Categories
Uncategorized

சி. இலக்குவனார் வாழ்க்கை குறிப்பு

                                                                                                                                                             பிறப்பு – 10.03.1910

பிறந்த ஊர் – திருத்துறைப்பூண்டியை அடுத்து உள்ள வாய்மைமேடு.

பெற்றோர்கள் – சிங்காரவேலுத் தேவர் மற்றும் இரத்தினம் அம்மாள்.

இயற்பெயர் – லட்சுமணன் என்ற பெயரை சாமி சிதம்பரனார் இலக்குவணன் என மாற்றிக் கொண்டார்.

சி. இலக்குவனார் பற்றிய முக்கிய குறிப்புகள்:

1936 ஆம் ஆண்டு தமிழ் வித்துவான் பட்டம் பெற்றார்.

பி. ஓ. எல். , எம். ஓ. எல். , எம்.ஏ பட்டம் பெற்றார்.

1936 ஆம் ஆண்டு முதல் 1943 ஆம் ஆண்டு வரை பல்வேறு உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார்.

1945-ஆம் ஆண்டு முதல் 1965 ஆம் ஆண்டு வரை தெ. தி. அந்துக் கல்லூரி, செந்தில் குமார நாடார் கல்லூரி, மதுரை தியாகராசர் கல்லூரி ஆகியவற்றில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார்.

1962ஆம் ஆண்டு தமிழ் பாதுகாப்பு கழகத்தைத் தொடங்கினார்.

1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பில் கலந்துகொண்டு கைதானார் அதன் பிறகு சிறை சென்று விடுதலை ஆனார்

1967ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் 1967 முதல் 1968 வரை மாநிலக் கல்லூரியில் தலைமைத் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்தார்.

அதன்பிறகு 1968ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை உஸ்மேனியா பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார்.

தொல்காப்பியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் இவரே. ஆகையால் “தொல்காப்பியம்” என்ற புனைப்பெயர் கொண்டவர்.

தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் மற்றும் தொல்காப்பியத்தை குறித்து ஆங்கிலத்தில் ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி உள்ளவர் இவரே.

சி.இலக்குவனார் எழுதிய நூல்கள்:

எழிலரசி

மாணவர் ஆற்றுப்படை

அண்ணாவிற்கு பாவியல் வாழ்த்து

அமைச்சர் யார் ? எல்லோரும் இந்நாட்டு அரசர்

தமிழ் கற்பிக்கும் முறை

வள்ளுவர் வகுத்த அரசியல்

வள்ளுவர் கண்ட இல்லறம்

பழந்தமிழ்

தொல்காப்பிய ஆராய்ச்சி விளக்கம்

தொல்காப்பிய ஆராய்ச்சி இலக்கியம்

கூறும் தமிழர் வாழ்வியல்

கருமவீரர் காமராசர் பற்றிய குறிப்பு

என் வாழ்க்கைப் போர் என்பது இவரின் தன் வரலாற்று நூல் இவரிடம் பயின்ற மாணவர்களில் கலைஞர் கருணாநிதியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சி.இலக்குவனார் பெற்ற சிறப்பு பெயர்கள்:

இலக்கணச் செம்மல்

செந்தமிழ் மாமணி

தொல்காப்பியம் என்ற புனைப்பெயர் கொண்டவர்.

 

சி .இலக்குவனார் மறைவு:

3. 9. 1973 ஆம் ஆண்டில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *