பிறந்த வருடம் : 10 – 03 – 1993.
பிறந்த ஊர் : சமுத்திரம் (சேலம் மாவட்டம்).
பெற்றோர் பெயர் : தந்தை (துரைசாமியார்) மற்றும் தாயார் (குஞ்சம்மாள்).
இயற்பெயர் : ராசமாணிக்கம் (துரை மாணிக்கம்).
சிறப்பு பெயர்கள் : பாவலரேறு , தற்கால நக்கீரர்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆசிரியர் குறிப்பு:
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் “இராசமாணிக்கம்” என்பதாகும். பெருஞ்சித்திரனார் தம் தந்தையார் பெயரின் முன்னோட்டை இணைத்து “துரைமாணிக்கம்” என தொடக்க காலத்தில் வைத்துக் கொண்டார்.
இருபதாம் நூற்றாண்டின் தமிழ் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெரும் காரணமாக விளங்கியவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் “வேலுப்பிள்ளை பிரபாகரன்” தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும், அவரது தோழர்களையும் அரணாக காத்து அவர்களை வளர்த்தெடுத்த வரும் இவர் தான்.
20 முறை சிறை சென்றும் இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் தமிழீழ போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பெருஞ்சித்திரனாரின் கொள்கைகள்:
பெருசித்தனார் மொழித் தளத்தில் தனித்தமிழ் கொள்கையையும், அரசியல் தளத்தில் தனித்தமிழ்நாடு கொள்கையையும் கொண்டவர் ஆவார். 1950களில் முதன்முதலில் வெளிவந்த இவரது “தென்மொழி” இதழ் தொடர்ச்சியாக இவ்விரு கொள்கைகளையும் தொடர்ந்து பரப்புரை செய்து வந்தார்.
தமிழர்கள் குல மத வேறுபாடுகள் இருந்து வெளியேறி தம்மை தமிழர்கள் என உணர்ந்து தமிழ்நாட்டினை தனி நாடாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதே இவரது கருத்துக்கள் ஆகும். தமிழக விடுதலை போலவே தமிழீழ விடுதலையையும் தொடர்ந்து ஆதரித்து பரப்புரை செய்து பெருஞ்சித்தனார் செயற்பட்டார்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார் படைப்புகள் (இயற்றிய நூல்கள்):
1. கொய்யாக்கனி
2. ஐயை
3. பாவியக் கொத்து
4. எண்சுவை எண்பது
5. மகபுகுவஞ்சி
6. அறுபருவதெருக்கூத்து
7. கனிச்சாறு
8. நூறாசிரியம்
9. கற்பனை ஊற்று
10. உலகியல் நூறு பள்ளிப்பறவைகள்
பெருஞ்சித்தனார் எழுதிய இதழ்கள்:
1. தென்மொழி
2. தமிழ்ச்சிட்டு
3. தமிழ்நிலம்
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கவிதை:
“அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்ந்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக் கடல் கொண்ட நாட்டிடையில்
மண்ணி அரசிருந்த மண்ணுலக பேரரசே! …..
பெருஞ்சித்தனார் மறைவு :
காலமெல்லாம் தமிழ், தமிழ் என்று கூவிக்கூவி தமிழினத்திற்கு விடியலை தேடி தர உழைத்த தமிழ் சேவல்,1995 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திங்கள் 11 ம் நாள் தமது 62 ஆம் வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.