நாட்டுப்புற பாட்டு
* ஒருவர் பாடிக் கொண்டிருக்கும்போது கேட்டுக்கொண்டிருக்கும் இன்னொருவர் அப்படியே மனதில் வாங்கி தானும் பாடிப்பாடி பழகி விடுகிறார்.
* இப்படி தாளில் எழுதப்படாத பாடல்கள் "நாட்டுப்புற பாடல்கள்" எனப்படுகிறது.
* எழுத்து வழியாக வராமல் பாடிப்பாடி வாய்வழியாக பரவுகிற பாட்டு நாட்டுப்புற பாட்டு.
* இதைப்போல் எழுதப்படாத எல்லோருக்கும் தெரிந்த கதைகளும் உண்டு. இதனை "வாய்மொழி இலக்கியம்" என்று கூறுவர்.
* முன்னர் காலத்தில் நாட்டுப்புற பாடல் "கிராமிய பாடல்" என்று அழைக்கப்பட்டது.
* சென்னை போன்ற பெரு நகரங்களில் மக்கள் பாடும் நாட்டுப்புறப் பாடல் "கானா பாடல்" என்று அழைக்கப்படுகிறது.
* நாட்டுப்பறப்பாட்டு ஒருவர் பாடியது போல அப்படியே இன்னொருவர் பாடுவது இல்லை. இதுவே நாட்டுப்புறப் பாடலின் தனிச்சிறப்பு எனலாம்.
நாட்டுப்புறப் பாடல் எத்தனை வகைகள்:
நாட்டுப்புற படல் ஏழு வகைப்படும் அவைகள் பின்வருமாறு காணலாம்.
1. தாலாட்டு பாட்டு
2. விளையாட்டு பாட்டு
3. தொழில் பாட்டு
4. சடங்கு பாட்டு
5. கொண்டாட்டப் பாட்டு
6. வழிபாட்டு பாட்டு
7. ஒப்பாரி பாட்டு
1. தாலாட்டு பாட்டு:
* பிறந்த குழந்தைக்காக தாய் தொட்டிலிட்டு பாடும் பாட்டு தாலாட்டு பாட்டு எனப்படும்.
* தாலாட்டு = தால் + ஆட்டு
தால் = நாக்கு
* தாலாட்டு என்றால் "நாக்கை அசைத்து பாடுதல்" என்பது பொருள்.
2. விளையாட்டு பாட்டு:
* கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் பாடுவது விளையாட்டு பாட்டு.
3. தொழில் பாட்டு:
* "களைப்பு நீங்க" வேலை செய்வோர் பாடுவது தொழில் பாட்டு ஆகும்.
* ஏற்றப்பாட்டு ( தொழில் பாட்டு) என்றும் அழைக்கப்படுகிறது.
4. சடங்கு பாட்டு & கொண்டாட்ட பாட்டு:
* திருமணம் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் பாடுவது சடங்கு மற்றும் கொண்டாட்ட பாட்டு என்று அழைக்கப்படுகிறது.
5. வழிபாட்டு பாட்டு:
"சாமி கும்பிடுவோர் பாடுவது" வழிபாட்டு பாடல் எனப்படும்.
6. ஒப்பாரி பாட்டு:
* இறந்தோர்க்கு பாடுவது "ஒப்பாரி பாட்டு" எனப்படும்.
* இவருக்கு ஒப்பாவர் ஒருவரும் இலர் என இறந்தவரை பாடுவது ஒப்பாரி பாடல் ஆகும்.
நாட்டுப்புற பாடல் பற்றிய முக்கிய சிறப்பம்சங்கள்:
1. நாட்டுப்புறப்பாட்டு தமிழர்கள் வாழ்க்கை முறையைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
2. "நாட்டுப்புற இயல் ஆய்வு" என்ற நூலைத் தொகுத்தவர் சு. சக்திவேல்.
நாட்டுப்புறப் பாடல்களுக்கு எடுத்துக்காட்டு:
"ஆராரோ ஆரிரரோ ஆராரோ
ஆரிராரோ கண்ணே கண்மணியே
ஆரடிச்சு நீ அழுதே!
அடிச்சாரைச் சொல்லி அழு
ஆராரோ ஆரிரரோ"......
நாட்டுப்புற பாடல்களில் விழிப்புணர்வு பாடலுக்கு எடுத்துக்காட்டு:
"ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா
காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி
காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்"
நாட்டுப்புறப் பாடல்களில் விளையாட்டு பாடல்களுக்கு எடுத்துக்காட்டு:
1. "ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சாம்
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்துச்சாம்"
2. "கொழுக்கட்டை கொழுக்கட்டை ஏன் வேலை?
அடுப்பு எரியல நான் வேகல.
அடுப்பே அடுப்பே ஏன் எரியல?
மழை பெய்தது நான் எரியல.
மழையே மழையே ஏன் பெய்தே?
புல்லு வளர நான் பெய்தேன்.
புல்லே புல்லே ஏன் வளர்ந்தே?
மாடு திண்ண நான் வளர்ந்தேன்.
மாடு மாடு ஏன் தின்றாய்?
மாட்டுக்காரன் அவிழ்த்துவிட்டான் நான் தின்றேன்.
மாட்டுக்கார மாட்டுக்கார என் அவிழ்த்துவிட்டே?
குழந்தை அழுதது நான் அவிழ்த்து விட்டேன்.
குழந்தை குழந்தை ஏன் அழுதே?
எறும்பு கடிச்சது நான் அழுதேன்.
எரும்பே எரும்பே ஏன் கடிச்சே?
என் புற்றிலே கால்வச்சா, நான் சும்மா இருப்பேனா?