Skip to main content

திருவேங்கடத்தந்தாதி - பிள்ளை பெருமாள் ஐயங்கார்

 திருவேங்கடத்தந்தாதி - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்.



அந்தாதி என்பது யாது:

சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றுதான் "அந்தாதி". அந்தம் இறுதி என்றும். ஆதி - முதல் என்றும் பொருள்படும்.

ஒவ்வொரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்து வரும் பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும்.

அந்தாதி - சொற்றொடர் நிலை என்று அழைக்கப்படுகிறது.


திருவேங்கடத்தந்தாதி என்பது யாது:

திருவேங்கடத்தில் கோயில் கொண்டிருக்கும் திருமாலின் அருளை வேண்டி பாடப்பெற்ற அந்தாதி நூல் தான் "திருவேங்கடத்தந்தாதி".



தெய்வ கவிஞர்
என்று பொருள்படும் திவ்யகவி என்று அழைக்கப்பட்ட 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அழகிய மணவாளதாசர் என்ற புனைப்பெயர் கொண்ட திருவேங்கடத்தந்தாதி என்ற சிற்றிலக்கிய நூலினை இயற்றிய "பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய நூல்கள் மற்றும் நூல் குறிப்பு ஆகியவற்றைத் தெளிவாக இங்கு காணலாம்.


பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்:

பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதியை "அஷ்டப் பிரபந்தம்"என்றுுு கூறுவர். 

"அஷ்டபிரபந்தம் கற்றவன் அரை பண்டிதன்"என்பதுு பழமொழி. இப்பழமொழிி இந்நூல்களின் உயர்வை உணர்த்துகிறது. இவரதுு பாடல்கள் அனைத்தும் சொல் நோக்கும், பொருள் நோக்கும், தொடை நோக்கும், நடை நோக்கும் கொண்டுுு ஒளிர்கின்றன.


பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இன் சிறப்பு:

கிபி 1623 முதல் கிபி 1659 வரை மதுரையை ஆண்ட "திருமலை நாயக்கர்"மன்னரின் அவையில் அலுவலராக அமர்ந்துு தன் வாழ்க்கை நடத்தினார்.

அஷ்டப்பிரபந்தம் என 8 சிற்றிலக்கியங்களை இயற்றியவர் "இரு மொழிப் புலமை பெற்றவராக"இருந்தார்.

நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கு பிறகு வைணவ சமய சார்பாக எழுந்த இத்தொகுதியை திவ்யப் பிரபந்தசாரம் என்றுுு அழைக்கப்படுகிறதுு. இதில் சிறப்பு என்னவென்றால் சொல்லணிகள் உள்ள "யமகம், திரிபு, சிலேடை முதலியன இதில் சிறந்துுு விளங்குகின்றன. 


பிள்ளை பெருமாள் ஐயங்கார் எழுதிய எட்டு சிற்றிலக்கியங்கள்:

1. அஷ்ட பிரபந்தங்கள்

2. திருவரங்கக் கலம்பகம்

3. திருவரங்கத்து மாலை

4. திருவரங்கத்து திருவந்தாதி

5. சீரங்க நாயகர் ஊசல்

6. திருவேங்கட மாலை

7. திருவேங்கடத்தந்தாதி

8. அழகரந்தாதி

9.108 திருப்பதி அந்தாதி.




Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

நாலடியார் நூல் விளக்கம் மற்றும் ஆசிரியர்கள் முழு விளக்கம்

  1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் முதன்மையான பாடப்படும் நூல் "நாலடியார்" 2. தமிழ் மொழிகளில் திருக்குறளோடு ஒப்பிட்ட பாடப்படும் நூல் "நாலடியார்" 3. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே ஒரு தொகை நூல் "நாலடியார்" 4 . முப்பெரும் அற நூல்களில் ஒன்றாக திகழும் நூல் "நாலடியார்" 5. முப்பெரும் நூல்கள் யாவை "திருக்குறள்" "நாலடியார்" "பழமொழி நானூறு" 6. துறவறத்தையும், நிலையாமையும் அதிகமாக வலியுறுத்தி பாடப்பட்ட நூல் "நாலடியார்" 7. திருக்குறளைப் போன்று வகை தொகை கொண்டு வடிவமைக்கப்பட்ட நூல் "நாலடியார்" 8 . நாலடியார் பிரித்து எழுதுக "நாலடி  + ஆர்" 9. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறம் சார்ந்த நூல் எது "நாலடியார்" 10 . நாலடியார் என பெயர் வரக் காரணம் "நாலடி கொண்ட வெண்பாவால் எழுதப்பட்டதால் நாலடியார் என பெயர் பெற்றது" 11. நாலடியார் பாடலைப் பாடியவர்கள் "சமணமுனிவர்கள் பலரால்" 12 . நாலடியார் அடி எல்லை "4 அடிகள்" 13. நாலடியார் பாடல் உணர்த்தும் பொருள் "அறம் -...