Categories
Uncategorized

புதுக் கவிதை – கவிஞர் மு. மேத்தா வாழ்க்கை வரலாறு…

புதுக்கவிதை – கவிஞர் மு. மேத்தா

இயற்பெயர்: முகமது மேத்தா

பிறந்த ஊர்: பெரியகுளம் (தேனி மாவட்டம்)

பிறந்த வருடம்: 05 – 09 – 1945

பணி: சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

 

மு. மேத்தா பற்றிய முக்கிய குறிப்புகள்:

1.” வானம்பாடி” எனும் புதுக்கவிதை ஏட்டின் மூலம் அறிமுகமானவர் கவிஞர் மு. மேத்தா.

2. “தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி” எனும் கவிதைத் இவருக்கு புகழ் தேடித்தந்த கவிதைகளில் முக்கியமான ஒன்று.

3. இவர் எழுதிய “ஊர்வலம்” எனும் கவிதை நூல் தமிழக அரசின் பரிசைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

4. “சோழநிலா” எனும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நடத்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசை பெற்றுள்ளது.

5. தமிழக அரசு வழங்கும் “பாவேந்தர்” விருதினை பெற்றார் கவிஞர்                     மு. மேத்தா.

6. இவர் எழுதிய “ஆகாயத்திற்கு அடுத்த வீடு” எனும் நூல் சாகித்திய அகடமி விருது (2006) பெற்ற நூலாகும்.

7. சமூக சிக்கல்களை மையக்கருவாக வைத்து எழுதும் புதுக்கவிஞர் கவிஞர்   மு .மேத்தா ஆவார்.

8. தமிழகக் கவிஞர் பேரவையின் தலைவராக பணியாற்றியவர் கவிஞர்           மு. மேத்தா. 

9. “படிமக் கவிஞர் என்று கவிஞர் மு. மேத்தா அழைக்கப்படுகிறார்.

10. இவர் திரைப்பட பாடல் ஆசிரியர் ஆவார்.

 

மு. மேத்தா இயற்றிய நூல்கள்:

1. மு. மேத்தா கவிதைகள்

2. ஆகாயத்துக்கு அடுத்த வீடு

3. திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்

4. ஊர்வலம்

5. நந்தவன நாட்கள்

6. வெளிச்சம் வெளியே இல்லை

7. ஒற்றை தீக்குச்சி

8. என் பிள்ளை தமிழ்

9. மனச்சிறகு (1978)

10. கண்ணீர் பூக்கள் (மு.மேத்தா – வின் முதல் கவிதை நூல்) 

11. பித்தன்

12. புதுக்கவிதை போராட்டம்

13. பக்கம் பார்த்து பேசுகிறேன் (2008)

14. கிழிந்த கோடு

15. மு. மேத்தா சிறுகதைகள்

 

கவிஞர் மு. மேத்தா எழுதிய நாவல் நூல்கள்:

1. சோழ நிலா

2. மகுட நிலா

 

கவிஞர் மு. மேத்தா எழுதியக் கட்டுரை நூல்கள்:

1. திறந்த புத்தகம் 

 

கவிஞர் மு. மேத்தா பெற்ற பரிசுகள் மற்றும் விருதுகள்:

1. ஊர்வலம் (கவிதை நூல்) தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது.

2. சோழ நிலா (நாவல்) ஆனந்தவிகடன் பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.

 

 கவிஞர் மு .மேத்தா – வின் நாயகம் ஒரு காவியம்:

கவிஞர் வாலியின் “அவதார புருஷன்” எழுதுவதற்கு விதை போட்டது முதன்முதலாக கவிஞர் மு. மேத்தா எழுதிய நாயகம் ஒரு காவியம் என்கிற நூல்தான் காரணம். அதற்கு கவிஞர் வாலி “அவதார புருஷர் அவதரிக்க நாயகம் காரணம்” என்று  கூறினார்.

ஆனால் பதுருப்போருடன்  உடன் அந்நூல்  முற்றுப் பெற்றிருக்கிறது. அதன் பிறகான நபிகளாரின் வரலாற்றை ஏன் மு மேத்தா அவர்கள் எழுதவில்லை என்றால் அவரது உடல் நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றும் எனவே அவரால் இனி அதை எழுத முடியாது என்றும் நல்ல தமிழ் நடையில் எழுதும் ஆற்றல் கொண்ட இளைஞர்கள் யாரேனும் அப்பணியை தொடர்வதாக இருந்தால் நாளைக்கே வேலையை தொடங்கி விடலாம் என்றும் அதை பதிப்பித்த ரஹ்மத் டிரஸ்ட் முஸ்தபா அவர்கள் கூறினார்.

 

கவிஞர் மு. மேத்தா வின் சிறந்த மேற்கோள்கள்:

“நான் வெட்ட வெட்ட தலை பேன்

இறப்பினில் கண் விழிப்பேன் 

மரங்களில் நான் ஏழை 

எனக்கு வைத்த பெயர் வாழை”

போன்ற வரிகள் இவர் போக்கினைக் காட்டும்.

* வயதாகி போனதால் தர்ம ஸ்தூபிகள் தள்ளுகின்றன என்று கூறியவர் கவிஞர் மு. மேத்தா.

*  “மரங்களில் நான் ஏழை எனக்கு வைத்த பெயர் வாழை” என்று கூறியவர் கவிஞர் மு. மேத்தா.

* விழிகள் நட்சத்திரங்களை வருடினாள் விரல்கள் என்னவோ ஜன்னல் கம்பிகளோடுதான்  என்று கூறியவர் கவிஞர் மு. மேத்தா.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *