"தென்னாட்டின் பெர்னாட்ஷா" - அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு...

 தமிழ் கடித இலக்கியம் - அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு


இயற்பெயர்: காஞ்சிவரம் நடராஜ முதலியார் அண்ணாதுரை. 

பெற்றோர்கள்: நடராச முதலியார் மற்றும் பங்காரு அம்மாள்.

பிறந்த ஊர்: காஞ்சிபுரம் மாவட்டம் (சின்ன காஞ்சிபுரத்தில்) பிறந்தார்.

வாழ்ந்த காலம்: 15 - 09 - 1909 முதல் 03 - 02 - 1969 வரை.


அறிஞர் அண்ணா பற்றிய முக்கிய குறிப்புகள்:

1. அறிஞர் அண்ணா சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார்.

2. அறிஞர் அண்ணா 1939-ஆம் ஆண்டு மாணவ பருவத்திலேயே ராணி அம்மையாரை மணந்து கொண்டார்.

3. 1933 ஆம் ஆண்டு கல்லூரி பொருளாதார அமைப்பின் தலைவன் ஆனார்.

4. பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நீதிக் கட்சியில்  - 1935 ஆம் ஆண்டு சேர்ந்தார்.

5. 1936 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி தேர்தலில் பெத்துநாயக்கன் பேட்டை தொகுதியில் நீதிக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோற்றார்.

6. 1937ஆம் ஆண்டில் துறையூரில் நடந்த "சுயமரியாதை மாநாட்டிற்கு" அண்ணா தலைமை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

7. 1937இல் ராஜாஜி இந்தியை கட்டாயம் பாடமாக்கியபோது இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு பெரியாரும். அண்ணாதுரையும் கைது செய்யப்பட்டார்.

8. 1942ஆம் ஆண்டு பெரியாரை விட்டுப் பிரிந்து காஞ்சிபுரம் சென்று "திராவிட நாடு" என்ற இதழைத் தொடங்கினார்.

9. பாரதிதாசன் அண்ணாதுரைக்கு "அறிஞர்" என்ற பட்டத்தை சூட்டினார்.

10. பாரதிதாசன் கூறிய முதல் அறிஞர் அண்ணாதுரை ஆவார்.

11. 1967 இல் நடந்த பொதுத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று அண்ணா அவர்கள் ஆட்சி அமைத்ததால் தமிழ்நாட்டின் ஆட்சி காங்கிரஸிடம் இருந்து அன்று போனது இன்று வரை அதன் கைக்குக் எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

12. 01 - 01 - 1968 ஆம் ஆண்டு சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியவர் அறிஞர் அண்ணா ஆவார்.

13. அறிஞர் அண்ணா பெரியார் உடன் திராவிட கழகத்தில் இணைந்து மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார்.

14. பெரியாரின் தனித்  திராவிட நாடுக் கொள்கை காரணமாக பெரியாரை விட்டு விலகி திராவிட முன்னேற்றக் கழகம் ( தி.மு.க ) என்ற புதிய இயக்கம் ஒன்றை 1949 ஆம் ஆண்டு நிறுவினார்.

15. 1965 இல் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் விளைவாக மக்கள் ஆதரவைப் பெற்றார்.

16. அண்ணாதுரையின் கோட்பாடு "ஒன்றே குலம் ஒருவனே தேவன்'.

17. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று கூறியவர் திருமூலர்.

18. அண்ணாதுரையின் "கட்சி கொள்கை" கடவுள் ஒன்று, மனித நேயமும் ஒன்று தான்.

19. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் மூன்று வார்த்தைகளை கட்சியின் பண்பாடாகவும் முன்மொழிந்தார் அறிஞர் அண்ணா.

20. "திராவிட நாடு" என்னும் இதழைத் தொடங்கியவர் அறிஞர் அண்ணா.

21. சென்னை மாகாணத்தை 1967ஆம் ஆண்டு ஏப்ரல் 16ம் நாள் (16 - 04 - 1967) தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் அறிஞர் அண்ணா ஆவார்.

22. அண்ணாவின் இறுதி ஊர்வலம் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறுகின்ற அளவில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

23. அறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலம் "கின்னஸ்" புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

24. ராஜ்யசபாவில் இவரது பேச்சுகளுக்காக சிறந்த "பாராளுமன்றவாதி" என்று ஜவர்கலால் நேரு அண்ணாதுரையை புகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

25. 1968 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகம் அண்ணாதுரைக்கு டாக்டர் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியது.

26. மத்திய அரசாங்கம் 2009ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  15 ஆம் நாள் அன்று அண்ணாதுரையின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக அண்ணாதுரையின் பெயரில் 5 ரூபாய் நாணயங்களை வெளியிட்டு அவரை சிறப்பித்தது.

27. இந்தியா -  டுடே பத்திரிகையின் இந்தியாவை வடிவமைப்பதில் முதல் 100 நபர்களின் பட்டியலில் அண்ணாதுரையின் பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

28. 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் சென்னையில் அண்ணாதுரையின் நினைவாக அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டது (அண்ணா நூலகம் 8 தளங்களைக் கொண்டுள்ளது).


அறிஞர் அண்ணாவின் முக்கிய மேற்கோள்கள்:

* மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு

* நான் எப்பொழுதுமே கடவுளிடம் உண்மையான நம்பிக்கையுடன் வாதாடுபவர் என்றார் அறிஞர் அண்ணா.

* எதையும் தாங்கும் இதயம் வேண்டும்

* மக்களின் மதியை கெடுக்கும் ஏடுகள் நமக்குத் தேவையில்லை, தமிழரை தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை மற்றும் தன்னம்பிக்கையை ஊட்டி மதிப்பை பெருக்கும் நூல்கள் தேவை.

* நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் - அறிஞர் அண்ணா.

* இளைஞர்கள் உரிமைப் போர் படையின் ஈட்டி முனைகள் - அறிஞர் அண்ணா.

* இளைஞர்களுக்கு பகுத்தறிவும், சுயமரியாதையும் தேவை.

* நல்ல வரலாறுகளை படித்தால் தான் இளம் உள்ளத்தில் புது முறுக்கு ஏற்படும்.

* சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு - அறிஞர் அண்ணா.

* கத்தியை தீட்டாதே, புத்தியை தீட்டு வன்முறை இருபக்கமும் கூர் உள்ள கத்தி முனை போன்றே ஆகும்.

* வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம்  புத்தகசாலைகுத் தரவேண்டும் - அறிஞர் அண்ணா.

* புனலிடை மூழ்கிப் பொழிலிடை உலவிப் பொன்னின் இழையும் துகிலும் பூண்டு கனிமொழி பேசி....

* உழைத்து பெறு ! உரிய நேரத்தில் பெறு ! முயற்சி செய்து பெறு !  - அறிஞர் அண்ணா.

* பொங்குக இன்பம் ! பொங்குக புதுமை !  பொங்குக பொலிவு ! வளம் பெருகிடுக ! வாழ்வு சிறத்திடுக ! வாழ்க தமிழ் ! வாழ்க தமிழகம். - அறிஞர் அண்ணா.

* "எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணி என்று அறிஞர் அண்ணா கூறினார்"...


அறிஞர் அண்ணா எழுதிய நூல்கள்:

1. கலிங்க நாட்டு ராணி

2. சந்திரமோகன் ( அறிஞர் அண்ணா நடித்த நாடகத்தின் பெயர்)

3. சொர்க்கவாசல்

4. வேலைக்காரி

5. பார்வதி B.A 

6. ரங்கோன் ராதா ( அறிஞர் அண்ணா எழுதிய "நாவல்களில்" மிகவும் புகழ்பெற்றது)

7. சூதாடி

8. அன்னதானம் 

9. ஓர் இரவு

10. ஆற்றங்கரையிலே

11. கம்பரசம்

12. செவ்வாழை

13. கண்ணீர் துளிகள்

14. நீதி தேவனுக்கு மயக்கம் (அறிஞர் அண்ணா நடித்த நாடகத்தின் பெயர்)

15. கன்னிப்பெண் கைம்பெண் ஆன கதை

16. நல்லதம்பி

17. ஏ தாழ்ந்த தமிழகமே

18. குற்றவாளியோ

19. தசாவதாரம்

20. பேய் ஓடிப் போச்சு.


அறிஞர் அண்ணா எழுதிய சிறுகதைகள்:

1. ராஜாதி ராஜா

2. தஞ்சை வீழ்ச்சி

3. இரு பரம்பரைகள்

4. சூதாடி

5. பிடி சாம்பல்

6. சொர்க்கத்தில் நரகம்

7. செவ்வாழை

8. சுடு மூஞ்சி

9. கலாபலன்

10. பேய் ஓடிப் போச்சு

11. புலி நகம் 


அறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்:

* விதியை நம்பி மதியை பறிகொடுத்து பகுத்தறிவற்ற மனிதர்களாய் வாழ்வதே மிகமிக தீங்கு.

* பாடத்திட்டங்களில் பகுத்தறிவை புகுத்தும் தீவிரமான திட்டம் உருவாக்கப்படாத வரையில் பகுத்தறிவு வளராது நம் நிலையும் உயராது.

* எவ்வளவு கட்டிடங்கள் கட்டினாலும், விஞ்ஞானக் கூடங்களில் அமைத்தாலும், புது பூங்கா அமைத்தாலும் ,கல்விச்செல்வம் இல்லாவிடில் அவை பயன் தராது.

* பகைவர்கள் தாக்கி தாக்கி தங்கள் பலத்தை இறக்கட்டும் நீங்கள் தாங்கி தாங்கி பலத்தை  பெற்றுக் கொள்ளுங்கள்.

* தரணினை வென்றவன்யை வெல்வான்.

* நாள், கோ, நட்சத்திரம், சகுனம், சாஸ்திரம் அத்தனையும் மனித முயற்சிக்கு போடப்படுகின்ற தடைக்கற்கள்.

* ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.

* ஆனா பிறந்தவன் ஆண்மகன் அவன் இஷ்டத்துக்கும் ஆடி பிழைக்க வேண்டியவன்  என்று பெண்கள் இப்படி பேசிடும் பண்பு படைத்தது இந்துமதம். இந்த இந்து மதத்தை நம்பி கிடக்கும் நாடு உருப்படாது.


அறிஞர் அண்ணா மறைவு: 

அறிஞர் அண்ணா 03 - 02 - 1969 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அறிஞர் அண்ணாவின் இறுதி சடங்கில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வந்தனர் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment

Previous Post Next Post