பதிற்றுப்பத்து நூல் குறிப்பு - முக்கிய வினா விடைகள்..

1. எட்டுத்தொகை நூல்களுள் பாடாண் திணை சார்ந்து அமைந்த நூல்
  "பதிற்றுப்பத்து"

2. எட்டுத்தொகை நூல்களுள்  சேரஅரசர்களைப் மட்டுமே பற்றி பாடும் நூல்
    "பதிற்றுப்பத்து"

3. எட்டுத்தொகை நூல்களுள் இசையோடு பாடப்பெற்ற தொகைநூல்
    "பதிற்றுப்பத்து"

4. பாடல்கள் அனைத்தும் பாடல் தொடரால் பெயர்பெற்ற ஒரே ஒரு சங்கநூல்
   "பதிற்றுப்பத்து"

5. பதிற்றுப்பத்து பிரித்து எழுதுக
  "பத்து + பத்து"
   "பத்து+இன் + இற்று + பத்து"

6. பதிற்றுப்பத்து பாடிய புலவர்களின் எண்ணிக்கை
  "10"

7. பதிற்றுப்பத்து அடிவரையரை
    "8 அடிச் சிற்றெல்லையும்
    "57 அடி பேரேல்லையும்"

8. பதிற்றுப்பத்து ஒரு
     " புறப்பொருள் நூலாகும்"

9. பதிற்றுப்பத்து பாடல் தொகுப்பு எண்ணிக்கை
   "100"

10. பதிற்றுப்பத்து தொகுத்தவர்
     "யார் என்று தெரியவில்லை"

11. பதிற்றுப்பத்து தொகுப்பித்தவர்
     "யார் என்று தெரியவில்லை"

12. பதிற்றுப்பத்தின் வேறு பெயர்
   "இரும்புக் கடலை"

13. பதிற்றுப்பத்து முதலில் பதிப்பித்தவர்
   "தமிழ் தாத்தா டாக்டர் உ வே சாமிநாத ஐயர்"

14. பதிற்றுப்பத்து உரை எழுதியவர்
"சு. துரைசாமிப்பிள்ளை"

15. பதிற்றுப்பத்தில் எந்த பாடல்கள் கிடைக்கவில்லை
  "முதல் பத்து பாடல்"
"கடைசி பத்து பாடல்"

16. இரண்டாவது 10 பாடலை தொகுத்தவர்
   "குமட்டூர் கண்ணனார்"

17. இரண்டாவது 10 பாடலை தொகுப்பித்தவர்
   "இமய வரம்பன் நெடுஞ் சேரல்"

18. மூன்றாவது 10 பாடலை தொகுத்தவர்
    "பாலைக் கௌதமனார்"

19. மூன்றாவது 10 பாடலை தொகுப்பித்தவர்
    "பல்யானை செங்கெழுகுட்டுவன்"

20. நான்காவது 10 பாடலை தொகுத்தவர்
   "காப்பியாற்றுக் காப்பியனார்"

21. நான்காவது 10 பாடலை தொகுப்பித்தவர்
    "களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்"

22. ஐந்தாவது 10 பாடலை தொகுத்தவர்
   "பரணர்"

23. ஐந்தாவது 10 பாடலை தொகுப்பித்தவர்
   "செங்குட்டுவன்"

24. ஆறாவது 10 பாடலை தொகுத்தவர்
    "காக்கைப் பாடினியார்'

25. ஆறாவது 10 பாடலை தொகுப்பித்தவர்
      "ஆடுகோட்பாட்டுச் சேரவதான்'

26. ஏழாவது 10 பாடலை தொகுத்தவர்
     'கபிலர்"

27. ஏழாவது 10 பாடலை தொகுப்பித்தவர்
      "செல்வக் கடுங்கோ வாழியாதன்"

28. எட்டாவது 10 பாடலை தொகுத்தவர்
      "அரிசில் கிழார்"

29. எட்டாவது 10 பாடலை தொகுப்பித்தவர்
      "தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை"

30. ஒன்பதாவது 10 பாடலை தொகுத்தவர்
      "பெருங்குன்றூர் கிழார்"

31. ஒன்பதாவது 10 பாடலை தொகுப்பித்தவர்
       "இளஞ்சேரல் இரும்பொறை"

32. கபிலர் பரணர் ஆகிய கடைச் சங்கப் புலவர்களால் பாடப்பட்டது
  "ஆதலால் பதிற்றுப்பத்து கடைச்சங்க கால நூல் ஆகும்.
    

1 Comments

  1. பதிற்றுப்பத்து எந்த வகை சார்ந்த நூல்

    ReplyDelete
Previous Post Next Post