Skip to main content

புதுக்கவிதை - கவிஞர் (ஞானக்கூத்தன்) வாழ்க்கை வரலாறு....

 புதுக்கவிதை - கவிஞர் (ஞானக்கூத்தன்)


இயற்பெயர்: அரங்கநாதன்

பிறந்த வருடம்: 07 - 10 - 1938

இறந்த வருடம்: 27 - 07 - 2016 (சென்னை - திருவல்லிக்கேணி)

பிறந்த ஊர்: நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகே உள்ள           திருஇந்தளூர்.


ஞானக்கூத்தன் பணியாற்றிய இதழ்கள்:

*  இவரின் கவிதைகள் கல்கி, காலச்சுவடு மற்றும் உயிர்மை போன்ற இதழ்களில்  வெளிவந்துள்ளன.

* ராமகிருஷ்ணன், சா. கந்தசாமி , நா.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து ஞானக்கூத்தன் தொடங்கிய இதழ் "கசடதபற".

* "கசடதபற" என்னும் இதழைத் தொடங்கியவர் கவிஞர் ஞானக்கூத்தன் ஆவார்.

* "கவனம்" என்ற சிற்றிதழை தொடங்கியவர் ஞானக்கூத்தன்.

* "ழ" இதழின் ஆசிரியர்களில் ஆத்மநாம் மற்றும் ராஜகோபாலன் உடன் இவரும் ஒரு ஆசிரியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இவர் மையம் விருட்சம் (தற்போது நவீன விருட்சம்) மற்றும் கணையாழி பத்திரிக்கைகளில் தன் பங்களிப்பை அளித்தார்.

* க.நா. சுப்பிரமணியத்தின் "இலக்கிய வட்டம்" சி. மணியின் "நடை" போன்ற சிற்றிதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளது.


ஞானக்கூத்தன் பற்றிய முக்கிய குறிப்புகள்:

1. 1968ல் இருந்து  முதன்முதலாக கவிதை எழுத ஆரம்பித்தார்.

2. இவர் "பிரச்சினை" என்கின்ற கவிதையில் மூலம் அறிமுகமானவர்.

3. 1998 இல் இவரது கவிதைகள் "ஞானக்கூத்தன் கவிதைகள்" என்கின்ற பெயரில் வெளியிடப்பட்டது.


ஞானக்கூத்தன் பெற்ற விருதுகள்:

1. 2010 கவிதைக்காக "சாரல்" விருதினை பெற்றார்.

2. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வழங்கும் இலக்கிய பங்களிப்பிற்காக "விஷ்ணுபுரம் விருது" 2014 இல் பெற்றார்.

3. 2004ஆம் ஆண்டு "விளக்கு விருது" பெற்றார்.


ஞானக்கூத்தன் எழுதிய நூல்கள்:

* கவிதை நூல்கள்:

1. இம்பர்  உலகம் 

2. அன்று வேறு கிழமை

3. சூரியனுக்குப்  பின்பக்கம் 

4. கடற்கரையில் சில மரங்கள்

5. ஞானக்கூத்தன் கவிதைகள்

6. பென்சில் படங்கள்

7. மீண்டும் அவர்கள்

8. என் உளம் நிற்றி நீ

9. அலைகள் இழுத்த பூமாலை

10. நம்மை அது தப்பாதோ?

11. கனவு பல காட்டல்

12. சொன்னதைக் கேட்ட ஜன்னல் கதவு.


ஞானக்கூத்தன் எழுதிய கட்டுரைகள்:

1. கவிதைக்காக(திறனாய்வு நூல்)

2. கவிதைகளுடன் ஒரு சம்வாதம்.


கவிஞர் ஞானக்கூத்தன் இவ்வுலகை விட்டு மறைந்த பின்னர் தமிழ் படைப்பாளிகள் சமூகவலைத்தளங்களில் பதிந்த அஞ்சலிக் குறிப்புகள்:

* கவிஞர் வண்ணதாசன்:

மகா ஸ்வேதா தேவி, வாலேஸ்வரன், ஞானக்கூத்தன்... முதிய பறவைகள் எல்லாம் இன்று கூடு திரும்பிவிட்டன. கிளைகளிலும் வானத்திலும் காணப்படாத கூடுகளுக்கு....

* கவிஞர் வசந்தபாலன்:

மிக முக்கிய கவி ஞானக்கூத்தன் மறைவுச் செய்தி மனதை பிசைகிறது..

* கவிஞர் ரவிக்குமார்:

தமிழின் சிறந்த கவிஞர்களில் ஒருவரும் நல்ல மனிதரும் ஆன ஞானக்கூத்தன் மறைந்த செய்தி மிகுந்த வருத்தத்தைத் தருகிறது..

* கவிஞர் சல்மா:

கவிஞர் ஞானக்கூத்தன் அவர்களது மரணம் பெரும் அதிர்ச்சியும் சோகமும் இன்றைய அதிகாலையை வெறுமையாக மாற்றி இருக்கிறது (:-கவிக்கு ஏது மரணம்?)





Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...