Categories
Uncategorized

நாலடியார் வினா – விடை

 

1. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் முதன்மையான பாடப்படும் நூல்

“நாலடியார்”

2. தமிழ் மொழிகளில் திருக்குறளோடு ஒப்பிட்ட பாடப்படும் நூல்

“நாலடியார்”

3. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே ஒரு தொகை நூல்

“நாலடியார்”

4. முப்பெரும் அற நூல்களில் ஒன்றாக திகழும் நூல்

“நாலடியார்”

5. முப்பெரும் நூல்கள் யாவை

“திருக்குறள்”

“நாலடியார்”

“பழமொழி நானூறு”

6. துறவறத்தையும், நிலையாமையும் அதிகமாக வலியுறுத்தி பாடப்பட்ட நூல்

“நாலடியார்”

7. திருக்குறளைப் போன்று வகை தொகை கொண்டு வடிவமைக்கப்பட்ட நூல்

“நாலடியார்”

8. நாலடியார் பிரித்து எழுதுக

“நாலடி  + ஆர்”

9. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறம் சார்ந்த நூல் எது

“நாலடியார்”

10. நாலடியார் என பெயர் வரக் காரணம்

“நாலடி கொண்ட வெண்பாவால் எழுதப்பட்டதால் நாலடியார் என பெயர் பெற்றது” 

நான்மணிக்கடிகை நூல் விளக்கம் மற்றும் அடிகள் வரையறை

11. நாலடியார் பாடலைப் பாடியவர்கள்

“சமணமுனிவர்கள் பலரால்”

12. நாலடியார் அடி எல்லை

“4 அடிகள்”

13. நாலடியார் பாடல் உணர்த்தும் பொருள்

“அறம் – பொருள் – இன்பம்”

14. நாலடியாரின் பாவகை

“வெண்பா”

15. நாலடியார் பாடல்களின் எண்ணிக்கை

“400 பாடல்கள்”(கடவுள் வாழ்த்துடன் சேர்த்து 401 பாடல்கள்)

16. நாலடியாரை தொகுத்தவர்

“பதுமனார்”

17. நாலடியாரின் வேறு பெயர்கள் யாது

“நாலடி”

“நாலடி நானூறு”

“வேளாண் வேதம்”

“திருக்குறளின் விளக்கம்”

18. நாலடியார் பாடலின் அருமை பெருமைகளைக் கூறும் ஆன்றோர் மொழிகள்

“பாலும் நெய்யும் உடலுக்கு உறுதி

வேலும் வாளும்  அடலுக்கு உறுதி

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

 

“பழகு தமிழ் சொல்லருமை

              நாலிரண்டில்”

“நாலடி இரண்டடி கற்றவ னிடத்து

வாயடி கையடி அடிக்காதே”

19. இப்பாடலில்  நால் எனப்படுவது“நாலடியார் எனவும்”இரண்டுு எனப்படுவது“திருக்குறள் எனவும் பொருள்படும்”

20. நாலடியாரில் குறிப்பிடப்படும் அறம், பொருள், இன்பம் அதிகாரங்கள்

“அறம்13 அதிகாரங்கள்”

“பொருள்24 அதிகாரங்கள்”

“இன்பம்3 அதிகாரங்கள்”

21. நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்

“ஜி யு போப்”

22. நாலடியார் உணர்த்தும் செயல்

“நன்மை செய்வோர் வாய்க்கால் போன்றோர்”

23. நாலடியாரில் இடம்பெறும் முக்கிய பாடல் வரிகள்

“கல்வியழகே அழகு”

“கல்விகரையில கற்பவர் நாள் சில”

“நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு துரையுண்டு”

“செல்வம் சகடக்கால் போல வரும்”

 

 

 

 

 

One reply on “நாலடியார் வினா – விடை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *