மலைபடுகடாம் நூல் விளக்கம் மற்றும் அடிகள் வரையறை

 

1. பண்டைய கால இசை கருவிகள் குறித்து மிகுதியாக விளக்கம் நூல்

"மலைபடுகடாம்"

2. சிவபெருமானை காரி உண்டிக் கடவுள் (நஞ்சு உண்ட சிவன்) எனக் குறிப்பிடும் பத்துப்பாட்டு நூல்

"மலைபடுகடாம்"

3. ஆற்றுப்படை நூல்களுள் மிகவும் பெரிய நூல்

"மலைபடுகடாம்"

4. கூத்தர்-ஐ களம் பெரு கண்ணுளர் எனக் குறிப்பிடப்படும் பத்துப்பாட்டு நூல்

"மலைபடுகடாம்"

5. பல்குன்றக் கோட்டத்துச் செங்கண்  மாத்துவேன் நன்னன்சேய் நன்னன் என்பவரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட பத்துப்பாட்டு நூல்

"மலைபடுகடாம்"

6. மலைபடுகடாம் பாடல் ஆசிரியர்

"இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்"

7. மலைப்படுகடாம் அடிகள்

"583 அடிகள்"

8. மலைபடுகடாம் ஒரு

"புறப்பொருள் நூலாகும்"

9. மலைபடுகடாம் பாடல் பாவகை

"ஆசிரியப்பா"

10. மலைபடுகடாம் பாடலின் பொருள்

"பரிசு பெற்ற ஒருவர் தன்னைப் போல் பரிசு பெறச் செல்லும் இன்னொருவரை தன்னைப்போல் பயன்அடைய வேண்டி தான் பரிசுபெற்ற வள்ளல் இடமோ அரசர் இடமோ வழிபடுதலே ஆற்றுப்படை ஆகும் அவ்வகையில் இப்பாடல்


பரிசில் பெற்ற கூத்தன் ஒருவன் பரிசில் பெற கருதிய கூத்தனை தான் பரிசு பெற்ற நன்னன்சேய் நன்னன் இடம் ஆற்றுபடுத்துவதாக அமைந்தத என்பதால் மலைபடுகடாம்

"கூத்தராற்றுப்படை என்று பெயர் பெற்றது"


11. கூத்தர் என்பவர் யார்

"ஆடுகளம் அமைத்து ஆடுபவர் (நாடக கலைஞர்)

12. மலைபடுகடாம் என்று பெயர் வரக் காரணம்

"மலைக்கு யானையை உவமித்து

                         அதனிடத்தே

பிறந்த பல்வகையான ஓசையை

                       கடாம் (மதம்)

என சிறப்பித்து பாராட்டு இருத்தலால்

"மலைபடுகடாம் என பெயர் பெற்றது"


13. மலைபடுகடாம் இல் குறிப்பிடப்படும் பண்டையகால இசைக்கருவிகள்

                "முழவு"

               "ஆகுளி"

               "பாண்டில்"

              "கோட்டு"

              "தும்பு"

              "குழல்"

              "அரி"

              "தட்டை"

              "எல்லரி"

              "பதலை"


14. மலைபடுகடாம் வேறு பெயர்கள்

"கூத்தராற்றுப்படை"

15. மலைபடுகடாம் இன் பாட்டுடைத் தலைவன்

"நன்னன்சேய் நன்னன்"

16. மலைபடுகடாம் இடம் பெறும் திணை

"பாடாண் திணை"

17. நன்னன்சேய் நன்னனின் மற்றொரு பெயர்

"நவிரமலை வேந்தன்"

18. "நவிரமலை" தமிழ்நாட்டில் எங்கு உள்ளது

"வேலூர் மற்றும் திருவண்ணாமலை க்கு இடையில்"


19. மலைபடுகடாம் இல் இடம்பெறும் சொற் பொருட்கள்

"அசைஇ - இளைப்பாறி"

"அல் - இரவு"

"அல்கி - இரவில் தங்கி"

"கடும்பு - சுற்றம்"

"சேர்ந்த - சிவந்த"

"செப்பம் - பொருத்தமான"

"அலங்கு - அசையும்"





                 

Post a Comment

Previous Post Next Post