1. நாலடியார்(அறநூல்)
2. நான்மணிக்கடிகை (அறநூல்)
3. இன்னா நாற்பது (அறநூல்)
4. இனியவை நாற்பது (நீதி நூல்)
5. கார் நாற்பது (அகநூல்)
6. களவழி நாற்பது (புறநூல்)
7. ஐந்திணை ஐம்பது (அகநூல்)
8. ஐந்திணை எழுபது (அகநூல்)
9. திணைமொழி ஐம்பது (அகநூல்)
10. திணைமாலை நூற்றைம்பது (அகநூல்)
11. திருக்குறள் (நீதி நூல்)
12. திரிகடுகம் (நீதி நூல்)
13. ஆசாரக்கோவை (நீதி நூல்)
14. பழமொழி நானூறு (நீதி நூல்)
15. சிறுபஞ்சமூலம் (நீதி நூல்)
16. கைந்நிலை (அகநூல்)
17. முதுமொழிக்காஞ்சி (நீதி நூல்)
18. ஏலாதி (நீதி நூல்)
1. நாலடியார் நூல் குறிப்பு:
திருக்குறளுக்கு அடுத்த படியாக போற்றப்படும் “நீதி நூலாகும்” இது நாலடி நானூறு எனவும் அழைக்கப்படுகிறது.
திருக்குறளை போலவே அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என மூன்று வகை பிரிவுகளை கொண்டுள்ளது.
அறத்துப்பால் – 13
பொருட்பால் – 24
காமத்துப்பால் – 3
ஜி. யு. போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். “நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழியில் வரும். நாலும் என்பது நாலடியாரையும் இரண்டும் என்பது திருக்குறளையும் குறிப்பதாகும்.
எடுத்துக்காட்டாக:
“செல்வம் சகட கால்போல் வரும்”
“கல்வி கரையில கற்பவர் நாள்சில”
2. நான்மணிக்கடிகை நூல் குறிப்பு:
கடிகை என்பதற்கு “துண்டு” என பொருள்படும்.
நான்கு மணிகளின் துண்டுகள் இணைந்த மாலை போல ஒவ்வொரு பாடலிலும் மணி போன்று நான்கு கருத்துக்களுடன் பாடப் பெற்று உள்ளதால் இதனை “நான்மணிக்கடிகை” என அழைக்கப்படுகிறது.
3. இன்னா நாற்பது நூல் குறிப்பு:
ஒவ்வொரு கருத்து முடிவிலும் “இன்னா” என கூறப்படுவதால் “இன்னா நாற்பது” என்று அழைக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக:
“ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் இன்னா”
“உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா”
4. இனியவை நாற்பது நூல் குறிப்பு:
இனிய பொருட்களை பாடல்களில் தொகுத்து கூறி உள்ளமையால் இப்பெயர் பெற்றுள்ளது.
5. திரிகடுகம் நூல் குறிப்பு:
திரி + கடுகம் = திரிகடுகம். சுக்கு, மிளகு, திப்பிலி இம்மூன்று மூலப்பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட மருந்துக்கு திரிகடுகம் என்று பெயர்.
” காளாளன் என்பவன் கடன்படா வாழ்பவன்”
6. ஆசாரக்கோவை நூல் குறிப்பு:
ஆசாரம் என்பது ஒழுக்கம் மற்றும் கோவை என்பது அடுக்கி கூறுதல்.
ஒழுக்க நெறிகளைப் பற்றியும் நாள்தோறும் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றியும் குறிப்பிடுகிறது இந்த ஆசாரக்கோவை.
7. பழமொழி நானூறு நூல் குறிப்பு:
பழமை + மொழி இது பழமொழி நானூறு என்று அழைக்கப்படுகிறது. நீதிக் கருத்தை விளக்கிக் காட்டும் வகையில் அமைக்கப்பட்ட நூல் பழமொழி 400 ஆகும்.
திருக்குறள், நாலடியார் நூல்களோடு ஒருங்கே வைத்து போற்றத்தக்க பெருமை உடையது.
“பாம்பின் கால் பாம்பறியும்”
“கண்டதைக் கற்க பண்டியதனாவான்”
8. சிறுபஞ்சமூலம் நூல் குறிப்பு:
மூலம் என்பது வேர். பஞ்சம் என்பது ஐந்து. சிறுவழுதுணை, நெருஞ்சி, சிறுமல்லி, பெருமல்லி, கண்டங்கத்திரி ஆகிய ஐந்து வேர்கள் நோய்களைப் போக்கி உடலுக்கு உறுதி தருவது போல இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
9. ஏலாதி நூல் குறிப்பு:
ஏலாதி என்பது மருத்துவப் பெயர். ஏலம் + லவங்கம் + நாககேசரம் + சுக்கு + மிளகு + திப்பிலி ஆகிய ஆறு வகை மருந்துகளின் கலவை “ஏலாதி” ஆகும்.
10. திருக்குறள் நூல் குறிப்பு:
திரு + குறல் = திருக்குறள்.
அறத்துப்பால் – 38
பொருட்பால் – 70
காமத்துப்பால் – 25
133 அதிகாரங்கள் மற்றும் 1330 குறள்களையும் 9 இயல்களைக் கொண்டுள்ளது.
அறத்துப்பால் 4 இயல்கள்:
* பாயிரவியல்
* இல்லறவியல்
* துறவறவியல்
* ஊழியல்
பொருட்பால் 3 இயல்கள்:
* அரசியல்
* அங்கவியல்
* ஒழிபியல்
காமத்துப்பால் 2 இயல்கள்:
* களவியல்
* கற்பியல்
11. முதுமொழிக்காஞ்சி நூல் குறிப்பு:
கல்வியைக் காட்டிலும் ஒழுக்கமே சிறந்தது எனக் கூறுகிறது முதுமொழிக்காஞ்சி.
12. களவழி நாற்பது நூல் குறிப்பு:
ஏர்களம் பற்றியும் போர்க்களம் பற்றியும் பாடப் பெறுவது களவழி நாற்பது ஆகும். இந்நூல் முழுவதும் யானைப்போர் பற்றிய அழகிய வீரக் கற்பனைகளை தருகிறது.
13. கார்நாற்பது நூல் விளக்கம்:
அகப்பொருள் கூறும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மிகச்சிறிய நூல் கார் நாற்பது ஆகும். காலத்தின் அழகிய இயற்கை வர்ணனைகள் இடம் பெற்றுள்ள நூல்.
முல்லைத் திணைக்குரிய அகப்பொருள் இதில் சித்தரிக்கப்படுகின்றது. முல்லை நிலத்தின் முதல், கரு உரிப்பொருள்கள் அழகுற சொல்ல பெற்றிருக்கின்றன.
14. ஐந்திணை ஐம்பது நூல் குறிப்பு:
ஆசிரியர் பொறையனார் அகத்திணைகலான முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் எனும் ஐந்து திணைக்கு பத்து பாடல்களாக 50 பாடல்கள் இடம் பெற்றுள்ளது.
இந்நூல் சிறந்த செய்யுள் நடையும், செறிந்த பொருளையும் கொண்டுள்ளதாகும்.
“ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதார்” என்று இந்நூலின் சிறப்பை உணர்த்த பாயிரப் பாடல் கூறுகிறது.
15. ஐந்திணை எழுபது நூல் குறிப்பு:
ஆசிரியர் மூவாதியார். ஒவ்வொரு திணைக்கும் 14 பாடல்கள் வீதம் ஐந்து திணைக்கும் 70 பாடல்கள் அமைந்துள்ளன.இது அகப்பொருட்டுறைகளை விளக்க எழுந்த சிறந்த நூலாகும்.
16. திணைமாலை நூற்றைம்பது நூல் குறிப்பு:
ஆசிரியர் மாக்காயனார் மாணாக்கன் கணிதமேதாவியார் இவரே எழுதியவர். ஒவ்வொரு திணைக்கும் 30 பாடல்கள் வீதம் 150 பாடல்கள் அமைந்துள்ளன. அகத்திணை கருத்துக்கள் அமைந்த இப்பாடல்களில் வடசொற்களும் சில கலந்துவரும் கீழ்க்கணக்கில் உள்ள அகப்பொருள் நூல்களில் இதுவே பெரிய நூலாகும்.
17. கைந்நிலை (ஐந்திணை அறுபது) நூல் குறிப்பு:
ஆசிரியர் புல்லங்காடனார். இதில் 12 முதல் 60 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதிலும் வட சொற்கள் பல கலந்துள்ளன.
18. திணைமொழி ஐம்பது நூல் குறிப்பு:
ஆசிரியர் கண்ணன் சேந்தனார். அகத்திணை ஐந்திற்கும் தலைக்கு பத்து பாடல்கள் வீதம் 50 வெண்பாக்களை அமைந்த நூல் ஆதலால் திணைமொழி ஐம்பது என பெயர் பெற்றது. இதில் அமைந்துள்ள உவமைகள் அறிந்து இன்புற தக்கவை.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிய முக்கிய வினா விடைகள்:
1. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள நீதி நூல்கள், அக நூல்கள், புற நூல்கள் எத்தனை?
நீதி நூல்கள் 11
அகநூல்கள் 5
புறநூல்கள் 1 (இந்நிலையை சேர்த்தால் புறநூல்கள் 2)
2. சங்கம் மருவிய கால இலக்கியங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.
3. நான்காம் தமிழ்ச் சங்கம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
கிபி 470
4. நான்காம் தமிழ் சங்கம் யாரால் தொடங்கப்பட்டது?
வச்சிர நந்தி
5. வச்சிர நந்தி எந்த சமயத்தைச் சார்ந்தவர்?
சமணம்
6. வச்சிர நந்தியால் ஆரம்பிக்கப்பட்ட சங்கத்தின் பெயர் என்ன?
திராவிட சங்கம்
7. திராவிட சங்கத்தை நூல்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
8. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் மருந்து பெயரால் வழங்கப்படும் நூல்கள்?
திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி
9. கீழ்க்கணக்கு நூல்களின் காலம்?
கிபி 100 முதல் 700 வரை
10. இரட்டை அறநூல்கள் என்று அழைக்கப்படுவது?
இன்னா நாற்பது (கபிலர்)
இனியவை நாற்பது (பூதஞ்சேந்தனார்)
11. மேற்கணக்கு நூல்களின் மரபு என்ன?
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா என்னும் ஐந்து பாக்களிலும் இலக்கண மரபு படி 50 முதல் 500 வரை உள்ள செய்யுட்களை பாடி அமைப்பது.
12. கீழ்க்கணக்கு நூல்களின் மரபு என்ன?
வெண்பா யாப்பில் வந்து, ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளைக் கொண்டு வரும். அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும் அல்லது ஒன்றையோ கொண்டுவருவது கீழ்க்கணக்கு நூல்களின் மரபு ஆகும்.
13. மேற்கணக்கு, கீழ்க்கணக்கு நூல்களுக்கு இலக்கண நூல் எது?
பன்னிருபாட்டியல்.
14. தொல்காப்பியர் கூறும் “அம்மை” என்னும் வனப்பு பெற்ற நூல்கள்?
நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது.
15. இருண்ட காலத்து விருத்தங்கள் யாவை?
கிளி விருத்தம், எலி விருத்தம், நரி விருத்தம்.
16. இன்னிலை பாடியவர் ?
பொய்கையார்.
17. இன்னிலையை முதலில் பதித்தவர் – வ.ஊ.சி
18. இந்நிலை புறம் பற்றிய நூலாகும்.
19. இன்னிலை 45 பாடல்களைக் கொண்டது. (அரப் பால் பத்தும், பொருட்பால் 9-ம், இன்பப் பால் 12-ம் வீட்டிலகப்பால் ஆக மொத்தம் 45 வெண்பாக்களைக் கொண்டது கடவுள் வாழ்த்து நீங்கலாக)
20. இந்நிலையில் கடவுள் வாழ்த்து பாடியது?
பாரதம் பாடிய பெருந்தேவனார்.
21. இந்நிலையை தொகுத்தவர் – மதுரை ஆசிரியர் பூதனார்.
22. நாலடியாரை எழுதியவர்கள் – 400 சமணமுனிவர்கள்.2
23. வேளாண் வேதம் என்று அழைக்கப்படுவது – நாலடியார்.
24. திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் பதினெண்கீழ்க்கணக்கு நூல் – நாலடியார்.
25. முத்தரையர் எனும் பிரிவினரைப் பற்றி கூறும் நூல் – நாலடியார்.
26. நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி. யு. போப்.
27. “ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” இக்கூற்று பெருமை பாடும் நூல்கள் – நாலடியார், திருக்குறள்.
28. நாலடியாரை தொகுத்தவர் யாராக இருக்கலாம் என்று இலக்கியங்கள் கூறுகின்றன – பதுமனார்.
29. நாலடியார் எவ்வாறு பகுக்கப்பட்டுள்ளது?
அறத்துப்பால் 13 அதிகாரங்கள், பொருட்பால் 24 அதிகாரங்கள், காமத்துப்பால் 3 அதிகாரங்கள்.
30. நான்மணிக்கடிகை இயற்றியவர் யார் – விளம்பிநாகனார்.
31. நான்மணிக் கடிகையின் மொத்த பாடல் எண்ணிக்கை – 103
32. நான்மணிக்கடிகை கடவுள் வாழ்த்து யாரைப் பற்றியது – திருமால்.
33. விளம்பி நாயனாரின் சமயம் – வைணவம்.
34. இன்னா நாற்பது ஆசிரியர் – கபிலர்.
35. இன்னாநாற்பது பாவகை – வெண்பாக்கள்.
36. இன்னா நாற்பது மொத்தம் எத்தனை பாடல்களைக் கொண்டது – 40+1 (கடவுள் வாழ்த்து பாடல் உட்பட 41 பாடல்கள்)
37. இன்னாநாற்பது எதைப் பற்றிக் கூறுகிறது – 164 கூடாத செயல்கள் எவை என்பது பற்றி கூறுகிறது.
38. இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்தில் வழங்கப்படும் தெய்வங்கள் – சிவன், பலராமன், மாயோன், முருகன்.
39. “பிறர் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா” பாடல் வரி இடம்பெறும் நூல் – இன்னா நாற்பது.
40. இனியவை நாற்பது ஆசிரியர் – பூதஞ்சேந்தனார்.
41. இனியவை நாற்பதில் இடம்பெறும் கருத்துக்கள் – 124
42. இனியவை நாற்பதில் கடவுள் வாழ்த்துப் பாடலில் இடம்பெறும் கடவுள்கள் – சிவன், மால், பிரம்மன்.