மனோன்மணியம் - பெ . சுந்தரம்பிள்ளை

 மனோன்மணியம் - பெ. சுந்தரம் பிள்ளை.(ஏப்ரல் 4 - 1885).


மனோன்மணியம் நூல் ஓர் முன்னோட்டம்:

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய மனோன்மணியம் நூல் மொழி பற்றும், நாட்டுப் பற்றும், வீர உணர்வையும் ஊட்டுவதாக திகழ்கிறது. இதுு தமிழன்னை பெற்ற நல்ல அணிகளாகும். நாடகத் துறைக்கு தமிழில் நூல் இல்லையே எனும்் குறையைத் தீர்க்க வந்த மனோன்மணியம் ஒரு நாடக வடிவம் நூலாகும். மேலும் இந்நூல் காப்பிய இலக்கணம் முழுவதும் நிரம்பிய நூலாக விளங்குகிறது. இயற்கையில்் ஈடுபாடு கொண்டுு அதனில் தொய்வில்லாத இன்பமும், அமைதியும் பெற்றவர்கள்  தமிழர்கள் என்பதை உணர்த்தும் நூல் தான் "மனோன்மணியம்".

மனோன்மணியம் நூல் வரலாறு:

தமிழ் மொழியின் முதல் பா வடிவ நாடக நூல் தான் "மனோன்மணியம் நூல்" ஆகும். தமிழில் தோன்றிய நாடக இலக்கியங்களில் முதன்மையானது மனோன்மணியம் நூல் ஆகும். இந்த நூல் முழுவதும் செய்யுள் நடையிலேயே அமைந்த இந்நூலை  பெ. சுந்தரம் பிள்ளையால் எழுதி 1891 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

லிட்டன் பிரபு என்னும் ஆங்கிலேயர் எழுதிய "ரகசிய வழி( The secret way) எனும் நூலைத் தழுவி   மனோன்மணி நூலை ஓர் "இன்பியல் (comedy) நாடகமாக எழுதி உள்ளார்.

இந்நூல் ஒரு வரலாற்றுத் தொடர்புடையது போன்றும், தமிழ்நாட்டில் நிகழ்ந்தது போன்றும் எழுதப்பட்ட ஒரு கற்பனை புதினம் நூல் ஆகும்.

மனோன்மணியம் ஓர் அகராதி:

கேரள மாநிலத்தில் 1885 ஆம் ஆண்டு பிறந்த  பெ.சுந்தரம் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்ட மனோன்மணியம் என்னும் நூலினைப் பற்றி தெளிவான விளக்கம். இவருடைய தந்தை பெயர் பெருமாள் பிள்ளைை, தாயார் பெயர் மாடத்தி அம்மாள். சைவநெறி குடும்பத்தில் பிறந்த சுந்தரம் பிள்ளை இளமையிலே தேவார திருவாசகத்தில் வல்லமை பெற்றவராக திகழ்ந்தார். இவனதுு ஞான ஆசிரியர் கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் ஆவார்.


சுந்தரனார் வாழ்க்கையும் பணிகளும்:

1877 ஆம் ஆண்டு ஆசிரியர் பணிகளை தொடங்கிய சுந்தரனார் முதன்முதலில் திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச் சாலையில் பணிபுரிந்தார். பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத் துறையில் ஆசிரியராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் திருவனந்தபுரம் அரசர் அரண்மனை வருவாய் துறையில் தனி அலுவலராகப் பொறுப்பேற்றார். 1885 ஆம் ஆண்டு மறுபடியும் தத்துவத் துறையில் பேராசிரியராக பணி அமர்த்தப்பட்டார். இறுதிவரையில் சுந்தரம்பிள்ளை தத்துவதுறையிில் தலைமை பேராசிரியராக  இருந்தார். இறுதியில் தனது 42வது வயதில் 26.04.1897 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டுச் சென்றார்.

சுந்தரம்பிள்ளையின் படைப்புகள்:

இவரது முதல் படைப்பு நூற்றொகை விளக்கம் ஆகும். இந்த நூல் 1888 ஆம் ஆண்டு வெளிவந்தது. இரண்டாம் படைப்பு மனோன்மணியம் எனும் கவிதை நூல் 1891 ஆம் ஆண்டு வெளிவந்தது. அடுத்ததாக விதான் கூறின் பண்டை மன்னர்கள் எனும் ஆராய்ச்சி நூலை 1894 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

1895 ஆம் ஆண்டு திருஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி என்னும் நூலை வெளியிட்டார். நூல்கள் மட்டுமன்றி ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவற்றுள் குறிப்பிடத்தக்கது பத்துப்பாட்டு திறன் ஆய்வாகும். இது சென்னைை கிருத்துவ கல்லூரிிி இதழில் வெளிவந்ததுு.

தமிழ் ஆய்விலும் படைப்புகளிலும் கூடுதலான பணியைச் செய்த பேராசிரியர் இளமையில் மறைந்தது தமிழ் நாடக உலகத்திற்கே மிகப்பெரிய இழப்பு என கூறலாம்.

மனோன்மணியம் நூல் விளக்கம்:

மனோன்மணியம் மொத்தம் 5அங்கங்களாக உள்ளது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில் act என்று அழைக்கலாம். களம் என்பதை scene என்று குறிப்பிடலாம். 

அங்கங்கள் மற்றும் களங்கள்:

முதல் அங்கம் - 5 களங்கள் .

இரண்டாம் அங்கம் - 3 களங்கள்.

மூன்றாம் அங்கம் - 4 களங்கள்.

நான்காம் அங்கம் - 5 களங்கள்.

ஐந்தாம் அங்கம் - 3 களங்கள்.

மனோன்மணியம் என்னும் நூலானது மொத்தம் 5 அங்கங்களையும், 20 களங்களையும் பெற்று நாடக முழுமை பெற்றுள்ளது.

* மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் 1970 ஆம் ஆண்டு மனோன்மணியம் பெ. சுந்தரனார் பிள்ளை இயற்றிய  "நீராடும் கடலுடுத்த  நிலமடந்தைக் கெழிலொழுகும்" எனும் தொடங்கும் பாடலை தமிழ் தாய் வாழ்த்து பாடலாக அறிவித்தார்.






Post a Comment

Previous Post Next Post