Skip to main content

பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு

** பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு:


புரட்சிக்கவி என்று பலராலும் அறியப்பட்ட புதுவை (பாண்டிச்சேரி) மாநிலத்தில் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 தில்   செங்குந்தர் கைக்கோள முதலியார்  மரபில் பெரிய வணிகராக இருந்த கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாளுக்கு பிறந்தவர்தான் "பாரதிதாசன்".
பாரதிதாசனின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம் இவர் 1920 ஆம் ஆண்டு பழநி அம்மையாரை மணந்தார்.


** பாரதியார் மீது பற்று கொண்ட பாரதிதாசன்:

தமிழ்மொழி மீது பற்றுக் கொண்ட பாரதிதாசன் அவரது மானசீக குருவாகக் கருதப்படுகிற பாரதியாரின் பாடலை தனது நண்பனின் திருமண விழாவில் பாடி அவ்விழாவில் பாரதியை நேரில் பார்த்து சந்திக்கவும் செய்தார்.   பிறகுுு பாரதியாரிடம் இருந்து பாராட்டு பெற்றதோடுு மட்டுமல்லாமல்  அவரிடமிருந்துுு நட்பும் தொடங்கியதுு.   அன்றுு முதல் பாரதிதாசன் தன் இயற்பெயரான கனகசுப்புரத்தினம் எனும் பெயரை "பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்".  



** பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற வரிகள்:

"எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே".

"புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்".

"தமிழுக்கு அமுதென்று பேர் - அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்".

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு".


** திரையுலகில் பாரதிதாசனின் பங்களிப்பு:
திராவிட இயக்க தலைவர்களில் முதன் முதலாக திரைப்படத் துறைக்குள் நுழைந்தவர் பாரதிதாசன் ஆவார். 1937 ஆம் ஆண்டில் முதன் முதலாக திரைப்படத்துறைக்குள் நுழைந்த பாரதிதாசன் தன் இறுதி நாள் வரை அத்துறைக்கு கதை, திரைக்கதை, உரையாடல், பாடல், படத்தயாரிப்பு என பல்வேறு கோணங்களில் தனது பங்களிப்பை ஆற்றியவர்.


** பாரதிதாசன் இயற்றிய நூல்கள்:

1. அகத்தியன் விட்ட புதுக்கரடி
2. சத்திமுத்தப் புலவர்
3. இன்பக் கடல்
4. அமைதி
5. அமிழ்து எது
6. அழகின் சிரிப்பு
7. இசையமுது - முதல் தொகுதி
8. இசையமுது - இரண்டாம் தொகுதி
9. இந்தி எதிர்ப்புப் பாடல்கள்
10. இரணியன் அல்லது இணையற்ற வீரன்
11. இருண்ட வீடு
12. இலக்கியக் கோலங்கள்
13. இளைஞர் இலக்கியம்
14. உலகம் உன் உயிர்
15. உலகுக்கோர் ஐந்து ஒழுக்கம்
16. எதிர்பாராத முத்தம்
17. எது இசை
18. ஏழைகள் சிரிக்கிறார்கள்
19. ஏற்றப்பாட்டு
20. ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது
21. கடல் மேல் குமிழிகள்
22. கண்ணகி புரட்சிக் காப்பியம்
23. கதர் ராட்டினம் பாட்டு
24. கவிஞர் பேசுகிறார்
25. கழைகூத்தியின் காதல்
26. கற்கண்டு
27. காதலா? கடமையா?
28. காதல் நினைவுகள்
29. காதல் பாடல்கள்
30. குடும்ப விளக்கு -முதல் பகுதி ஒரு நாள் நிகழ்ச்சி
31. குடும்ப விளக்கு - இரண்டாம் பகுதி விருந்தோம்பல்
32. குடும்ப விளக்கு- மூன்றாம் பகுதி திருமணம்
33. குடும்ப விளக்கு -நான்காம் பகுதி மகப்பேறு
34. குடும்ப விளக்கு -ஐந்தாம் பகுதி முதியோர் காதல்
35. குமரகுருபரர்
36. குயில் பாடல்கள்
37. குறிஞ்சித்திட்டு
38. கேட்டலும் கிளத்தலும்
39. கோயில் இரு கோணங்கள்
40. சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
41. சிரிக்கும் சிந்தனைகள்
42. சிறுவர் சிறுமிகளின் தேசியகீதம்
43. சுயமரியாதை சுடர்
44. சௌமியன்
45. சேரதாண்டவம்
46. தமிழச்சியின் கத்தி
47. தமிழியக்கம்
48. தமிழுக்கு அமுதென்று பேர்
49. தலைமலை கண்ட தேவர்
50. தாயின் மேல் ஆணை
51. தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு
52. திராவிடர் திருப்பாடல்
53. திராவிடப் புரட்சி திருமண திட்டம்
54. தேனருவி
55. தொண்டர் வழிநடை பாட்டு
56. நல்ல தீர்ப்பு
57. நாள் மலர்கள்
58. படித்த பெண்கள்
59. பன்மணித்திரள்
60. பாட்டுக்கு இலக்கணம்
61. பாண்டியன் பரிசு
62. பாரதிதாசன் ஆத்திச்சூடி
63. பாரதிதாசன் கதைகள்
64. பாரதிதாசன் கடிதங்கள்
65. பாரதிதாசன் கவிதைகள் -முதல் பகுதி
66. பாரதிதாசன் கவிதைகள் - இரண்டாம் பகுதி
67. பாரதிதாசன் கவிதைகள் - மூன்றாம் பகுதி
68. பாரதிதாசன் கவிதைகள் - நான்காம் பகுதி
69. பாரதிதாசனின் நாடகங்கள்
70. பாரதிதாசன் எழுதிய நாடகங்கள்
71. பாரதிதாசனின் புதினங்கள்
72. பாரதிதாசன் பேசுகிறார்
73. பாரதிதாசன் திருக்குறள் உரை
74. பாவேந்தர் பாரதிதாசன் திரை தமிழ்
75. பிசிராந்தையார்
76. புகழ் மலர்கள்
77. புரட்சிக்கவி
78. பொங்கல் வாழ்த்துக் குவியல்
79. மணிமேகலை வெண்பா
80. மயிலம் சுப்பிரமணியர் துதியமுது
81. மயிலம் ஸ்ரீ சிவசண்முககடவுள் 
பஞ்சரத்னம்
82. மயிலம் ஸ்ரீ சண்முகம் 
வண்ணப்பாட்டு
83. மானுடம் போற்று
84. முல்லைக் காடு
85. வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமே?
86. வேங்கையே எழுக 


** பாரதிதாசன் தனி சிறப்பு பெயர்கள்:

1. பாவேந்தர் பாரதிதாசன்
2. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 



** பாரதிதாசன் பெற்ற சிறப்பு மிக்க விருது:

சாகித்திய அகடாமி விருதினைப் பெற்றவர்.




Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...