திருவேங்கடத்தந்தாதி – பிள்ளைப் பெருமாள் ஐயங்கார். அந்தாதி என்பது யாது: சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றுதான் “அந்தாதி“. அந்தம் – இறுதி என்றும். ஆதி – முதல் என்றும் பொருள்படும். ஒவ்வொரு பாடலின் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்து வரும் பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும். அந்தாதி – சொற்றொடர் நிலை என்று அழைக்கப்படுகிறது. திருவேங்கடத்தந்தாதி என்பது யாது: திருவேங்கடத்தில் கோயில் கொண்டிருக்கும் திருமாலின் அருளை வேண்டி பாடப்பெற்ற அந்தாதி நூல் […]
Month: February 2021
உலா இலக்கியம் விரிவான விளக்கம்: உலா என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும். பாட்டுடைத் தலைவன் உலா வருவதை சிறப்பித்துக் கூறுவதால் இந்நூல் உலா இலக்கியம் எனப் பெயர் பெற்றது. உலா என்பதற்கு “பவனி வரல்”என்பதன் பொருளாகும். உலா இலக்கியம் பெயர் வர காரணம்: தலைவன் வீதியில் உலா வர அவனைக் கண்டு பேதை, பெதும்பை, மங்கை, மட்டத்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழு வகை பருவ “மகளிர்-களும்” […]
காவடிச் சிந்து – சிந்து பாவகை சிந்து என்பது யாது: இசைத்தமிழ் பாகுபாடுகளில் ஒன்றான சிந்து ஐந்து இசை உறுப்புகளால் ஆன யாப்பு ஆகும். 5 இசை உறுப்புக்கள் பின்வருமாறு: * எடுப்பு 1 * துடுப்பு 1 * உறுப்புக்கள் 3 சிந்துவின் 3 உறுப்புக்கள் பின்வருமாறு: * பல்லவி * அநுபல்லவி * கண்ணிகள் அடங்கிய சரணம். காவடிச்சிந்து பற்றி சிறு குறிப்பு: காவடிச்சிந்து இசை பா வகைகளில் ஒன்றான […]
1. முக்கூடற்பள்ளு – (தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு) தமிழ்நாட்டில் நெல்லை என்று அழைக்கப்படுகின்ற திருநெல்வேலியில் “வடகிழக்கே அமைந்திருக்கும் சித்திரா நதி”மற்றும் கோதண்டராம நதி ஆகிய இருு நதிகளும் திருநெல்வேலிக்கே புகழ்பெற்ற “தாமிரபரணி” ஆற்றில் கலக்கும் இடம் தான் #முக்கூடல்#. என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் எழுந்தருளும் அழகர் என்ற தெய்வத்தின் மீது பாடப்பட்டதே “”முக்கூடற்பள்ளு”” ஆகும். 2. முக்கூடற்பள்ளு பெயர் அமையகாரணம் பின்வருமாறு: முக்கூடற்பள்ளு என்பதே இடத்தால் பெயர் பெற்ற பெயராகும். அத்தகைய முக்கூடல் […]