Categories
Uncategorized

நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் வாழ்க்கை வரலாறு….

ந.மு. வேங்கடசாமி நாட்டார் வாழ்க்கை வரலாறு பற்றிய முழுமையான தகவல்கள் இங்கே காணலாம் 

 


1. நடுக்காவேரி முத்துச்சாமி வேங்கடசாமி நாட்டார் ஏப்ரல் மாதம் 1884 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் உள்ள நடுக்காவேரி என்ற ஊரில் முத்துசாமி நாட்டார்  மற்றும்   தையலம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர்தான் ந.மு.வேங்கடசாமி நாட்டார்.

2. சிவப்பிரகாசம் என இவருக்கு முதலில் பெயரிடப்பட்டது. மேலும் இளம் வயதில் இவருக்குத் தொடையின் மேற்புறத்தில் ஒரு கட்டி உண்டாகி வருத்தியது அது ஆறினால் முடி எடுப்பதாக வேங்கடப் பெருமானை இவர்தம் பெற்றோர் வேண்டிக்கொண்டனர் அவ்வாறு நடந்துவிட இவர் பெயரை வேங்கடசாமி என அவர் பெற்றோர் மாற்றினார்.

3. (19)பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின்(20) முற்பகுதியிலும் வாழ்ந்த தமிழறிஞர் என்ற பெருமைக்கு உரியவர் மற்றும் சிறந்த சொற்பொழிவாளர், ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்தவர்.

4. இவர் நினைவாக தஞ்சாவூரில் 1992ஆம் ஆண்டு நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ந. மு. வேங்கடசாமி நாட்டாரின் கல்வி பருவம்:

* அந்தக் காலத்தில் உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்புவரை படித்தவர்.

 * நெடுங்கணக்கு இலக்கம், நெல்லிலக்கம், எண்சுவடி, குழிமாற்று ஆகிய கணக்கு சார்பான சுவடிகளைப் படித்து முடித்தார்.

*  பின்னர் தன் தந்தையார் மூலம் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை, அந்தாதி, கலம்பகம் வகை நூல்களையும் படித்தார்.

* “சாவித்திரி வெண்பா” எனும் நூலை இயற்றிய சாமிநாத முதலியார் – ன் தூண்டுதலால் ஆசிரியர் துணையின்றி தானே தமிழ் இலக்கண, இலக்கியங்களை பயின்று மதுரை தமிழ் சங்கத்தின் பிரவேசப் பண்டிதர்(1905), பால பண்டிதர்(1906), பண்டிதர்(1907) ஆகிய தேர்வுகளை எழுதி முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் கையால் தங்கத்தோட பெற்றார்.

 

ந.மு. வேங்கடசாமி நாட்டாரின்  பணிகள்:

* தமது 24ஆம் வயதில் ஆசிரியர் திருச்சி எஸ். பி. ஜி கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.

* கோயமுத்தூர் தூய மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார்.

* திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் தலைமை தமிழ் பேராசிரியராக 24 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

* அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக 7 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்று சொந்த ஊருக்கு திரும்பினார்.

* தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்கள் விரும்பியவாறு கரந்தைப் புலவர் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் ஊதியம் பெறாமல் மதிப்பியல் முதல்வராகப் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ந. மு. வேங்கடசாமி நாட்டாரின் தொடர்பு கொண்ட தமிழ் அறிஞர்கள்:

1. 1912ஆம் ஆண்டு மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நாட்டாரின் வீட்டுக்கு வந்துள்ளார்.

2. சிலப்பதிகாரத்தில் சில இடங்களில் பொருள் விளங்கவில்லை என்று கேட்டு விளக்கிக் கொண்டார்.

3. தொல்காப்பியத்திலும் சில ஐயங்களை தீர்த்துக் கொண்டார்.

4. சிறந்த நூலாசிரியர் ஆகவும் ஆராய்ச்சியாளராகவும் விளங்கிய நாவலர் அவர்கள் பெரும் புலவர் மு. இராகவையங்கார் எழுதிய “வேளிர் வரலாறு” என்ற நூலில் உள்ள பிழைகளை சுட்டிக் காட்டி தமிழறிஞர்களை ஏற்கச் செய்தார்.

 

ந. மு. வேங்கடசாமி நாட்டாரின் ஆக்கங்கள்:

1. வேளிர் வரலாறு (1915)

2. நக்கீரர் (1919 – இந்நூல் லண்டன் பல்கலைக்கழகம், காசி இந்து பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டப்படிப்பிற்கு பாடமாக வைக்கப்பட்டது)

3. கபிலர் (1921)

4. கண்ணகி வரலாறும் –  கற்பனை மாண்பும் (1924)

5. சோழர் சரித்திரம் (1928)

6. கட்டுரைத் திரட்டு

7. காந்தியடிகள் நெஞ்சுவிடு தூது 

8. சில செய்யுள்கள்

 

ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் கள்ளர் சரித்திரம் (1923):

* சமுதாய வரலாறாக கருதப்படும் இந்நூல் கள்ளர்களை பற்றி மட்டுமல்லாது தமிழக மக்களை பற்றிய வரலாற்று நூலாகும்.

* கலாசாலை மாணவர்களுக்கு பாடநூலாக வைக்க தகுதி பெற்றது என்று தமிழ் தாத்தா உ .வே. சாமிநாத ஐயர் அவர்களால் பாராட்டப்பட்டது.

*  கலைஞர் மு. கருணாநிதி தனது “தென்பாண்டி சிங்கம்” நூலின் முன்னுரையில் தமிழ் கூறும் நல்லுலகத்தாரால் நாட்டார் ஐயா என்று அன்புடன் அழைக்கப் பெற்ற திரு ந.மு. வே. நாட்டார் ஐயா அவர்களின் கள்ளர் சரித்திரத்தின் துணைகொண்டு இந்நூலை எழுதத்  தொடங்குகிறேன் என்று எழுதியுள்ளார்.

 

ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை எழுதிய நூல்கள்:

1. எட்டுத்தொகை நூல்கள்அகநானூறு

 

2. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

* இன்னா நாற்பது

* களவழி நாற்பது

* கார் நாற்பது

 

3. காப்பியங்கள் 

* சிலப்பதிகாரம்

* மணிமேகலை

 

ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை திருத்திய  எழுதிய நூல்கள்:

* அகத்தியர் தேவார திரட்டு

* தண்டியலங்கார பழைய உரை

* யாப்பருங்கலக் காரிகை உரை

 

ந.மு.வேங்கடசாமி நாட்டார் பெற்ற பட்டங்கள்:

1. வேங்கடசாமி நாட்டாரின் சொற்பொழிவாற்றல் கண்டு வியந்த சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் 24 – 12- 1940 ஆம் ஆண்டில் நடத்திய மாநாட்டில் இவருக்கு நாவலர் எனும் பட்டத்தை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

2. இவரின் சொற்பொழிவு என்பது புதியதொரு செய்தியோ, புதியதோர் ஆய்வு குறிப்போ இல்லாது அமையாதா தலின்  அவரின் சொற்பொழிவைக் கேட்க அந்நாளில் பல  தமிழன்பர்கள் தொலைதூரத்தில் இருந்து நடந்தே வந்து கேட்டு இன்பம் அடைவர்.

 

ந.மு.வேங்கடசாமி நாட்டார் பெற்ற நினைவு பரிசு:

 


இவரது நினைவாக தஞ்சாவூரில் 1992ஆம் ஆண்டு நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி நிறுவப்பட்டது.

 

ந.மு. வேங்கடசாமி நாட்டார் மறைவு:

1884 ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி பிறந்த இவர் 1944ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி இவ்வுலகை விட்டு விலகினார். 😭😭😭😭😭

 

 

 

 

 

 

 

One reply on “நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் வாழ்க்கை வரலாறு….”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *