தேம்பவாணி- வீரமாமுனிவர்

 


இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான புனித யோசேப்பு மீது இயற்றப்பட்ட முதல் பெரும் செய்யுள் வகை நூலான "தேம்பாவணி" குறித்து விரிவாக காணலாம்

இந்நூல் இத்தாலிய நாட்டவரான " வீரமாமுனிவர்"அவர்கள் தமிழில் திறம்பட ஆகிய நூல் எனப் புகழப்படுகிறது. தேம்பவாணி நூலை கிறிஸ்தவ சமயத்தின் சுருக்கம் என்று அறிஞர்கள் மதிப்பிடுகிறார்கள்.

இத்தமிழ் காப்பியம் பிற மொழி நூல்களில் வருகின்ற செய்திகள் ஐத் தழுவி தமிழுக்கே உரித்தான பாணியில் எழுதப்பட்டதாகும். அதாவது ஸ்பானிய நாட்டில் ஆகிருத நகரில் வாழ்ந்த  ஆகிர்த மரியாள் எனும் "கன்னி மறைபொருளான இறை நகரம்"எனும் நூலை கன்னி மரியாளின் ஆணைப்படி எழுதியதாக கூறி உள்ளார். அந்த நூலிில் இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசப் பற்றிய செய்திகளும் உண்டு.

ஆகிர்த் மரியின் நூலைத் தழுவி தமிழ் மரபிற்கும், தமிழ் பண்பாட்டிற்கும் ஏற்ப யோசேப்பின் வரலாற்றை இயற்றியிருக்கிறார் "வீரமாமுனிவர்".


தேம்பவானியின்  பொருள்:

தேம்பா + அணி எனப் பிரித்து வாடாத மாலை என்றும், தேன் + பா + அணி எனப் பிரித்து தேன் போன்ற இனிய பாடல்கள் -இன் மாலை என்றும் இதற்குப் பொருள் உண்டு. இயேசு நாதரைை வளர்த்த தந்தையாகிய சூசையப்பர் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. சூசையப்பர் -க்கு தேம்பவாணி என பெயரிட்டு இந்நூலில் பாடியுள்ளார்.


தேம்பாவணி நூலின் அமைப்பு:

தேம்பாவணி மூன்று காண்டங்களைக் கொண்டது. ஒவ்வொன்றிலும் 12 படலமாக 36 படலங்கள் கொண்டது. மொத்தம் 3615 விருத்தப் பாக்கள், 90 சந்த வகைகளுடன் பாடப்பட்டுள்ளது.


தேம்பவாணி நூலின் சிறப்பு:

தமிழில் அமைந்த காப்பியங்களில் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை  தேம்பவானிக்கு சென்றடையும்.


தேம்பவானி உணர்த்தும் நீதி செயல்கள்:

தேம்பாவணியின் காப்பியம் இயற்கை வனப்பில் இறைவனின் தோற்றம், இல்லறம் துறவறம் ஆகியவற்றின்     மாட்சி, உழைப்பின் மேன்மை, வறுமையில் செழுமை, கற்பின் பெருமை, கடவுளின் இலக்கணம், வானூர் உயர்வு, நகர்வோர் தாழ்வு, பாவத்தின் கொடுமை, அறத்தின் மேன்மை, காதலின் பெருமை, காமத்தின் தீமை ஆகியவற்றை விளக்கும் நீதி நூலாகவும் தேம்பவாணி விளங்குகிறது.


 தேம்பாவணி நூலில் இடம்பெறும் முக்கிய வினா விடை குறிப்புகள்:

* தேம்பாவணி நூலின் ஆசிரியர் வீரமாமுனிவர்.

* வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்சு டான்சு ஜோசப் பேசுகி.

* தேம்பா + அணி என்பதன் பொருள் வாடாத மாலை.

* தேன் + பா + அணி என்பதன் பொருள் தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு.

* கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் எனும் யோசோப்பினை (வளனை) பாட்டுடை தலைவனாக  கொண்டு பாடப்பட்ட நூல் தேம்பாவணி.

* தேம்பாவணி நூலில் உள்ள காண்டங்கள் எண்ணிக்கை 3 காண்டங்கள்.

* தேம்பாவணி நூலில் உள்ள படங்களின் எண்ணிக்கை 36 படலங்கள்.

* தேம்பாவணியின் நூலில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை 3615 பாடல்கள் உள்ளன.

*தேம்பாவணி  எந்த நூற்றாண்டைச் சார்ந்தது கிபி பதினேழாம் நூற்றாண்டு.

* வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள் தமிழின் முதல் அகராதி சதுரகராதி, தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்), சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்த குரு கதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவற்றை இயற்றியுள்ளார்.

* வீரமாமுனிவர் யாரிடம் உருது மொழியை கற்றுக்கொண்டார் திருச்சியை ஆண்ட சந்தா சாகிப் எனும் மன்னரைச் சந்தித்து உரையாடும் அதற்காக இரண்டே மாதங்களில் உருது மொழியை கற்றுக்கொண்டார்.

* சந்தாசாகிப் வீரமாமுனிவருக்கு எவ்வகையான பட்டத்தை அளித்தார் இவருடைய எளிமையையும் ,துறவி, கண்டுு சந்தா சாகிப் இஸ்மத் சன்னியாசி எனும் பட்டத்தை வழங்கினார்.

* இஸ்மத் சன்னியாசி என்பதன் பொருள் தூய துறவி.

* இஸ்மத் சன்னியாசி என்பது எவ்வகைைச்  மொழிச் சொல் பாரசீக மொழிச் சொல்.

* கிறிஸ்துவிற்கு முன் தோன்றியது யார் திருமுழுக்கு யோவான்.

* திருமுழுக்கு யோவானின் மற்றொரு பெயர் அருளப்பன்.

* வீரமாமுனிவர் திருமுழுக்கு யோவான் -க்கு என்ன பெயர் வழங்கினார் கருணையன்.

* கருணையின் யாரிடம் வாழ்ந்து வந்தார் வீரமாமுனிவரின் தாயான எலிசபெத் அம்மையாரின் கானகத்தில் வாழ்ந்து வந்தார்.

* தேம்பாவணி எவ்வகை பா வகையை சார்ந்தது விருத்தப்பாவகை.

* தேம்பாவணி எப்போது அரங்கேற்றப்பட்டது கிபி 1726 ஆம் ஆண்டு மதுரை தமிழ்ச்சங்கத்தில் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே அரங்கேற்றப்பட்டது.

* வீரமாமுனிவர் பிறந்த நாடு இத்தாலி.

* வீரமாமுனிவர் எந்த சமயத்தைச் சார்ந்தவர் கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்தவர்.

* வீரமாமுனிவரின் வேறு பெயர் தைரியநாதர்.
 1 Comments

Previous Post Next Post