ஜி. யு.போப் வாழ்ந்த காலம் : 24 – 04 – 1820 முதல் 11 – 02 – 1908 வரை வாழ்ந்தார்.
ஜி.யு. போப் பிறந்த இடம் : கனடா நாட்டில் ( Bedeque) என்ற ஊரில் பிறந்தார்.
ஜி.யு.போப் தமிழ் பெயர் : ஜார்ஜ் யூக்ளோ போப்.
ஜி.யு .போப் – ன் இயற்பெயர் : ஜார்ஜ் யூக்ளோ.
ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல்கள் : திருக்குறள் ,நாலடியார், திருவாசகம்.
ஜி.யு.போப் வாழ்க்கை வரலாற்று குறிப்புகள் :
ஜி. யு. போப் கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ்நாட்டிற்கு வந்து 40 ஆண்டுகாலம் தமிழுக்கு சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.
கனடாவின் பிரின்ஸ் எட்வேர்ட் தீவில் ஜான் போப் மற்றும் காதரீன் யூக்ளோ ஆகியோருக்கு பிறந்தவர்தான் ஜி. யு. போப். தந்தையாரின் வாணிபத்திற்காக எட்வர்ட் தீவு சென்றிருந்த குடும்பம் ஜி. யு.போப் – ன் குழந்தை பருவத்திலேயே 1820 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் திரும்பியது. அவர் தனது 19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார்.
இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 ஆம் ஆண்டு முதல் 1908 ஆம் ஆண்டு வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார். 1886 ஆம் ஆண்டு திருக்குறளை“ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்” என்பது குறிப்பிடத்தக்கது.
புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார். தமிழ் மீது பெரும் பற்று கொண்ட இவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
ஜி.யு.போப் தமிழுக்கு செய்த தொண்டுகள்:
* இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 ஆம் ஆண்டு முதல் 1908 ஆம் ஆண்டு வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார்.
* 1886 ஆம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
* புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களை பதிப்பித்தார்.
* தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர் நாலடியார், திருவாசகம் ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
ஜி.யு.போப் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து ஆற்றிய தொண்டு பணிகள்:
விவிலிய நூல்கள் கழகத்தை சேர்ந்த சமயப்பணி புரிவதற்காக 1839 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்தார். ஜி.யு. போப் கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழ்மொழியை நன்கு கற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னைக்கு வந்த போப். சாந்தோம் பகுதியில் தங்கி வெஸ்லியன் சங்கம் சார்பாக சென்னை வந்த போப்.சென்னையில் உள்ள இங்கிலாந்து திருச்சபையில் சேர்ந்தார்.
சென்னையில் உள்ள இங்கிலாந்து திருச்சபையில் “குரு பட்டம்” பெற்றார்.அதன்பிறகு எஸ்.பி.ஜி எனும் நற்செய்திக் கழகத்தின் தொண்டராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். அச்சங்கத்தால் “சாயர்புரம்” சித்தூருக்கு சமய தொண்டுக்காக அனுப்பிவைக்கப்பட்டார் ஜி.யு.போப்.
சாயர்புரத்தில் ஜி.யு.போப் பங்களிப்பு:
தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரம் தங்கியிருந்த ஜி.யு.போப். அங்கிருந்த ஆரியங்காவு பிள்ளை, ராமானுஜர் கவிராயரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்றுக் கொண்டார். பிறகு அருகில் உள்ள “சிந்தியம்பலம்” கிராமத்தை சேர்ந்த நம்மாழ்வார் என்பவர் போப் உடன் நட்பாகி ஞான சிகாமணி என்று தன் பெயரை மாற்றி கிறிஸ்தவரானார். அதனால் ஒரு தொடக்கப் பள்ளிக்கு அவர் பெயரை சூட்டினார் ஜி.யு.போப். இவர் தமிழ் தவிர தெலுங்கு மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.
சாயர்புரத்தில் போப்பின் பணி:
* சமயப் பணி மற்றும் கல்விப் பணி.
பிறகு 1849 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட போப். பிறகு இங்கிலாந்து சென்றார்.
தஞ்சாவூரில் ஜி.யு போப் இன் பங்களிப்பு:
1851ஆம் ஆண்டு தன் மனைவியுடன் தமிழகம் திரும்பினார் ஜி.யு.போப். எட்டு ஆண்டுகள் தஞ்சாவூரில் சமயப் பணியை தொடர்ந்தார் பிறகு இந்த கால கட்டத்தில் புறநானுறு, நன்னூல், திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களையும் கற்று கொண்டார். இவர் சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார்.
தஞ்சாவூரில் போப்பின் பணி:
* சமயப்பணி, கல்விப்பணி, தமிழ்ப்பணி என முப்பரிமாணம் கொண்டது.
உதகமண்டலத்தில் ஜி. யு.போப் – இன் பங்களிப்பு:
தஞ்சையில் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிய பின்னர் சாதி உயர்வு தாழ்வுகளை மறக்காத உயர் சமூகத்தை சேர்ந்ததாகக் கருதப்படும் தங்களுக்கு முதல் இடம் கேட்டனர். அப்போது போப் இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம் என்றார். அவரது கருத்து முதல் முதலிடம் கேட்டபிறகு ஏற்கப்படவில்லை.பிறகு போப் கிறிஸ்துவ சபையான நற்செய்தி கழகத்தார் உயர் சமூகத்தை சேர்ந்தவராக கருதப்பட்ட அவர்களை சார்ந்து நின்றதால் தமது 16 வருட நற்செய்தி கழக தொண்டர் பணியில் இருந்து விலகி கிருத்துவ சங்கங்களின் சார்பின்றி அவர்களது பொருள் உதவி இன்றி தனிப்பட்டமுறையில் சமய பணியாற்றும் நோக்குடன் போதிய பொருளின்றி தஞ்சையிலிருந்து மனைவி மற்றும் 5 மகள்களுடன் மாட்டு வண்டியில் ஏறி 24 நாட்கள் பயணம் செய்து உதகமண்டலம் சென்றடைந்தார்.
அதன்பிறகு உதகமண்டலத்தில் ஐரோப்பிய மாணவர்களுக்கு ஆசிரியராக அமர்ந்து பாடம் சொல்லிக் கொடுத்தார். பின்னர் உதகையில் சிறந்த பள்ளியை உருவாக்கினார். சிறை தண்டனை பெற்று இருந்த ஐரோப்பிய குற்றவாளிகளைக் கண்டு பேசுவார். இடைவிடாது தமிழ் பழைய நூல்களை கற்று வந்தார்.மேலும் பழைய ஏட்டுச் சுவடிகளைத் தேடி சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உதகையில் அவரது பணிக்காக இங்கிலாந்தின் கந்தர் புரி அத்தியட்சர் “மறைநூல் புலவர்”எனும் பட்டத்தை ஜி.யு.போப் – கு அளித்தார்.
பெங்களூரில் ஜி.யு.போப் – இன் பங்களிப்பு:
1871ஆம் ஆண்டு சில சூழல் காரணமாக பெங்களூர் சென்று அங்கு கல்வி பணியும், சமயப் பணியும் ஆற்றினார்.அப்போது ஜி.யு.போப் விற்கு உடல்நலம் குன்றியதால் 1882ம் ஆண்டு இங்கிலாந்திற்கு திரும்பினார்.
ஜி.யு.போப் இன் இறுதி மூன்று விருப்பங்கள் :
1. தனது இறப்பிற்கு பின் தனது கல்லறையில் “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என்ற வாசகம் இடம்பெற வேண்டும்.
2. தனது கல்லறைக்கு செலவிடும் தொகையில் ஒரு சிறு பகுதியாவது தமிழ்மக்களின் நன்கொடையால் அமையவேண்டும்.
3. தனது கல்லறையில் தம்மை அடக்கம் செய்யும்போது தான் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குறள் மற்றும் திருவாசகத்தையும் உடன் வைக்க வேண்டும்.
ஜி.யு.போப் இன் மறைவு :
தமிழுக்கு தொண்டாற்றிய ஜி.யு.போப் (88) இல் 1908 ஆண்டு மறைவுக்குப் பின்னர் அவரது உடல் இங்கிலாந்தில் மத்திய ஆக்ஸ்போர்ட் பகுதியில் உள்ள ST.SEPULCHRE’S CEMETERY என்ற கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
ஆனால் “நான் ஒரு தமிழ் மாணவன்” என்று தனது மரணத்திற்குப்பின் கல்லறையில் பொறிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்த ஜி.யு. போப் இன் ஆசை நிறைவேறவில்லை.