Skip to main content

Posts

Showing posts from August, 2021

மறைமலை அடிகள் - தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை பற்றிய முழுமையான விவரங்கள்.....

தூயதமிழ் தந்தை - மறைமலை அடிகள் வாழ்க்கை வரலாறு முக்கிய குறிப்புகள்.....   மறைமலை அடிகள் இயற்பெயர் : வேதாசலம். மறைமலை அடிகள் பிறந்த ஊர்:   திருக்கழுக்குன்றம். மறைமலை அடிகள் பெற்றோர் பெயர் : சொக்கநாத பிள்ளை மற்றும் சின்னம்மையார். மறைமலை அடிகள் மகள் பெயர் : T. நீலாம்பிகை. 1. மறைமலை அடிகளாரின்  இயற்பெயர் வேதாச்சலம் என பெயரிட காரணம்: பல ஆண்டுகளாக பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்து திருக்கழுக்குன்றம் சிவன் வேதாசலரையும், அம்மை சொக்கம்மையாரையும்  வேண்டி நோன்பிருந்து பிள்ளை பேறு பெற்றதால் தம் பிள்ளைக்கு வேதாசலம் என பெயரிட்டார்.  * அதன் பின்னர் தனித்தமிழ் பற்று காரணமாக 1916ஆம் ஆண்டு தம் பெயரை மறைமலை (வேதம் - மறை ) மற்றும் (அசலம் - மலை) என்று மாற்றிக் கொண்டார். * மறைமலை அடிகள் ஜூலை மாதம் 15ஆம் தேதி 1876 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி 1950ஆம் ஆண்டு வரை தன் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தார். மறைமலை அடிகள் ஒரு புகழ் பெற்ற தமிழ் அறிஞர் ஆவார். 2. மறைமலை அடிகள் பற்றிய முக்கிய குறிப்புகள்: * தமிழ் ஆய்வாளர் தமிழையும், வடமொழியையும், ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். * உ...

ஆனந்தரங்கம் பிள்ளை (துபாசி) நாட்குறிப்பு PDF download...

  தமிழ் கடித இலக்கியம் - ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு  இயற்பெயர் : ஆனந்தரங்கப் பிள்ளை. பெற்றோர் : திருவேங்கடம்.   தொழில்: வணிகம், அரசியல், மொழிபெயர்ப்பாளர்  மொழிப்புலமை : தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு, சமஸ்கிருதம், போர்த்துகீசியம் என பல மொழிகளை அறிந்தவர். பணி : டியுப்லக்ஸ் பிரபு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராக இருந்த கனகராய முதலியார் என்பவர் இழந்ததால் பன்மொழி அறிவு பெற்ற ஆனந்தரங்கம் 1747 அப்பணிக்கு அமர்த்தப்பட்டார். வாழ்ந்த காலம் : (30 - 03 - 1709 முதல் 10 - 01 - 1761 ஆண்டு வரை). ஆனந்தரங்கரின் வரலாற்று ஆவணம்: ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு ஓர் இலக்கியமாகவும், வரலாற்று ஆவணமாகவும் மதிக்கப் பெற்றது. ஆனந்தரங்கரின் இளமைக்காலம்: * ஆனந்தரங்கர் சென்னை பெரம்பூரில் பிறந்தவர் ஆவார். * இவரின் தந்தை பெயர் திருவேங்கடம். * இவர்தம் மூன்றாம் வயதில் தன் தாயை இழந்தார். * இவர் "எம்பார்" என்பவரிடம் கல்வி கற்றார். ஆனந்தரங்கன் புதுவைக்கு செல்லுதல்: * இவரின் தந்தை திருவேங்கடம் மைத்துனர் நைனியப்பரின் வேண்டுகோளுக்கு இணங்க புதுவையில் குடியேறினார். * அங்கு அரசுப் பள்ளியில் ...

"தென்னாட்டின் பெர்னாட்ஷா" - அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு...

  தமிழ் கடித இலக்கியம் - அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு இயற்பெயர் : காஞ்சிவரம் நடராஜ முதலியார் அண்ணாதுரை.  பெற்றோர்கள் : நடராச முதலியார் மற்றும் பங்காரு அம்மாள். பிறந்த ஊர் : காஞ்சிபுரம் மாவட்டம் (சின்ன காஞ்சிபுரத்தில்) பிறந்தார். வாழ்ந்த காலம் : 15 - 09 - 1909 முதல் 03 - 02 - 1969 வரை. அறிஞர் அண்ணா பற்றிய முக்கிய குறிப்புகள்: 1. அறிஞர் அண்ணா சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். 2. அறிஞர் அண்ணா 1939 - ஆம் ஆண்டு மாணவ பருவத்திலேயே ராணி அம்மையாரை மணந்து கொண்டார். 3. 1933 ஆம் ஆண்டு கல்லூரி பொருளாதார அமைப்பின் தலைவன் ஆனார். 4. பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நீதிக் கட்சியில்  - 1935 ஆம் ஆண்டு சேர்ந்தார். 5 . 1936 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி தேர்தலில் பெத்துநாயக்கன் பேட்டை தொகுதியில் நீதிக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோற்றார் . 6. 1937 ஆம் ஆண்டில் துறையூரில் நடந்த " சுயமரியாதை மாநாட்டிற்கு" அண்ணா தலைமை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 7. 1937இல் ராஜாஜி இந்தியை கட்டாயம் பாடமாக்கியபோது இந்தி எதிர்ப்பு போ...