Skip to main content

சிற்றிலக்கியங்கள் - 96 வகைகள்

 


சிற்றிலக்கியங்கள் ஒரு சிறப்பு பார்வை:

சிற்றிலக்கியங்கள் அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கிய தாக அமைவதுு சிற்றிலக்கியங்கள்.

அகப்பொருள் மற்றும் புறப்பொருள் இல் ஏதேனும் ஒரு துறையை மட்டும் அமைவதாக இருக்கும்.(கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவது உண்டு)

பாடப்பெறும் மன்னன் அல்லது கடவுள் அல்லது வள்ளல் ஆகியோரின் உடைய வாழ்வின் ஒரு சிறு கூடு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும் எடுத்துக்காட்டாக: உலா இலக்கியம் தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது.

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்கள் ஏதேனும் ஒன்றை தருவதாக அமைவது சிற்றிலக்கியங்கள் ஆகும்.

இவ்வகையில் தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, குறவஞ்சி போன்ற பல வகைை இலக்கியங்கள் சிற்றிலக்கியங்கள் என்ற வகையில் அமைந்து.

சிற்றிலக்கியங்கள் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. பிரபந்தம் என்பது இலக்கிய வகைகள் பலவற்றை குறிக்கும் ஒரு பொது சொல்லாகவே கருதப்படுகிறது.

சமஸ்கிருதத்தில் பிரபந்தம் என்ற சொல் "கட்டப்பட்டது"என்றுு பொருள்படும்.


சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும் ஒரு சிறப்பு பார்வை:

சிற்றிலக்கிய வகைகளின் எண்ணிக்கை 96 என மரபு கூறப்படுகிறது. இந்த 96 வகைகளையும் தாண்டி பல வகை சிற்றிலக்கியங்கள் வளர்ந்தும் விரிந்தும் 96 என எண்ணிக்கை கடந்து பிற்காலத்தில் கூடிவிட்டது. இதன் எண்ணிக்கை குறித்து அறிஞர்களிடையே எண்ணிக்கை மாறுபாடு உள்ளது. இந்த எண்ணிக்கையானது குறைந்தபட்சம் 186 என்றும், 417 என அதிகபட்சமாக வும் கூறப்படுகிறது.


96 சிற்றிலக்கிய வகைகளின் பெயர்கள்:

1. அகப்பொருட்கோவை

2. அங்க மாலை

3. அட்டமங்கலம்

4. அரசன் விருத்தம்

5. அலங்கார பஞ்சகம்

6. அனுராக மாலை

7. ஆற்றுப்படை

8. இணைமணி மாலை

9. இயன்மொழி வாழ்த்து

10. இரட்டை மணிமாலை

11. இருபா இருபது

12. உலா

13. பவனிக்காதல்

14. உலாமடல்

15. உழத்திப் பாட்டு

16. உழிஞை மாலை

17. உற்பவ மாலை

18. ஊசல்

19. ஊர் நேரிசை

20. ஊர் வெண்பா

21. ஊர் இன்னிசை

22. என் செய்யுள்

23. ஐந்திணைச் செய்யுள்

24. ஒருபா ஒருபது

25. ஒலியந்தாதி

26. கடைநிலை

27.கண்படைநிலை

28. கலம்பகம்

29. காஞ்சி மாலை

30. காப்பு மாலை

31. குழமகன்

32. குறத்திப்பாட்டு

33. கேசாதி பாதம்

34. கைக்கிளை

35.கையருநிலை

36. சதகம்

37. சாதகம்

38. சிறு காப்பியம்

39. சின்னப்பூ

40. செருக்களவஞ்சி

41. செவியறிவுறூஉ

42.தசங்கத்யல்

43.தசங்கப்பத்து

44. தண்டக மாலை

45. தாண்டகம்

46. தாரகை மாலை

47. தானை மாலை

48. எழுகூற்றிருக்கை

49. தும்பை மாலை

50. தியிலேடை நிலை

51. தூது

52. தொகைநிலைச் செய்யுள்

53. நயனப்பத்து

54. நவமணி மாலை

55. நாம மாலை

56. நாழிகை வெண்பா

57. நான்மணிமாலை

58. நான் நாற்பது

59. நூற்றந்தாதி

60. நொச்சி மாலை

61. பதிகம்

62. பதிற்றந்தாதி

63. பரணி

64. பல்சந்த மாலை

65. பன்மணி மாலை

66. பாதாதி கேசம்

67. பிள்ளைக் கவி

68. புகழ்ச்சி மாலை

69. புற நிலை

70. புறநிலை வாழ்த்து

71. பெயர் நேரிசை

72. பெயர் இன்னிசை

73. பெருங்காப்பியம்

74. பெருமகிழ்ச்சி மாலை

75. பேருமங்கலம்

76. போர் கேளு வஞ்சி

77. மங்கல வள்ளை

78. மணி மாலை

79. முதுகாஞ்சி

80. மும்மணிக்கோவை

81. மும்மணி மாலை

82. முலைப் 10

83. மெய்கீர்த்தி மாலை

84. வசந்த மாலை

85. வரலாற்று வஞ்சி

86. வருக்கக் கோவை

87. வருக்க மாலை

88. வளமடல்

89. வாகை மாலை

90. வாதோரணம் மஞ்சரி

91.வாயுரை வாழ்த்து

92.விருதவிலக்கணம்

93.விளக்குநிலை

94.வீரவெட்சிமலை

95.வெட்சிகறந்தைமஞ்சுறி

96.வெனில்மலை

மற்றும் வண்ணம்.









Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- அறநூல்கள்-நீதி நூல்கள் - புறநூல்கள் யாவை.

  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு: * நாலடியார் * நான்மணிக்கடிகை * இன்னா நாற்பது * இனியவை நாற்பது * திருக்குறள் * திரிகடுகம் * ஆசாரக்கோவை * பழமொழி நானூறு * சிறுபஞ்சமூலம் * முதுமொழிக்காஞ்சி * ஏலாதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள் (அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு: * கார் நாற்பது * ஐந்திணை ஐம்பது * ஐந்திணை எழுபது * திணைமொழி ஐம்பது * திணைமாலை நூற்றைம்பது * கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு: * களவழி நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் பாடல்களின் எண்ணிக்கை: நூல்கள்                                       பாடல்கள் நாலடியார்                                  400                நான்மணிக்கடிகை                ...