Skip to main content

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சங்கம் மருவிய கால இலக்கியம் விரிவான விளக்கம்

 பாவலர்ரோடு காவலரும் கைகோர்த்து கவிபுனைந்து கன்னித் தமிழ் வளர்ந்த காலம் சங்க காலம்.

அக்காலத்தில்தான் பழங்காலத்தில் தோன்றி வளர்ந்த தமிழ் இலக்கியங்களில் அறிந்து மறைந்தவை போக எஞ்சியவை காக்கப்பட்டு புலவர்களும், புரவலர்களும் தொகுக்கப்பட்டு சங்க இலக்கியம் என்ற பெயரால் குறிப்பிடப்பட்டது.

சங்க இலக்கியங்கள் என குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்பு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு  இவையே பதினெண் மேற்கணக்கு நூல்கள் ஆகும்.

அதிக அடிகளைக் கொண்ட அகவல் முதலியவற்றால் ஆகிவரும் பாக்களின் தொகுதி பதினெண் மேற்கணக்கு நூல்கள்.

எட்டுத்தொகை நூல்கள்:

நற்றினை

குறுந்தொகை

ஐங்குறுநூறு

பதிற்றுப்பத்து

பரிபாடல்

கலித்தொகை

அகநானூறு

புறநானூறு


பத்துப்பாட்டு நூல்கள்:

திருமுருகாற்றுப்படை

பொருநராற்றுப்படை

பெரும்பாணாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

முல்லைப்பாட்டு

மதுரைக்காஞ்சி

நெடுநல்வாடை

குறிஞ்சிப்பாட்டு

பட்டினப்பாலை

மலைபடுகடாம்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இவைகளே பதினெண்மற்கணக்கு நூல்கள் ஆகும்.

இதைப்போன்றே தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க காலத்தை அடுத்து வந்த காலம் சங்கம் மருவிய காலம் அதாவது "இருண்ட காலம்".

இருண்ட காலம் (சங்கம் மருவிய காலம்) அதாவது களப்பிரர்கள் ஆட்சி செய்த காலம் மேலும் தமிழ்நாட்டில் புற சமயங்களான சமணமும் பௌத்தமும் மேலோங்கி இருந்த காலம்.

அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள்தான் சங்கம் மருவிய கால இலக்கியம் என பெயரால் குறிக்கப்பட்டது.

சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என பெயர் பெற்றது.

கீழ்க்கணக்கு என்பது குறைந்த அடிகளைக் கொண்ட வெண்பா யாப்பில் அமைந்த பாக்களின் தொகுதி கீழ்க்கணக்கு என்பதாகும்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்:

நாலடியார்

நான்மணிக்கடிகை

இன்னா நாற்பது

இனியவை நாற்பது

கார் நாற்பது

களவழி நாற்பது

ஐந்திணை ஐம்பது

ஐந்திணை எழுபது

திணைமொழி ஐம்பது

திணைமாலை நூற்றைம்பது

திருக்குறள்

திரிகடுகம்

ஆசாரக்கோவை

பழமொழி

சிறுபஞ்சமூலம்

முதுமொழிக்காஞ்சி

ஏலாதி

கைநிலை

மேலே குறிப்பிடப்பட்டுள்ள 18 நூல்கள் சேர்ந்த தொகுப்புதான் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.


பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை குறிப்பிடப்படும் வெண்பா பாடல்:

"நாலடி நான்மணி நானாற்ப 

                                         - தைந்திணைமுப்

பால்கடுகங் கோவை பழமொழி

                                          - மாமூல 

மின்னிலய காஞ்சியோ டேலாதி

                                          - யேன்பதூவுங்

கைநிலையும மாங்கீழ்க் கணக்கு.

இப்பாடலில் இதில் குறிப்பிடப்படும் வெண்பா ஆகும்.

"அடிநிமிர் உஇல்லாச்  செய்யுள் தொகுதி

அறம்பொரு  ள்இன்ப ம்அடுக்கி

                                                  - அவ்வகை 

திறம்பட வருவது கீழ்க்கணக்கு ஆகும்.

என்பது பன்னிரு பாட்டில் சூத்திரத்தால் நாம் அறிந்திடும் கீழ்க்கணக்கில் இலக்கணம்.

அதாவது மிக்க அடிகளை கொள்ளாது சில அடிகளால் ஆகிய செய்யுள்களின் தொகுதிகள் அறம், பொருள், இன்பம் ஆகியவற்றில் ஒன்றோ பலவற்றையோ உணர்த்தி வருவன கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.

மேலும் இவைகளை நீதி நூல்கள், அறநூல்கள், இருண்ட கால இலக்கியங்கள் என்றும் அழைக்கப்படும்.

கீழ்க்கணக்கு நூல்களில் அமைந்த அனைத்து பாடல்களும் வெண்பா யாப்பில் அமைந்தவை இவற்றுள் (பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்)

அறம்/ நீதி சார்ந்த நூல்கள்:

நாலடியார்

நான்மணிக்கடிகை

இன்னா நாற்பது

இனியவை நாற்பது

திருக்குறள்( முப்பால்)

திரிகடுகம்

ஆசாரக்கோவை

பழமொழி நானூறு

சிறுபஞ்சமூலம்

முதுமொழிக்காஞ்சி

ஏலாதி


அகம் சார்ந்த நூல்கள்:

கார் நாற்பது

ஐந்திணை ஐம்பது

ஐந்திணை எழுபது

திணைமொழி ஐம்பது

திணைமாலை நூற்றைம்பது

கைந்நிலை


புறம் சார்ந்த நூல்:

களவழி நாற்பது


மேலும் பதினெண் கீழ்க்கணக்கு "நீதி நூல்களில்"

பெரிய நூல் - திருக்குறள்

சிறிய நூல் - இன்னா நாற்பது


பதினெண் கீழ்க்கணக்கு"அகநூல்களில்"

பெரிய நூல் - திணைமொழி 150

சிறிய நூல் - கார் நாற்பது


மேலும் பதினெண்கழ்க்கணக்கு நூல்களில் "இரட்டை அறநூல்கள்"எனக் குறிப்பிடப்படும் நூல்கள்

"இன்னா நாற்பது"

"இனியவை நாற்பது"


மேலும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் "மருத்துவ பெயரில்" அமைந்த நூல்கள்

"திரிகடுகம்"

"சிறுபஞ்சமூலம்"

"ஏலாதி"


பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் "ஒழுக்கம்" பற்றி கூறும் நூல்

"ஆசாரக்கோவை"








Comments

Popular posts from this blog

சீறாப்புராணம் - உமறுப் புலவர்.

  தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த இஸ்லாமிய இலக்கியம் "சீறாப்புராணம்" ஆகும். சீராபுராணம் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக்கொண்டு தமிழ் மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காவியம் ஆகும். இத்தகைய நூலை இயற்றியவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் இயற்றிய நூல்தான் சீறாப்புராணம். மேலும் உமறுப்புலவர் அதே காலத்தில் வாழ்ந்த சீதக்காதியின் ஆதரவைப் பெற்றார். உமறுப் புலவர் வள்ளல் சீதக்காதியின் பெருமையை " செத்தும் கொடுத்தான் சீதக்காதி" என  சொற்றொடர் விளக்கும். சீறாப்புராணம் அமைவிடம்: சீராபுராணம் இரண்டு பாகங்களாக அமைந்துள்ளது. முதல் பாகத்தில் 44 படலங்களும், இரண்டாம் பாகத்தில் 47 பக்கங்களும் உள்ளன. சீறாப் புராணத்தில் இடம் பெறும் முதல் பாகம்: முதல் பாகத்தில் 3 காண்டங்கள் உள்ளன. இப்பாகத்தில் மொத்தம் 44 படலங்கள் உள்ளன. 1. விலாதத்துக் காண்டம். 2. நுபுவ்வத்துக் காண்டம். 3. ஷீலாஷது காண்டம். * விலாதத்துக் காண்டம்: 1. கடவுள் வாழ்த்துப் படலம் 2. நாட்டுப் படலம் 3. தலைமுறைப் படலம் 4. நபியவதாரப் படலம் 5. அலிமா முலையூர் படலம் 6. இலாஞ்சனை தரித்த படலம் 7. ...

தமிழ்விடு தூது - எத்தனை கண்ணிகள்.

தமிழ்விடு தூது - ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ் விடு தூது நூல் அமைப்பு: தமிழ் சிற்றிலக்கிய வகைகளுள் தூது என்பதும் ஒருவகை இலக்கியமாகும். இது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்று வேறுு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும். தமிழ்விடு தூது பாடல் அமைந்த விதம்: தமிழ்விடு தூது மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி தன் காதலி கூறி வருமாறு தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்துள்ளதுதான் தமிழ்விடு தூது. தமிழ்விடு தூது சிறப்பு; தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்   இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது. தமிழ்விடு தூது முக்கிய வினா விடை குறிப்புகள்: * தமிழ்விடு தூது ஒரு சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. * தமிழ்விடு தூது வில் இடம்பெறும் கண்ணி என்பதன் பொருள் இரண்டு கண்களை போல் இ...

நாலடியார் நூல் விளக்கம் மற்றும் ஆசிரியர்கள் முழு விளக்கம்

  1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் முதன்மையான பாடப்படும் நூல் "நாலடியார்" 2. தமிழ் மொழிகளில் திருக்குறளோடு ஒப்பிட்ட பாடப்படும் நூல் "நாலடியார்" 3. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே ஒரு தொகை நூல் "நாலடியார்" 4 . முப்பெரும் அற நூல்களில் ஒன்றாக திகழும் நூல் "நாலடியார்" 5. முப்பெரும் நூல்கள் யாவை "திருக்குறள்" "நாலடியார்" "பழமொழி நானூறு" 6. துறவறத்தையும், நிலையாமையும் அதிகமாக வலியுறுத்தி பாடப்பட்ட நூல் "நாலடியார்" 7. திருக்குறளைப் போன்று வகை தொகை கொண்டு வடிவமைக்கப்பட்ட நூல் "நாலடியார்" 8 . நாலடியார் பிரித்து எழுதுக "நாலடி  + ஆர்" 9. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறம் சார்ந்த நூல் எது "நாலடியார்" 10 . நாலடியார் என பெயர் வரக் காரணம் "நாலடி கொண்ட வெண்பாவால் எழுதப்பட்டதால் நாலடியார் என பெயர் பெற்றது" 11. நாலடியார் பாடலைப் பாடியவர்கள் "சமணமுனிவர்கள் பலரால்" 12 . நாலடியார் அடி எல்லை "4 அடிகள்" 13. நாலடியார் பாடல் உணர்த்தும் பொருள் "அறம் -...