Categories
Uncategorized

தேவநேய பாவணர் ( மொழி ஞாயிறு பாவாணர்)வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு

1                                                                                                                                                     பிறந்த வருடம் : பிப்ரவரி 7 ,1902

பிறந்த ஊர் : சங்கரன்கோவில் (திருநெல்வேலி மாவட்டம்).

பெற்றோர் பெயர் : ஞானமுத்து தேவேந்தரனார் மற்றும் பரிபூரணம் அம்மையார்.

இயற்பெயர் : தேவநேசன்.

பிள்ளைகள் : நச்சினார்க்கினிய நம்பி, சிலுவையை வென்ற செல்வராசன், அருங்கலை வல்லான் அடியார்க்குநல்லான், மடன்தவிர்த்த மங்கையர்கரசி, மணிமன்ற வாணன்.

சிறப்பு பெயர்கள் : தமிழறிஞர், சொல்லாராய்ச்சி வல்லுநர், மொழிஞாயிறு பாவனார், தனித்தமிழ் அரிமா, தமிழ் பெருங்காவலர், செந்தமிழ்ச் செல்வர்.

*** தனித்தமிழ் ஊற்று, இலக்கியப் பெட்டகம், இலக்கணச் செம்மல், தமிழ்மானம் காத்தவர், தமிழ் பெருங்காவலர் என 174 சிறப்புப் பெயர்களை பெற்றவர் இவரே.

தேவநேய பாவாணர் வாழ்க்கைக் குறிப்பு:

தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் ஒருவராகவும் “மொழிஞாயிறு” என்னும் பட்டத்திற்கு உரியவராகவும் எவனுக்கும் தலைவணங்காத “தனித்தமிழ் அரிமா” எனும் பட்டத்திற்கு சொந்தக்காரர் தான் தேவநேயப் பாவாணர் ஆவார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரநயினார் கோயிலை (சங்கரன்கோவில்) அடுத்து 07-02-1902 ஆம் ஆண்டு ஞானமுத்து மற்றும் பரிபூரணம் தம்பதியருக்கு நான்காம் மகனாகவும் கடைசிப் பிள்ளையாக பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்டபெயர் “தேவநேசன்”. 1906 ஆம் ஆண்டிலேயே பாவனாவின் தந்தையாரும், அன்னையாரும் அடுத்தடுத்த இயற்கை எய்தினர்.

இதை எடுத்து தேவநேசன் சிறு பிள்ளையாய் ஆதலால் தக்கார் ஒருவர் பொறுப்பில் வளர வேண்டிய நிலை ஏற்பட்டது. அச்சமயம் அவருடைய இரண்டாவது அக்காள் திருவாட்டி பாக்கியத்தாய் அம்மையார் தேவநேசனை வளர்க்கும் பொறுப்பை கனிவுடன் ஏற்றுக்கொண்டார்.

தேவநேய பாவணர் மிகச் சிறந்த தமிழறிஞரும் சொல்லாராய்ச்சி வல்லுனரும் ஆவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லி இயல்புகளை கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சி செய்துள்ளார்.மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடி மரமாய் ஆல்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார்.

இவருடைய ஒப்பரிய தமிழறிவும், பன்மொழி இயல் அறிவும் கருதி சிறப்பாக “மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்” என்று அழைக்கப் பட்டார்.

தமிழ் உலக மொழிகளில் மூத்த மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்கு தாயாகவும்,ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென வாதிட்டவர். கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் உள்ளிட்டவைகளுக்கு தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று நிறுவியவர் பாவாணர் ஆவார்.

தமிழின் வேர்ச்சொல் வளத்தையும், செழுமையையும் சுட்டிக்காட்டி அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார்.

பாவணார் 1902ஆம் ஆண்டு பிப்ரவரி (7 )ஏழாம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஞானமுத்து என்னும் கணக்கையாருக்கும், பரிபூரணம் அம்மையார் எனும் அம்மையாருக்கும் பத்தாவது மகவாகவும் நான்காவது மகனாகவும் பிறந்ததாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர நயினார் கோவிலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய தந்தையாக போற்றப்படும் பாவலரேறு பெருஞ்சித்தனாருக்கு ஆசிரியராக இருந்த இவர் , அவரின் தென் மொழி வாயிலாகவே உலகிற்கு வெளிப்பட்டார். தென்மொழி இயக்கமே அவரின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றது.

தென்மொழி இயக்கம் தான் அவருக்கு “மொழிஞாயிறு” என்ற பட்டமும் வழங்கியது.

தேவநேய பாவாணர் எழுதிய நூல்கள்:

1. இசை கலம்பகம்

2. இயற்றமிழ் இலக்கணம்

3. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்

4. ஒப்பியன் மொழிநூல்

5. தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்

6. தமிழர் திருமணம்

7. திராவிடத்தாய்

8. பழந்தமிழ் ஆராய்ச்சி

9. இசைத்தமிழ் சரித்திரம்

** தேவநெய பாவனர் 40க்கும் மேற்பட்ட நூல்கள் மற்றும் 150க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

தேவநேய பாவாணர் கட்டுரைத் தொகுப்பு நூல்களும் கட்டுரைகளும்:

1. இலக்கணக் கட்டுரைகள்

2. தமிழியற் கட்டுரைகள்

3. மொழியாராய்ச்சி கட்டுரைகள்

4. மொழிநூற் கட்டுரைகள்

5. பண்பாட்டுக் கட்டுரைகள்

6. தென்சொற் கட்டுரைகள்

7. செந்தமிழ் சிறப்பு

8. தலைமை தமிழ்

* தனிச் சொற்கள்

* தொகுதி சொற்கள்

9. மறுப்புரை மாண்பு

10. தமிழ் வளம்

11. பாவணார் நோக்கில் பெருமக்கள்

12. பாவாணர் உரைகள்.

தேவநேய பாவணர் பெற்ற விருதுகள்:

* மதுரை தமிழ்காப்புக்கலம்பகம் – 12 /01/1964 ஆம் அன்று ” தமிழ் பெருங்காவலர்” விருது வழங்கியது.

* குன்றக்குடி அடிகளார் பாரிவிழாவில் – “செந்தமிழ் ஞாயிறு விருது” வழங்கினார்.

* தமிழக அரசு – “செந்தமிழ்ச் செல்வர்” விருது வழங்கியது.

தேவநேய பாவாணரின் பொன்மொழி:

உழுதொழில் நிற்கின் மறுதொழில் நடவா…

தேவநேய பாவாணரின் பழமொழி:

உழுவோர் உழைப்பால்தான் உலகோர் பிழைப்பார்…

தேவநேய பாவாணரின் நினைவு நாள்:

மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்று “மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும்” எனும் பொருளில் 75 நிமிடங்கள் உரையாற்றினார். அன்று (05-01-1981) எனவே உடல் நலம் கெட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நோயிலிருந்து மீளாமலே இவ்வுலகை விட்டு ஜனவரி 15 – 1981 ஆம் நாளில் அதிகாலை இயற்கை எய்தினார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *