Skip to main content

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை வாழ்க்கை வரலாறு

 நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கம் பிள்ளை:


கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை பழைய சேலம் மாவட்டம் தற்போது உள்ள  நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் எனும் ஊரில் வெங்கட்ராமன் மற்றும் அம்மணியம்மாள் என்ற தம்பதிக்கு எட்டாவது குழந்தையாக பிறந்தவர் தான்"நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை".


இராமலிங்கனார் - இன் தந்தை மோகனூரில் காவல் துறையில் பணிபுரிந்து வந்தவர். இவரது தாயார் மிகுந்த பக்தியுடன் விளங்கி வந்தார்.


நாமக்கல் மற்றும் கோயம்புத்தூரில் பள்ளிக் கல்வி பயின்ற இவர் 1909 இல் திருச்சி மாவட்டத்தில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் BA படித்தார்.


இவர் ஆரம்ப காலத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் எழுத்தாளராகவும், பின்பு தொடக்கப் பள்ளி ஆசிரியராகவும் பணி புரிந்து வந்தார்.


பின்னர் வே ராமலிங்கம் பிள்ளை திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரஸின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர்.


தேசபக்தி மிக்க கொண்ட தனது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றினார். மேலும் இவர் அரசின் தடை உத்தரவுகளை மீறி மேடையில் சொற்பொழிவு ஆற்றும் வல்லமை கொண்டவர்.


1930 இல் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கு கொண்டு "ஓராண்டு சிறை தண்டனை அடைந்தார்".


தமிழ்நாட்டில் முதல் "அரசவைக் கவிஞர்" என்ற பதவியையும்,"பத்மபஷன்" எனும் விருதையும் பெற்றவர் இவரே. 


நாமக்கல் கவிஞரின் நாட்டுப்பற்று பாடல்:

முத்தமிழிலும், ஓவியக் கலையிலும் வல்லமை பெற்ற இவர். சிறந்த விடுதலைப் போராட்ட வீரராகவும், உப்பு சத்தியாக்கிரகத்தின் போது  இளைஞர்களின் உணர்ச்சிகளை மேலோங்கும் வகையில் 

'கத்தி யின்றி ரத்த மின்றி                               யுத்த மொன்று வருகுது                                சத்தி யத்தின் நித்தி யத்தை                         நம்பும்  யாரும் சேருவீர் '

என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தின் போது தொண்டர்களின் வழிநடைப் பாடலாக பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.

'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' எனும் தேச பக்தி பாடலை  பாடியவர். தேசியத்தையும் காந்தியையும் போற்றியவர்  இவரே. முதலில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் "மகாத்மா காந்தியின் கொள்கைகளால்" ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலை பெற முடியும் என்று முடிவுக்கு வந்தார்.

**இவருடைய கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி அமைந்துள்ளதால் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுகிறார்.


நாமக்கல் கவிஞரின் படைப்புகள்:

1. இசை நாவல்கள் - 3

2. கட்டுரைகள் - 12

3. தன் வரலாறு - 3

4. புதினங்கள் - 5

5. இலக்கியத் திறனாய்வுகள் - 7

6. கவிதைத் தொகுப்புகள் - 10

7. சிறு காப்பியங்கள் - 5

8. மொழிபெயர்ப்புகள் - 4 


நாமக்கல் கவிஞர் இயற்றிய நூல்கள்:

1. மலைக்கள்ளன் (நாவல்)

2. காணாமல் போன கல்யாணப் பெண் (நாவல்)

3. பிராத்தனை (கவிதை)

4. நாமக்கல் கவிஞர் பாடல்கள்

5. திருக்குறளும் பரிமேலழகரும்

6. திருவள்ளுவர் திடுக்கிடுவார்

7. திருக்குறள் புது உரை

8. கம்பனும் வால்மீகியும்

9. கம்பன் கவிதை இன்பக் குவியல்

10. என்கதை  (சுயசரிதம்)

11. அவனும் அவளும் (கவிதை)

12. சங்கொலி (கவிதை)

13. மாமன் மகள் (நாடகம்)

14. அரவணை சுந்தரம் (நாடகம்)


நாமக்கல் கவிஞரின் புகழ்பெற்ற மேற்கோள்கள்:

"கத்தி யின்றி ரத்த மின்றி                                    யுத்த மொன்று வருகுது"

"தமிழன் என்றோர் இனமுண்டு                       தனியே அவர்க்கோர் குணமுண்டு"

"தமிழன் என்று சொல்லடா                                 தலை நிமிர்ந்து நில்லடா"

"கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்         கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்"


மத்திய அரசும், மாநில அரசும் கவிஞர்  ராமலிங்கம் பிள்ளை நினைவு பரிசாக:

கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும் மற்றும் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும், மத்திய அரசுு அவரை பத்ம பூஷன் விருது அளித்துுு பெருமைப்படுத்தியது. 


நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம்:


1.தற்போது தமிழ் நாட்டின் தலைநகரமான  சென்னையில் உள்ள தலைமை செயலகத்தின் பத்து மாடி கட்டிடத்திற்கு இவர் பெயரை சூட்டியுள்ளது.

2.தட்டாரத் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த இவர் வாழ்ந்த தெரு கவிஞர் ராமலிங்கம் தெரு என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

3. சேலம் மாவட்டத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் நாமக்கல் கவிஞரின் உடைகள் வைக்கப்பட்டுள்ளன.


4. தமிழக அரசு இவர் வாழ்ந்த நாமக்கல் மாவட்டத்தில் மோகனூரில்  உள்ள இவர் வீட்டினை நாமக்கல் கவிஞர்               வெ. இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லமாக மாற்றியது.




 



Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...