Skip to main content

தமிழ் கடித இலக்கியம் - நேரு கடிதம் .....

தமிழ் கடித இலக்கியம் - நேரு


இயற்பெயர்: ஜவஹர்லால் நேரு (பண்டிட் நேரு, பண்டிதர் நேரு).

பெற்றோர்கள்: மோதிலால் நேரு (வழக்குரைஞர்) சுவரூப ராணி.

பிறந்த ஊர்: அலகாபாத் (உத்திரப்பிரதேச மாநிலம்).

வாழ்ந்த காலம்:  (14 -11-1889 முதல் 27-05 -1964).


ஜவஹர்லால் நேரு பற்றிய முக்கிய குறிப்புகள்:

1. இந்தியாவின் முதல் பிரதமர் (தலைமை அமைச்சர்) நேரு. குடியரசுத் தலைவர் (ராதாகிருஷ்ணன்)

2. இவர் குழந்தைகள் மீது அன்பு கொண்டவர் ஆதலால் இவர் பிறந்த நாளன்று "இந்தியாவில் குழந்தைகள் தினமாக" கொண்டாடப்படுகிறது.

3. இந்திய நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களில் ஒருவர் ஜவகர்லால் நேரு ஆவார்.


நேரு அவர்கள் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதம்:

* நேருவின் அன்பு மகள் தான் இந்திராகாந்தி 1922ஆம் ஆண்டு முதல் 1964 ஆம் ஆண்டு வரை 42 ஆண்டுகள் தம் மகளுக்கு கடிதங்கள் எழுதிக் கொண்டே இருந்தார். 

* நேரு வெளிநாட்டுக்கு சென்ற பொழுதும், இந்தியாவில் இருந்த பொழுதும் மகளுக்கு கடிதங்கள் எழுதினார். சிறைச்சாலையில் இருந்த பொழுதும் கூட அவர் கடிதம் எழுதுவதை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* தாகூரின் "விஸ்வபாரதி கல்லூரியில்" இந்திராகாந்தி சேர்ந்த போது அவர் எழுதிய கடிதம் இது.

*  இந்திரா காந்தி சேர்ந்த விஸ்வபாரதி கல்லூரி "மேற்குவங்காளத்தில்"     சாந்திநிகேதன் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

* நேரு 1935 பிப்ரவரி மாதம் 22 இல் அல்மோரா மாவட்ட சிறையில் இருந்து மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதம்.

* அல்மோரா மாவட்டச் சிறை (உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ளது)

* நேரு இந்திரா காந்திக்கு செல்ல மகள் இந்து ! நான் சிறைச்சாலையில் நலமாக இருக்கிறேன் கிருபாலினி - ன் (விஸ்வபாரதி கல்லூரியில் பணிபுரிந்த ஆசிரியர்) உதவியுடன் படிக்க வேண்டிய பாடங்களை நீ படித்து முடித்து விட்டாயா?

* இப்படி பேராசிரியர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து கலந்துரையாடுவது நல்லது. வகுப்பில் உட்கார்ந்து பாடங்களை கேட்பதை விட இந்த அணுகுமுறை மிகவும் நல்லது என்று குறிப்பிட்டிருந்தார்.

* கேம்பிரிட்ஜ் (இங்கிலாந்து) பல்கலைக்கழகத்தில் நான் படிக்கும் போதும் அது தான் நிலைமை வகுப்பறையில் நடக்கும் உரையாடல்களுக்கு நாங்கள் பெரிய முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம். ஆசிரியர்களை தனியாக சந்தித்து உரையாடும்.

* அத்தகைய உரையாடல் எங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் பயன் உடையதாக இருந்தது.

* நீ படிக்கும் "சாந்திநிகேதனில்" இத்தகைய நடைமுறை இருக்கிறதா? என்பது எனக்கு தெரியவில்லை இல்லாவிட்டால் என்ன? ஆசிரியர்களை தனியே சந்தித்து உரையாடும் பழக்கத்தை நீ கடைபிடி.

* நீ வாசிப்பதற்காக அவ்வப்போது புத்தகங்களை நான் அனுப்பலாமா? என கேட்டு இருந்தேன். நீயும் அனுப்பச் சொல்லி எழுதி இருக்கிறாய்.

*  இப்போது எனக்குள் திகைப்பு என்னவென்றால், உனக்கு எப்படிப்பட்ட புத்தகங்களை அனுப்புவது என்பது தான்.

* புத்தகம் வாசிப்பது கடமையாக ஆக்குதல் கூடாது; கட்டாயப்படுத்தக் கூடாது அப்படிச் செய்தால் புத்தக வாசிப்பு மகிழ்ச்சியைத் தராது. வெறுப்பே உண்டாகும். அதுமட்டுமன்று அந்த  புத்தகத்தையும் வாசிக்க ஆசை வராது.

* முன்பு எல்லாம் நம்முடைய பாடப்புத்தகங்களும், தேர்வுகளும் இப்படி வெறுப்பு உண்டாகும் விளைவு தான் செய்தன.

* ஷேக்ஸ்பியர், மில்டன் முதலியோர் எவ்வளவு அற்புதமான ஆங்கில படைப்பாளிகள்! என்று தெரியுமா உனக்கு?

* ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான புத்தகம் பிடிக்கும் வயது ஆக ஆக விருப்பம் மாறும். 

* உனக்கு என்ன புத்தகம் வாசிக்க பிடிக்கும் என சொல்? உனக்கு கவிதை வாசிக்க பிடிக்குமா? அல்லது வரலாறு, நாட்டுநடப்பு, பொருளாதாரம் முதலிய புத்தகங்கள் பிடிக்குமா? உன் ஈடுபாடு தெரிந்தபின் எந்தப் புத்தகம் வாசிக்கும் என்பது குறித்து உனக்கு எழுதுவேன் உன்மீது புத்தகங்களை திணிக்க விரும்பவில்லை என்று நேரு கூறினார்.

* சில புத்தகங்கள் பற்றி பொதுவாக பேசலாம். 

* பிளேட்டோவின் புத்தகங்கள் சுவையானவை, சிந்தனையை தூண்டுபவை ஆகும்.

* கிரேக்க நாடகங்கள் நம் ஆர்வத்தைத் தூண்டுபவை அவை சுருக்கமாகவும் இருக்கும் வாசிக்க எளிதாகவும் இருக்கும்.

* நாடகங்களைப் பற்றி பேசுகிறோம் அது சரி நீ காளிதாசனின் "சாகுந்தலம் நாடகத்தை" வாசித்து இருக்கிறாயா? அது வாசிக்க வேண்டிய நூல்.

* சென்ற ஆண்டு டால்ஸ்டாயின் "போரும் அமைதியும்" எனும் நாவலை வாசிக்க போவதாக சொன்னாய்; வாசித்து விட்டாயா? உலகின் மிகச் சிறந்த நூல்களுள் இதுவும் ஒன்று.

* "பெர்னாட்ஷாவின்" பல நூல்களை நீ வாசிக்கவில்லை அவருடைய நூல்கள் வாசிக்க தகுந்தவை.

* எனக்கு மிகவும் பிடித்தமானவர் "பெட்ரண்ட் ரஸ்ஸல்" அவருடைய ஆங்கிலம் அருமையானது, அறிவார்ந்த எழுத்து அவருடையது.

* நாம் ஏன் புத்தகம் வாசித்தல் வேண்டும் அறிவு பெறுவதற்காக, மகிழ்ச்சி அடைவதற்காக என பல காரணங்களை சொல்லலாம் அவை உண்மைதான். ஆனால், இதற்கு மேலும் ஒரு காரணம் உண்டு. 

* ஆயிரம் முகங்கள் கொண்டது வாழ்க்கை அதை புரிந்துகொள்ளவும், முறையாக வாழவும் புத்தகப் படிப்பு இன்றியமையாதது.

* தனி ஒரு மனிதனின் பட்டறிவு மிகவும் குறுகியது. புத்தகங்களில் மனிதர்களின் ஏராளமான பட்டறிவு சிந்தனைகள் அடங்கியுள்ளன. அவற்றை வாசிக்கும்போது நாம் வசிக்கும் சிறு மூளையில் இருந்து வெளியேறுகிறோம்.

* இதுவரை பார்க்காத உலக காட்சிகளை பார்க்கும் உணர்வை பெறுகிறோம் என்று நேரு கூறியிருந்தார்.


தமிழ் கடித இலக்கியம் நேரு அவர்கள் எழுதியக் கடிதத்தில் வரும்  முக்கிய வினா விடைகள்: 

1. கேம்பிரிட்ஜ் - இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகம்.

2. ஷேக்ஸ்பியர் - ஆங்கில நாடக ஆசிரியர்.

3. மில்டன் - ஆங்கிலக் கவிஞர்.

4. பிளேட்டோ - கிரேக்க சிந்தனையாளர்.

5. காளிதாசர் - வடமொழி நாடக ஆசிரியர்.

6. டால்ஸ்டாய் - ரஷ்ய நாட்டு எழுத்தாளர்.

7. பெர்னாட்ஷா - ஆங்கில நாடக ஆசிரியர்.

8. பெட்ரண்ட் ரஸ்ஸல் - சிந்தனையாளர்; கல்வியாளர்.

9. அல்மோரா சிறை - உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ளது.

10. கிருபாளினி - விஸ்வபாரதியில் பணிபுரிந்த பேராசிரியர். 



Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...