பிறந்த வருடம் : அக்டோபர் 1 – 1847.
இறந்த வருடம் : செப்டம்பர் 20 – 1933.
பெற்றோர் பெயர் : வில்லியம் பைஜ்வூட் ஹாரோ
இயற்பெயர் : அன்னி வூட்.
பிறந்த நாடு : (அயர்லாந்து) லண்டனில் குடிபெயர்ந்தார்.
முக்கிய இயக்கங்கள்: தன்னாட்சி இயக்கம், பேபிய சோசியலிச இயக்கம், குடும்பக்கட்டுப்பாடு இயக்கம்
சிறப்புப் பெயர்கள்: பிரம்மஞானவாதி, பெண்ணுரிமைவாதி,
அன்னிபெசன்ட் அம்மையார் வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்:
- லண்டனில் உள்ள சாதாரண ஐரியக் குடும்பத்தில் 1847 ஆம் ஆண்டு அன்னிபெசன்ட் அம்மையார் பிறந்தார். அன்னிபெசன்ட் அம்மையார் தன்னுடைய ஐந்து வயதில் தன் தந்தையை இழந்து அதன்பின் அன்னிபெசன்ட் ஹாரோ நகரில் ஆண்கள் பாடசாலை ஒன்றை நடத்தி வந்தார். அதன்பிறகு அன்னிபெசன்ட் அம்மையார் தனது 19ம் வயதில் 1867 ஆம் ஆண்டு பிராங்க் பெசண்ட் என்ற 26 வயது உடைய மதகுருவை தன் துணைவியாக மணந்தார்.
- அன்னிபெசன்ட் அம்மையார் டிக்பி, மேபேல் என்ற இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.கணவருடன் இணைந்து வாழ்ந்த அன்னிபெசன்ட் அம்மையார் மிகவும் கஷ்டமாக இருந்தது. பெண்ணுக்கு ஏற்பட்ட நோயினால் மனம் உடைந்த போது அன்னிபெசன்ட் அம்மையார் அன்னி நாத்திகரானார். கணவர் பெசண்ட் மனைவியை கோயிலுக்குச் செல்லும் படியும் கிறிஸ்தவ மதக் கொள்கைகளுக்கு ஏற்ப நடக்கும் படியும் வற்புறுத்தினார். அதன் பிறகு சுதந்திர மனப்போக்கு கொண்ட அன்னிபெசன்ட் அம்மையார் கணவரிடமிருந்து 1873 ஆம் ஆண்டு பிரிந்து வாழ முடிவெடுத்தார்.
- கணவரிடம் இருந்து பிரிந்த பின்னர் நிறைய கட்டுரைகள் எழுதத் தொடங்கினார் அன்னிபெசன்ட் அம்மையார். சிறுவர்களுக்கான கதைகள், கட்டுரைகள் எழுதினார். அன்னிபெசன்ட் அம்மையார் அரசியல் போக்கு கணவரிடம் இருந்து அவரை மேலும் பிரித்தது. பண்ணை விவசாயிகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர் அன்னிபெசன்ட் அம்மையார். இறுதியாக கணவன் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து லண்டனுக்குத் திரும்பினார். ஆனால் அதிகாரப்பூர்வமாக பிரிவினை கிடைக்கவில்லை என்பதால் இரண்டு குழந்தைகளும் பிராங்கின் பொறுப்பிலேயே வளர்ந்தனர்.
பிரம்மஞான சங்கம்:
- The secret Doctrine என்ற நூலை எழுதிய பிளேவட்ஸ்கி அம்மையாரை பாரிஸ் நகரில் 1889ஆம் ஆண்டு சந்திக்கும் வாய்ப்பு அன்னிபெசன்ட் அம்மையாருக்கு கிடைத்தது. இந்த வாய்ப்பு அன்னிபெசன்ட் அம்மையாரின் வாழ்க்கையில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாறுதல்களால் அன்னிபெசன்ட் அம்மையார் தன்னுடைய நாத்திக வாதத்தை கைவிட்டு ஆத்திகரானார்.அதன் பின்னர் பிரம்மஞான சங்கத்தில் உறுப்பினரானார் இதனை அடுத்து மார்க்சியவாதிகள் உடன் தனக்கிருந்த உறவுகளை துண்டித்துக் கொண்டார். 1891 ஆம் ஆண்டு பிளேவட்ஸ்கி இறந்ததை அடுத்து பிரம்மஞான சங்கத்தின் ஒரு முக்கிய புள்ளி ஆனார். அன்னிபெசன்ட் அம்மையார் அச்சபையின் சார்பில் 1893 ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலக கொலம்பிய கண்காட்சியில் கலந்து கொண்டார்.
- அதன்பிறகு அன்னிபெசன்ட் அம்மையார் 1893ஆம் ஆண்டு பிரம்மஞான சபையின் உறுப்பினராக முதல் தடவையாக இந்தியா வந்தார். பிரம்மஞானசபையின் அமெரிக்க கிளையின் தலைவரான வில்லியம் ஜார்ஜ் என்பவருடன் ஏற்பட்ட கருத்து மோதல்களைத் தொடர்ந்து அமெரிக்கக் கிளை தனியாகப் பிரிந்தது. மீதமிருந்த சபை ஹென்றி ஸ்டீல் ஓல்கொட் என்பவராலும் அன்னிபெசன்ட் அம்மையாரும் தலைமை வைக்கப்பட்டது. பிரம்மஞான சபையின் உலகளாவிய தலைவராக அன்னிபெசன்ட் 1907ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.
அன்னிபெசன்ட் அம்மையாரின் பிரம்ம ஞான சபையின் நோக்கங்கள்:
- உலக சகோதரத்துவத்தை மையமாகக் கொண்டு செயல்படல்.
- உலக சமயங்கள், தத்துவங்கள், அறிவியல் கலை ஒப்பிட்டு ஆய்வு செய்வது.
- மனிதர்களிடையே மறைந்து கிடைக்கும் இயற்கை நியதிகளை கண்டறிவது.
இந்தியாவில் அன்னிபெசன்ட் அம்மையாரின் பங்களிப்பு:
- இந்தியா வந்த அன்னிபெசண்ட் அம்மையார் சென்னையில் அடையாறில் பிரும்மஞான சங்கத்தின் தலைமை நிலையத்தை நிறுவினார். இந்து சாத்திரங்களை ஆழ்ந்து படித்து பல நூல்களை எழுதிய அன்னிபெசன்ட் அம்மையார் பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதன்பிறகு காசியில் சில காலம் வசித்த அன்னிபெசன்ட் அம்மையார் அங்கு இந்து சமய விளக்கங்களை முறைப்படி பெற்றார். இந்திய உடை தரித்து இந்துவாகவே வாழலானார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் அன்னிபெசன்ட் அம்மையாரின் பங்களிப்பு:
- அன்னிபெசன்ட் அம்மையார் இயற்கையிலேயே புரட்சி மனப்பான்மை கொண்டவர். புரட்சி மனப்பான்மை கொண்டதால் ஆங்கிலேய அரசின் அடக்குமுறைகள் அவரை வெகுவாகப் பாதித்தன. விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக “காமன் வீல்” என்ற வாரப் பத்திரிகையை 1914 ஆம் ஆண்டு ஆரம்பித்தார். அதன்பிறகு 1915ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னையில் இருந்து “நியூ இந்தியா” என்ற பெயரில் இதழ் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார். இதன்மூலம் அன்னிபெசன்ட் அம்மையார் அரசியலில் தனது கால் தடத்தை பதித்தார்.
காங்கிரஸ் தலைமைப் பதவியில் அன்னிபெசன்ட் அம்மையாரின் பங்களிப்பு:
- 1907 ஆம் ஆண்டு சூரத் நகரில் இடம்பெற்ற இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட அன்னிபெசன்ட் அம்மையார் இம்மாநாட்டில் மிதவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் ஏற்படவிருந்த பெரும் பிளவை தவிர்த்து லக்னோவில் இடம்பெற்ற மாநாட்டில் இரு பிரிவினரையும் இணைத்து வெற்றி கண்டவர். பிறகு (ஹோம் ரூல்) சுயாட்சி இயக்கத்தை தொடங்கிய அன்னிபெசன்ட் அம்மையார் நாடு முழுவதிலும் அதன் கிளைகளை உருவாக்கினார். அன்னிபெசன்ட் அம்மையார் தனது தலைமை பதவி காலத்தில் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விடுதலை இயக்கத்தை வலுப்பெற செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அன்னிபெசன்ட் அம்மையாரின் சுற்றுப் பயணங்களுக்கும், பொதுக் கூட்டங்களுக்கும் ஆங்கிலேய அரசு தடை விதித்தது. அதன்பிறகு 1917 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதி ஏனைய காங்கிரஸ் தலைவர்களுடன் அன்னிபெசன்ட் ஐயும் கைது செய்தது ஆங்கிலேய அரசு இவர்களின் கைதைக் கண்டித்து காங்கிரஸ் இயக்கம் மற்றும் முஸ்லிம் லீக் ஆகியன சத்தியாக்கிரகம் செய்யப்போவதாக அறிவித்தது. இதனால் நிலை குலைந்த ஆங்கில அரசு செப்டம்பரில் இவர்களை விடுதலை செய்தது.
- பிறகு டிசம்பரில் 1917-ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரஸின் தலைவராக ஓராண்டிற்கு அன்னிபெசன்ட் அம்மையார் பணியாற்றினார். அதன்பிறகு லாகூரில் ஜவகர்லால் நேருவின் தலைமையில் 1929 ஆம் ஆண்டு கூடிய காங்கிரஸ் மாநாட்டில் முழுமையான சுயாட்சி கோரி அறிக்கை வெளியானதில் காங்கிரஸ் சோசலிச சார்பாக கருத்துக்களை வெளியிட்டமை அன்னி பெசன்ட் இன் கொள்கைகளுக்கு உரியதாக இருக்கவில்லை இதனால் அவர் மகாத்மா காந்தியின் சத்தியாக்கிரக இயக்கங்களில் சேரவில்லை.
- அதன்பிறகு காங்கிரஸில் இருந்து விலகி கொண்டார். விலகிய பின்பும் இந்திய விடுதலையில் முன்போலவே ஈடுபட்டு இந்தியாவில் மட்டுமல்லாமல் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்ட போது அங்கும் இந்திய விடுதலைக்கு ஆதரவாக பொது மேடைகளில் உரையாற்றினார். 1929ஆம் ஆண்டு பொதுநலவாய இந்தியா என்ற பெயரில் ஒரு அறிக்கையை எழுதி பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்ற பெருமை அன்னிபெசன்ட் அம்மையாரை சாரும்.
அன்னிபெசன்ட் அம்மையாரின் இறுதிக்கால புகழ்:
- அன்னிபெசன்ட் அம்மையார் தனது 81 ஆம் அகவையில் தீவிர அரசியலில் இருந்து விலகி அன்னிபெசன்ட் இறுதிக் காலங்களில் இந்திய மெய்யியலாளரான ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி உடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். பிரம்மஞான சபையின் முன்னேற்றத்தில் முறைப்பாக ஈடுபட்ட அன்னிபெசன்ட் அம்மையார் தனது 87 அகவையில் 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் நாள் சென்னையில் உள்ள அடையாற்றில் தான் அன்னிபெசன்ட் அம்மையார் இவ்வுலகை விட்டு மறைந்தார்.
- அன்னிபெசன்ட் அம்மையாரின் மறைவிற்கு பின்னர் அவரது நண்பர்களான ஜே.கிருஷ்ணமூர்த்தி, ஆல்டஸ் ஹக்ஸ்லி, ரோசலின் ராஜகோபால் ஆகியோர் இணைந்து கலிபோர்னியாவில் “ஹாப்பி வழி பாடசாலையை” அமைத்தார்கள். இப்பாடசாலை தற்போது அன்னிபெசன்ட் அம்மையாரின் நினைவாக “பெசன்ட் ஷில் பாட சாலை” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அன்னி பெசண்ட் அமைத்த சென்னை அடையாறில் உள்ள பிரம்மஞான சபை இன்றும் அவர் புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது.
- மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தை அன்னிபெசன்ட் ஏற்றுக்கொண்டதால் தன்னாட்சி இயக்கம் வீழ்ச்சி கண்டது. இருப்பினும் 1929 ஆம் ஆண்டு வி.கே. கிருஷ்ண மேனன் இந்தியா லீக் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது தான் தன்னாட்சி இயக்கம்.
அன்னிபெசன்ட் அம்மையார் நடத்திய பத்திரிக்கை இதழ்கள்:
- நியூ இந்தியா – 1915
- காமன் வீல் – 1914
அன்னிபெசன்ட் அம்மையார் மொழிபெயர்த்த நூல்கள்:
- பகவத் கீதை (ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்).
அன்னிபெசன்ட் அம்மையாரின் முக்கிய சிறப்புகள்:
1. காந்தியடிகளுக்கு முன்புவரை இந்திய அரசியலில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த தலைவர் அன்னிபெசன்ட் அம்மையார்.
2. பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.
3. தன்னாட்சி சங்கத்தை தோற்றுவித்தவர்.
4. சுதேசி இயக்கத்தை ஊக்குவித்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிறப்பாக பங்கேற்றவர்.
5. “கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழியும் சொல்லாற்றல் மிக்கவர்” அன்னிபெசன்ட் அம்மையார் ஆவார்.
6. இந்திய காங்கிரஸ் மாநாட்டில் தலைமை வகித்த முதல் பெண்மணி அன்னிபெசன்ட் அம்மையார் ஆவார்.
7. இந்து சமயத்தின் மீது பெரும் மதிப்பு கொண்டவர்.
8. இந்து சமயம் சிறந்த முறையில் பேணிக்காக்காவிட்டால் இந்தியாவிற்கு எதிர்காலம் கிடையாது என்று சொன்னவர்.
9. இந்திய மகளிர் சங்கத்தை தோற்றுவித்தவர்.
10. இளமை திருமணத்தை எதிர்த்தவர், பெண்கள் மறுமணத்திற்கு குரல் கொடுத்தவர்.
11. வாழ்நாள் முழுவதும் இந்தியாவின் மேம்பாட்டிற்கு பெண் விடுதலைக்கு பாடுபட்டவர்.