Skip to main content

புதுக்கவிதைக் கவிஞர் (சாலை இளந்திரையன்) வாழ்க்கை வரலாறு...

 புதுக்கவிதை - கவிஞர் (சாலை இளந்திரையன்)

இயற்பெயர்: வ. இரா. மகாலிங்கம் 

பிறந்த ஊர்: களக்காட்டிற்கு அருகில் உள்ள சாலை நயினார் பள்ளிவாசல் (திருநெல்வேலி மாவட்டம்)

பிறந்த வருடம்: 06 - 09 - 1930

இறந்த வருடம்: 04 - 10 - 1998

பெற்றோர்கள்: வ. இராமையா - அன்னலட்சுமி

மனைவியின் பெயர்: சாலினி இளந்திரையன் (கனகசவுந்தரி)


சாலை இளந்திரையன் பற்றிய முக்கிய குறிப்புகள்:

1. சங்ககால மன்னரான இளந்திரையன் பெயரை தன்னுடைய புனைப் பெயராகக் கொண்ட இவர் அதன் பின் தன்னுடைய ஊர் பெயரின் முற்பகுதி சேர்த்துக்கொண்டு  "சாலை இளந்திரையன்" என்று அழைத்துக்கொண்டார்.

2. 1957 இல் இந்திய ஒன்றிய அரசின் விளம்பர தகவல் ஒளிபரப்புத்துறை தலைவரானார்.

3. 1959ஆம் ஆண்டில் தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடங்கப்பட்டதும் இளந்திரையன் துறையில் விரிவுரையாளராக பணியாற்றினார்.

4 அப்பல்கலைக்கழகத்திலேயே 1972ஆம் ஆண்டில் பேருரையாளரகவும்,  1983 ஆம் ஆண்டில் பேராசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார்.

5. தில்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட "சுடர்" எனும் இதழின் ஆசிரியராக பணியாற்றினார். 

6. 1954 முதல் 1955 ஆம் ஆண்டு வரை இலக்கிய முதுவர் பட்டத்திற்கான ஆய்வு வகுப்பில் முதல் மாணவனாக சேர்ந்து பேராசிரியர்                      தெ.போ. மீனாட்சிசுந்தரனாரை நெறியாளராக கொண்டு ஆய்வு செய்து பட்டத்தை பெற்றார். 

7. பின்னர் 1971 - ல் தமிழ்நாட்டுப் பழமொழிகள் எனும் தலைப்பில் சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு மெய்யியல் முனைவர் பட்டம் பெற்றார்.

8. 1985இல் விருப்ப ஓய்வு பெற்று தமிழகம் திரும்பினார்.

9. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்ற காலத்தில்                                           வ. இரா. இராமலிங்கம் அந்நாளில் புகழ்பெற்ற இதழான "பிரசண்ட விகடன்" மற்றும்  "தமிழ் பொழில்" உள்ளிட்ட பல இதழ்களில் இலக்கிய கட்டுரைகள், கவிதைகள், கதைகள் எழுதத் தொடங்கினார்.

10. ஓய்வுக்குப் பின்னர் "சாலை அச்சகத்தை" உருவாக்கி நடத்தினார்.

11. சாலை இளந்திரையன் "அறிவியக்கம், வீரநடை அறிவியக்கம்" எனும் இதழில் சிறப்பாசிரியராகப்  பணியாற்றினார்.

12. சாலை இளந்திரையன் திராவிடத் தந்தை  ஈ. வே. ராமசாமி பெரியாரின் அரசியல் கொள்கையும், பாவேந்தர் பாரதிதாசனின் இலக்கியக் கொள்கையும் பின்பற்றினார். 

13. சாலை இளந்திரையனின் உடல் அவரது மறைவுக்குப் பின் அவரது விருப்பப்படியே சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆய்விற்காக அளிக்கப்பட்டது.

14. உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் தில்லி தமிழ் எழுத்தாளர் சங்கம், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் தோன்றக் காரணமாக இருந்தவர்   "சாலை இளந்திரையன்" ஆவார்.

15. தன் வாழ்நாள் முழுவதும் தமிழின முன்னேற்றத்திற்கான படிப்புகளை வழங்கி எழுச்சி ஊட்டினார்.

16. சாலை இளந்திரையன் "அறிவியக்கம் பேரவை" மூலம் சமுதாய மேம்பாட்டிற்காகவும் தொண்டாற்றினார்.

17. பாட்டுப் பரம்பரை பாரதிதாசனை பின்பற்றி உருவானது.

18. சாலையில் இந்திரனுடைய பாட்டி அவரை  "சொக்கன்" என்று அழைத்தார்.

19. எழுத்து சீர்திருத்த மாநாடு, அறிவியல் மாநாடு, விழிப்புணர்வு மாநாடு, தமிழ் மாநாடு ஆகிய மாநாடுகளை நடத்தியவர் சாலை இளந்திரையன்.


சாலை இளந்திரையன் பெற்ற விருதுகள்:

* 1991 இல் தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்றார்.


சாலை இளந்திரையன் வேறு பெயர்கள்:

1. பிள்ளைப் பாண்டியன்

2. காஞ்சித் தலைவன்

3. களக்காடு சா. பெரிய பெருமாள்

4. வீதியூர் நீதிகிழார் 


சாலை இளந்திரையன் எழுதிய நூல்கள்:

1. தாய் எழில் தமிழ்

2. சிலம்பின் சிறுகதை

3. உள்ளது உள்ளபடி

4. புரட்சி முழக்கம் & உரை வீச்சிசு (தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசை பெற்றுள்ளது)

5. காக்கை விடு தூது

6. ஏழாயிரம் எரிமலைகள்

7. காவல் துப்பாக்கி

8. வீறுகள் ஆயிரம் 

9. நடைகொண்ட படைவேழம் 

10. காலநதி தீரத்திலே 

11. அன்னை நீ ஆட வேண்டும்

12. கொட்டியும் ஆம்பலும்

13. நஞ்சருக்குப் பஞ்சனையா ?

14. பூத்தது மானுடம்









Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...