SEPTEMBER CURRENT AFFAIRS 2020

 


TNUSRB POLICE EXAM CURRENT AFFAIRS SEPTEMBER 2020

1.இந்திய கடற்படையில் மிக நீண்டகாலம் பயன்படுத்திய எந்த போர்க் கப்பல் தற்போது உடைக்கப்பட உள்ளது ஐ.என்.எஸ். விராட்.(குஜராத்தில் அலாங் எனும் கப்பல் உடைக்கும் ஆலையில் உடைக்கப்பட உள்ளது).

2. இந்திய ரயில்வே தொலை கட்டுப்பாட்டு மருத்துவத் தள்ளு வண்டியை உருவாக்கி உள்ளது. அதன் பெயர் மெட்பாட்(MEDPOT).

3. லெபனானின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளவர் முஸ்தபா ஆதிப்.

4. தேசிய ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்கப்படும் மாதம் எது மற்றும் தேசிய ஊட்டச்சத்து வாரம் எப்போது செப்டம்பர் மாதம் & தேசிய ஊட்டச்சத்து வாரம் செப்டம்பர் 1-7.

5. மத்திய அரசு அதிகாரிகளின் திறனை மேம்படுத்துவதற்கான திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது அத்திட்டத்தின் பெயர் மிஷின் கர்மயோகி.

6. உலகின் மிகப்பெரிய சூரிய ஆற்றல் தயாரிப்பு நிறுவனமாக உருவாகியுள்ள நிறுவனத்தின் பெயர் அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட்.

7. உலக அறிவுசார் சொத்து அமைப்பு வெளியிட்டுள்ள உலகளாவிய புதுமை குறியீட்டு தரவரிசை பட்டியலில் இந்தியா எத்தனையாவது  இடம் பெற்றுள்ளது நாற்பத்தி எட்டாவது இடம் (48th place).

8. நீதிமன்றத்தை அவமதித்தற்காக இந்திய உச்ச நீதிமன்றம் மூத்த வக்கீல் பிரசாந்த்  பூஷண்க்கு விதித்த அபராதம் எவ்வளவு ரூபாய் 1.

9. உள்நாட்டு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பின் முதல் பெண் இயக்குனர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளவர் உஷா பாதி ஐ.ஏ.எஸ்.

10. ஹாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த 8 நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் சிறப்பு கூடுகை எங்கு நடைபெற்றது ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ (4-9-2020).

11. இந்தியாவில் அதிநவீன ஏகே பாட்டு சேறு 203 ரக துப்பாக்கிகளை தயாரிப்பதற்காக இந்தியா மற்றும் மற்ற எந்த நாடுகளுக்கு இடையே தளவாட உற்பத்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது இந்தியா மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே.

12. மறுசீரமைக்கப்பட்ட இந்திய ரயில்வே வாரியத்தின் முதலாவது தலைமை செயல் அதிகாரியாக  நியமிக்கப்பட்டுள்ளவர் வினோத் குமார் யாதவ்.

13. கீழடி போன்ற நகர நாகரிகம் இருந்ததற்கான சான்றுகள் தற்போது எந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே  இலந்தங்கரை.

14. சிந்து சமவெளி நாகரிகம் அழிவுக்கு காரணமான பருவநிலை மாற்றத்தின் தொடர்புடைய தட்பவெட்ப மாற்றங்கள் இருந்திருக்கலாம் என தற்போது ஆய்வில் தெரிவித்துள்ள இந்திய வம்சாவளி அறிவியல் ஆய்வாளர் பெயர் நிஷாந்த் மாலிக்.

15. நாற்பத்தி எட்டாவது வருடாந்திர உலக ஓபன் செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர் கிராண்ட் மாஸ்டர் பன்னீர்செல்வம் இனியன்.

16. இ-சஞ்சீவி இணையதள மருத்துவ சேவையில் தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ள மாவட்டம் நாகை மாவட்டம்.

17. சர்வதேச அறக் கொடை தினம் செப்டம்பர் 5.

18. உலகமெங்கும் மாணவர்களிடையே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக "The Little Book of green nudges"என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ள அமைப்பு ஐநா சுற்றுச்சூழல் திட்டம்.

19. சக்தி வாய்ந்த புயல் 160 கிலோ மீட்டர் வேகத்தில் 07-09-2020 இல் ஜப்பானை தாக்கி உள்ளது அப்போ புயலின் பெயர் ஹுசைன் புயல்.

20. இந்தியா மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையிலான இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கூட்டு கடற்படை பயிற்சி வங்காள விரிகுடாவில் நடைபெற்றது பயிற்சியின் பெயர் இந்திரா நேவி 2.0

21. உலகப் பொருளாதார சுதந்திரக் குறியீடு 2020 இல் இந்தியா பெற்றுள்ள இடம் 105 வது இடம்.

22. இந்தியாவில் முதல் ஒருங்கிணைந்த வான்வெளி ஆம்புலன்ஸ் சேவை எங்கு தொடங்கப்பட்டுள்ளது கர்நாடகா (பெங்களூரில்).

23. தென்னிந்தியாவில் முதல் மற்றும் இந்தியாவில் இரண்டாவது கிசான் ரயில் சேவை  எங்கு தொடங்கப்பட்டுள்ளது ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் இல் இருந்து புதுடெல்லி வரை.

24. விவசாயிகள் நேரடியாக பயன்படுத்துவதற்கான விரிவான இன மேம்பாட்டு சந்தை மற்றும் கால்நடை பராமரிப்பு ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட செயலியின் பெயர்         இ-கோபாலா செயலி.

25. மீன் உற்பத்தியை இரட்டிப்பாக்கி மீன்வளத்துறை யை ஊக்கம் அளிப்பதில் நோக்கமாகக் கொண்ட திட்டமானது பிரதமர் நரேந்திர மோடியால்  10-09-2020 அன்று தொடங்கி வைக்கப்பட்டது திட்டத்தின் பெயர் மத்ஸ்ய சம்மட யோஜனா.

26. பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சேவைகள் பரிமாற்றம் தொடர்பாக ராணுவ ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் எந்தெந்த நாடுகளுக்கு இடையே 09-09-2020 அன்று நடந்தது இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையே.

27. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை கொண்டுசல்லும் கார்கோ விண்கலத்திற்கு யாருடைய பெயரை சூட்டி உள்ளதாக அமெரிக்க நிறுவனம் அறிவித்துள்ளது இந்திய அமெரிக்க விண்வெளி வீராங்கனை கல்பனா சால்வா.

28. இந்திரா காந்தி அமைதிப் பரிசு 2019தில் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது இங்கிலாந்தைச் சார்ந்த சர் டேவிட் அட்டன்பரோ.

29. நிதி ஆயோக் அமைந்துள்ள பல்பரிமாண வறுமை குறியீடு ஒழுங்கமைப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் சன்யுக்தா சமாதர்.

30. கோரோனோ வைரஸ் நோய் தடுப்பு மருந்தின் கொள்முதல் மற்றும் விநியோகத்திற்கு முழுமையாக தலைமை வகிக்கும் அமைப்பின் பெயர் யுனிசெப் அமைப்பு.

31. தேசிய மூங்கில் திட்ட இலச்சினையின் வடிவமைப்பாளர் யார் சாய்ராம் கௌடி எடிகி.(தெலுங்கானா)

32.YSR சம்பூர்ண போஸ்ணா மற்றும் YSR சம்பூர்ண போஸ்ணா ப்ளஸ் திட்டம் ஆகியவற்றை தொடங்கி உள்ள மாநிலம் ஆந்திர மாநிலம்.

33. சென்னை ஒருங்கிணைந்த பெரு நகர போக்குவரத்து ஆணையச் சட்டம் 2010(திருத்தம்) சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாள் 16-09-2020.

34. எளிதாக தொழில் துவங்க முகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு எத்தனையாவது இடம் பிடித்துள்ளது.      14 வது இடம்.

35. எத்தனை இந்தியக் கடற்கரைகள் சர்வதேச சுற்றுச்சூழல் நீலக் கொடியை சுற்றுச்சூழல் அடையாளத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது எட்டு கடற்கரைகள்.

36.12000 ஆண்டு பழமை வாய்ந்த இந்தியக் கலாச்சாரத்தை பற்றி ஆராய யாருடைய தலைமையில் வல்லுநர் குழுவை மத்திய அரசு கலாச்சார அமைச்சகம் அமைத்துள்ளது கே. என். தீக்சித்(இந்திய அகழாய்வு சங்கத்தின் தலைவர்).

37. சீன நிறுவனங்கள் இந்தியாவில் உளவு பார்த்த விவகாரத்தைப் பற்றி ஆராய யாருடைய தலைமையிலான குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் பாண்ட். (தேசிய இணைய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர்).

38. உலக வங்கி வெளியிட்டுள்ள மனித மூலதன குறியீடு 2020 இல் இந்தியா எத்தனையாவது இடம் 116 ஆம் இடம்.

39. I-ATS என்ற பெயரில் இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட "தானியங்கி ரயில் கண்காணிப்பு முறைமை எங்கு தொடங்கப்பட்டது" புது டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில்.

40. காரிமா என்ற பெயரில் தூய்மை பணியாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் ஒடிஷா மாநிலம்.

41. இந்தியாவில் 100 சதவீதம் கிராமங்களிலும் இந்திய அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் சென்றடைய செய்வதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயர் ஐந்து நட்சத்திர கிராமங்கள்.

42. ஏரோ இந்தியா 2021 என்ற பெயரிலான விமானப்படை கண்காட்சி எங்கு நடைபெற உள்ளது பெங்களூரு நகரில் 3-7 பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளது.

43. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திருத்த மசோதா 2020தில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நாள் 15.09.2020(மாநிலங்களவையில் 22.09.2020 அன்று நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது).

44. புதிய பாராளுமன்றம் கட்டும் பணியை எந்த நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது டாட்டா நிறுவனம்.

45. ஆக்ராவில் முகலாயர் அருங்காட்சியகத்தின் பெயர் தற்போது எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது சத்ரபதி சிவாஜி மகாராஜ் அருங்காட்சியகம்.

46. எந்த ரயில் நிலையத்திற்கு ISO 14001-2015 என்ற தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது திருப்பதி ரயில் நிலையம்.

47. உலகத் திறன்மிகுு நகரங்கள் பட்டியலில் 2020 இல் முதலில் இடம் பிடித்த நகரம் சிங்கப்பூர்.

48. நீடித்த வளர்ச்சி இலக்கிற்கான பத்திரத்தை வெளியிட்டுள்ள உலகின் முதல் நாடு மெக்சிகோ.

49. அமெரிக்காவில் அலபாமா மற்றும் புளோரிடா மாகாணங்களை 16-09-2020 அன்று தாக்கிய புயலின் பெயர் சால்லி.

50. ஜப்பானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யோசிசைட் சுகா.


Post a Comment

Previous Post Next Post