Skip to main content

அழகர் கிள்ளை விடு தூது - பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

 அழகர் கிள்ளை விடு தூது - பலபட்டடை சொக்கநாதப் புலவர்.

அழகர் கிள்ளைவிடு தூது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தூது வகை இலக்கியங்களில் ஒன்றான அழகர் கிள்ளைவிடு தூது பற்றி சற்று விரிவாக இங்கே காணலாம்.


அழகர் கிள்ளைவிடு தூது நூல் வரலாறு:

பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் ஆல் திருமாலிருஞ்சோலை மலையில் கோயில் கொண்டிருக்கும் அழகர் "கிளியை தூது விடுத்து "பாடிய பாடல் தான் "அழகர் கிள்ளை விடு தூது" நூல் ஆகும்.

அழகர் கிள்ளை விடு தூது காப்பு வெண்பா ஒன்றையும், 239 கன்னிகள் கொண்ட நூலாகும்.

இவர் மதுரை நகரை சேர்ந்தவர்.

இவர் ஏறக்குறைய 250  ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் ஆக கருதப்படுகிறார்.

பலபட்டடைச் சொக்கநாத புலவர் என் தந்தையின் பெயர் சொக்கலிங்கம் பிள்ளை.



பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் செய்யும் தொழில் யாது:

இவர் பலபட்டடை கணக்கு செய்யும் தொழில் செய்ததால் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எனும் பெயர் வந்தது.


பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய வேறு நூல்கள்:

1. மதுரை மும்மணிக்கோவை

2. யமக அந்தாதி

3. தென்றல் விடு தூது

4. கன்னிவாடி நரசிங்கர் மேல் பாடிய வளமடல் 

5. தேவை உலா.



அழகர் மலைக்கு இருக்கும் வேறு பெயர்கள்:

1. திருமாலிருஞ்சோலை

2. இடப கிரி

3. தென் திருப்பதி

4. சஞ்சீவி பர்வதம்

5. பழமுதிர்ச்சோலை.

மேலும் கிள்ளைவிடு தூது வில் அழகர்மலை சிறப்புகள், இறைவன் சிறப்புகள் ஆகியவற்றை இடம்பெறுகின்றன.


கிள்ளைவிடு தூது நூல் அமையக் காரணம்:

அழகர்மலை கடவுள் மீது காதல் கொண்ட பெண்ணொருத்தி தன் காதலை அவளிடம் கூற கிளியை தூது அனுப்புவதாக அமைய பாடப்பட்ட நூல் தான் " அழகர் கிள்ளை விடு தூது".



அழகர் கிள்ளைவிடு தூது வின் சிறப்புகள்:

அழகர் கிள்ளை விடு தூது நூலில் முதலில் கிளியின் பெருமையை உணர்த்துகிறது.

அடுத்து கோடை திருவிழாவில் அழகர் உலா வரும் அழகும், அப்பெருமான் இடம் தலைவி தன் உள்ளம் இழந்த வரலாற்றை கூறப்படுகிறது.

இறுதியாக அழகரிடம் தன் காதலைத் தெரிவித்து அவருடைய மாலை ஒன்றை வாங்கி வருமாறு கிளியிடம் தூது விடுவதாக நூல் அமைகிறது.


இம்மலையை பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ள நூல்கள் பின்வருமாறு:

1. சாமி கவி காளருந்திரர் பாடிய பிள்ளைத்தமிழ் 

2. கவிகுஞ்சர பாரதியார் இன் அழகர் குறவஞ்சி.


அழகர் கிள்ளைவிடு தூது நூலின் தனிச்சிறப்புகள்:

இந்நூலில் பல்வேறு புராண இதிகாச செய்திகள், பழக்க வழக்கங்கள், அழகர் கோயில் பூஜை வழிபாட்டு முறைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்நூலின் மூலத்தை முதன் முதலில் பதிப்பித்தவர் 1905 ஆண்டு 

மூ. வேணுகோபாலசாமி நாயுடு.

இந்நூலை பழைய ஏட்டுச் சுவடிகள் உடன் ஒப்பிட்டு அரிய குறிப்பு உரைகளுடன் 1837 ஆம் ஆண்டு உ. வே சாமிநாதையர் பதிப்பித்தார்.





Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...