திருக்குற்றாலக் குறவஞ்சி - திரிகூட ராசப்பகவிராயர்
தமிழ்நாட்டில் தென் கோடியில் தென்காசி அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் எனும் ஊரின் சிறப்பை புகழ்ந்து அங்குள்ள ஈசனான குற்றால நாதரை போற்றி தெய்வ காதல் பற்றிய கற்பனையை அமைத்து பாடப்படும் நூல் "திருக்குற்றாலக் குறவஞ்சி"ஆகும்.
குற்றாலக் குறவஞ்சியின் நூலாசிரியர் பற்றி தெளிவான விளக்கம்:
குறவஞ்சி நாடகம் எனும் போற்றப்படும் இந்நூல் வடகரை அரசரான சின்ன நஞ்சா தேவரின் அவைப் புலவராக விளங்கிய திரிகூடராசப்ப கவிராயர் என்பவர் ஆல் இயற்றப்பட்டது. இவர் திருநெல்வேலி மாவட்டம் "தென்காசிக்கு"அருகிலுள்ள மேலகரம் எனும் ஊரைச் சார்ந்தவர்.(இவர் திருவாவடுதுறை ஆதீன தலைவராக விளங்கிய சுப்பிரமணிய தேசிகனின் சகோதரர் ஆவார்).
திருக்குற்றாலநாதர் இன் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சி அன்றைய மதுரை மன்னனான முத்து விஜயரங்க சொக்கநாத நாயக்கரின் பாராட்டையும் பரிசையும் பெற்றது திருக்குற்றாலக் குறவஞ்சி ஆகும்.
சங்க இலக்கியங்கள் என்பது:
வீரர்களை, அரசர்களை, வள்ளல்களை, தனி மனிதர்களைப் பற்றிப் பாடுவது சங்க இலக்கியங்கள் எனப்படும்.
சமய நூல்கள் என்பது:
கடவுள்களைப் பற்றி பாடுவது சமய நூல்கள் எனப்படும்.
சிற்றிலக்கியங்கள் என்பது:
சிற்றிலக்கியங்கள் என்பது கடவுள் அவரோடு சேர்த்து மனிதர்களையும் பற்றிப் பாடப் பெறும் நூல் சிற்றிலக்கியங்கள் எனப்படும்.
குற்றாலக் குறவஞ்சியின் சிறப்பு:
இயற்றமிழ் இன் செழுமையையும், இசைத்தமிழின் இனிமையையும், நாடகத் தமிழின் ஏழிலினையும் ஒருங்கே கொண்டு முத்தமிழ் காவியமாக திகழ்வது குற்றாலக் குறவஞ்சி ஆகும்.
திருக் குற்றாலக் குறவஞ்சியின் கதை அமைப்பு தெளிவான விளக்கம்:
குற்றாலநாதர் இன் திருவுலா எழுச்சியைக் குறித்து முன்னரே கட்டியங்காரன் கூறுகிறான். திருவிழா தொடங்குகிறது மூவர் தமிழும் நான்மறைகள் விளங்க குற்றாலநாதர் வீதியில் உலா வருகிறார்.குற்றாலநாதர் இன் திருஉலா காண பெண்கள் எழுந்து வருகின்றனர் அப்போது வந்து ஆடிக்கொண்டிருந்த வசந்த வல்லி (கதைத் தலைவி வசந்தவல்லி) என்பவளும் திருஉலா காண வருகிறாள். தோழியின் வாயிலாக இறைவனைப் பற்றி அறிந்த வசந்த வல்லி இறைவன் மீது காதல்கொண்டு தோழியைத் தூது அனுப்புகிறாள் . இந்நிலையில் குறிசொல்லும்் குறத்தி தெருவில் வருகிறாள். தோழி அவளைக் குறிசொல்ல அழைத்தவுடன் குறபெண் தன்நாட்டு மழைை வளமும் , தொழில் வளமும் சிறப்பாக எடுத்துக் கூறுகிறாள். பின் வசந்த்தவல்லி கையைை பார்த்து அவள் குற்றாலநாதர் இன் மீதுு காதல் கொண்டுள்ள செய்திகளையும், (தலைவன் குற்றாலநாதன்)குற்றாலநாதர் இன் புகழ் பற்றியும் எடுத்துச் சொல்லி வசந்த வள்ளியின் எண்ணம் நிறைவேறும் என்று குறி சொல்லி பரிசு பெறுகிறாள் குறத்திி தலைவி. அவள் கணவன் (தலைவன்) அவளைக் காண தேடி வருகிறான். குறத்தியை கண்ட தலைவன் குறத்திி நடந்ததைச் சொல்ல இருவரும் குற்றால நாதரை பாடி இன்பம் அடைகின்றனர். இவ்வாறு திருக்குற்றாலக் குறவஞ்சி நாடகம் முடிவடைகிறது.
குற்றாலக் குறவஞ்சியின் இடம்பெறும் முக்கிய வினா-விடை தொகுப்பு:
* திருக்குற்றாலக் குறவஞ்சி ஒரு நாடக வடிவிலான நூலாகும்.
* குறத்திப்பாட்டு என அழைக்கப்படும் நூல் திருக்குற்றாலக் குறவஞ்சி.
* சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று திருக்குற்றாலக் குறவஞ்சி.
* குறவஞ்சி என அழைக்கப்பட காரணம் பாட்டுடைத் தலைவன் உலா வரக் கண்ட தலைவி அத்தலைவன் மீது காதல் கொள்ள குறவர் குலத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி தலைவிக்குக் குறி கூற பரிசில் பெறும் செய்திகளை கூறுவதால் குறவஞ்சி என பெயர் பெற்றது.
* தமிழ்நாட்டில் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் எனும் ஊரை சிறப்பித்துப் பாடும் நூல் திருக்குற்றாலக் குறவஞ்சி.
* திரிகூடராசப்பக் கவிராயரின் கவிதை கிரீடம் என்றுு அழைக்கப்படும் நூல் திருக்குற்றாலக் குறவஞ்சி.
* திருக்குற்றாலக் குறவஞ்சி யாருடைய விருப்பத்திற்கு ஏற்ப அரங்கேற்றப்பட்டது மதுரை முத்து விசயரங்க சொக்கநாதர்.
* திருக்குற்றால நாதர் கோவில் வித்துவான் என பாராட்டை பெற்றவர் திரிகூடராசப்பக் கவிராயர்.
* திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய நூல்கள்
1. குற்றாலத்தின் மீது தலபுராணம்
2. மாலை
3. சிலேடை
4. பிள்ளைத்தமிழ்
5. யமக அந்தாதி.
* மந்தி என்பதன் பொருள் பெண் குரங்கு.