால் பிறந்த தம் மகனுக்கு சேது என பெயர் சூட்டினார்.


ரா.பி. சேதுப்பிள்ளை பற்றிய முக்கிய குறிப்புகள்:

* ரா.பி.சேதுப்பிள்ளை ஒரு தமிழறிஞர், எழுத்தாளர், வழக்கறிஞர், மேடைப் பேச்சாளர்.

* இவர் தமிழில் சொற்பொழிவு  ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர்.

* இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர்.

* உரைநடையில் அடுக்கு மொழியையும் செய்யுளுக்கே உரிய  எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே எனப்படுகின்றது.

* இராசவல்லிபுரம் செப்பறை திருமடத் தலைவர் அருணாசல தேசிகரிடம் இவர் மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களைக் கற்று அறிந்தார்.

* சேதுப்பிள்ளை தமிழ்த் துறையில் விரிவுரையாளராக சேர்ந்து விபுலானந்தர் சோமசுந்தர பாரதியார் ஆகிய இருபெரும் புலவர்களின் தலைமையில் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார்.

* வையாபுரிப்பிள்ளை தொகுத்து வந்த தமிழ் பேரகராதிபணி நிறைவேற சேதுப்பிள்ளை துணை நின்றார்.

* சென்னை ஒய்.எம். சி. ஏ அரங்கத்தில் இவரது கம்பராமாயண சொற்பொழிவு மூன்று ஆண்டுகள் நடைபெற்றது.

* சொற்பொழிவின் தாக்கத்தால் சென்னை மாநகரில் கம்பன் கழகம் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

* ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய முதல் கட்டுரை நூல்திருவள்ளுவர் நூல் நயம்.

* ரா.பி.சேதுப்பிள்ளை படைத்த உரைநடை நூல்களும் தலை சிறந்ததாகவும், வாழ்க்கை பெரும் நூலாகவும் விளங்குகிற நூல் - தமிழகம் ஊரும் பேரும்.

* இந்நூல் அவரின் முதிர்ந்த ஆராய்ச்சி பெரு நூலாகவும், ஒப்பற்ற ஆராய்ச்சி கருவூலமாகவும் திகழ்கிறது.


ரா.பி.சேதுப்பிள்ளை படைத்த நூல்கள்:

1. சிலப்பதிகார நூல் நயம்

2. தமிழின்பம் 

3. தமிழ்நாட்டு நவமணிகள்

4. தமிழ் வீரம்

5. தமிழ் விருந்து

6. வேலும் வில்லும்

7. வேலின் வெற்றி

8. வழிவழி வள்ளுவர்

9. ஆற்றங்கரையினிலே

10. தமிழ் கவிதை களஞ்சியம் 

11. செஞ்சொற் கவிகோவை 

12. பாரதியாரின் கவித்திரட்டு 

13. திருவள்ளுவர் நூல் நயம் 

14. கால்டுவெல் ஐயர் சரிதம் 

ரா.பி.சேதுபதியின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்:

1. ஆற்றங்கரையினிலே

2. கடற்கரையினிலே 

3. கிறிஸ்தவத் தமிழ்த்தொண்டர் 

4. தமிழ் விருந்து

5. தமிழக ஊரும் பேரும்

6. தமிழர் வீரம்

7. தமிழின்பம் 

8. மேடைப்பேச்சு

9. வேலின் வெற்றி

 

ரா.பி.சேதுப்பிள்ளை பதிப்பித்த நூல்கள்:

1. திருக்குறள் எல்லீஸ் உரை 

2. பாரதியின் கவித்திரட்டு


ரா.பி.சேதுப்பிள்ளை சிறப்புகள்:

* சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர் - ரா.பி. சேதுப்பிள்ளை.

* டி.லிட் பட்டம் பெற்றவர்.


* ரா.பி.சேதுப்பிள்ளையின் முதல் சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்
- தமிழின்பம்.

* தன் அன்னையின் பெயரால் சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் சொர்ணம்மாள் அறக்கட்டளையை நிறுவினார்.

* செந்தமிழுக்கு சொல்லின் செல்வர் என்று போற்றப்படுபவர் - ரா.பி. சேதுப்பிள்ளை.

* பச்சையப்பன் கல்லூரி, அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறையில் ஆசிரியராக பணியாற்றியவர் - ரா.பி.சேதுப்பிள்ளை.

* சிறந்த பேச்சாளர், உயர்ந்த எழுத்தாளர், இனிய கட்டுரையாளர் - ரா.பி. சேதுப்பிள்ளை.

* எதுகை, மோனை அமைய பேசவும் எழுதவும் வல்லவர் - ரா.பி.சேதுப்பிள்ளை.

* பல இலக்கியக் கட்டுரைகள் தீட்டியுள்ளார்.

* திருக்குறள்  எல்லிஸ் உரை (ஆங்கிலம்) சாகித்திய அகாடமி காகப் பாரதியின்  கவிதிரட்டும் , தமிழ் கவிதை களஞ்சியமும் பதிப்பித்தவர் - ரா.பி. சேதுப்பிள்ளை.

* சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவின்போது டாக்டர் பட்டம் வழங்கப் பெற்றார்.

* ரா.பி.சேதுப்பிள்ளை சென்னை பல்கலைக்கழகத்திற்கு ரூ. 25 ஆயிரம்  வழங்கி தமிழ் பேருரைகள் நிகழ்த்த வழி செய்தார்.


ரா.பி.சேதுப்பிள்ளை - யின் சிறப்பு பெயர்கள்:

* சொல்லின் செல்வர்


ரா.பி.சேதுப்பிள்ளை உரைநடை நயங்கள்:

"வாழ்வும் தாழ்வும் நாடு நகரங்களுக்கும் உண்டு சீரும் சிறப்பும் பெற்று விளங்கிய சில நகரங்கள் இக்காலத்தில் புகை படிந்த ஓவியம் போல் பொறி விழுந்திருக்கின்றன"

"தென்னாட்டிலே தென்றல் என்றொரு பொருள் உண்டு; தனியே அதற்கொரு சுகம் உண்டு. வசந்த காலத்தில் தெற்கே இருந்து அசைந்து வரும் தென்றலின் சுகத்தை நன்றாக அறிந்தவர் தமிழர்; வடக்கே இருந்து வரும் குளிர் காற்றை"வாடை"என்பார்கள்; தெற்கே இருந்து வரும் இளங்காற்றை "தென்றல்"என்றார்கள். வாடை என்ற சொல்லிலே வன்மைஉண்டு; தென்றல் என்ற சொல்லிலேயே மென்மை உண்டு. தமிழகத்தார் வாடையை வெறுப்பர்; தென்றலில் மகிழ்ந்து திளைப்பர்."












Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...