Categories
Uncategorized

புதுக்கவிதை – கவிஞர் (தேவதேவன் வாழ்க்கை) வரலாறு…

 புதுக்கவிதை – கவிஞர் (தேவதேவன்)

இயற்பெயர்: பிச்சுமணி “கைவல்யம்”

பிறந்த ஊர்: இராஜா கோயில் (விருதுநகர் மாவட்டம்)

பிறந்த வருடம்: 05 – 05 – 1948

புனைப்பெயர்: தேவதேவன்

தந்தை: பிச்சுமணி

 

தேவதேவன் பற்றிய முக்கிய குறிப்புகள்:

1. ஈ.வே. ராமசாமி இவருக்கு “கைவல்யம்” என்ற பெயரை இட்டார்.

2. தூத்துக்குடிக்கு பிழைப்பு தேடி வந்த கைவல்யம் இன்றளவும் அங்கேயே தங்கி இருக்கிறார்.

3. பள்ளிப் படிப்பை முடித்ததும் “தேவதேவன் அச்சகம்” ஒன்றை நடத்தி வந்தார்.

4. இளம் வயதில் மரபு கவிதைகள் எழுதி வந்த கைவல்யம்  தோரோ, எமர்சன் ஆகியோரின் படைப்புகளால் கவரப்பட்டு நவீன கவிதைகள புனையத் தொடங்கினார்.

5. தேவதேவன் கவிதைகள் எளிய சிக்கலில்லாத மொழிநடையை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

6. இயற்கை சார்ந்த படிமங்களை உள்ளடக்கிய தத்துவ நோக்குடன் சொல்பவைதான் தேவதேவன் கவிதைகள்.

7. அவரது சிறந்த கவிதைகளில் மென்மையான இசை ஒழுங்கு காணப்படும் என்பது முக்கியமான ஒன்று.

8. தேவதேவனின்  முதல் கவிதை தொகுப்பு “குளித்துக் கரையேறாத கோபியர்கள்” 1982 – ஆம் ஆண்டு வெளிவந்தது.

9. இரண்டாவது தொகுப்பு “மின்னற் பொழுதே தூரம்” பிரமிள் முன்னுரையுடன் வெளிவந்தது கவிதை வாசகர்களால் கவனிக்கப்பட்டது.

10. தொடர்ந்து “மாற்றப்படாத வீடு” பிரமிள் முன்னுரையுடன் வெளிவந்தது.

11. 2005 ஆம் ஆண்டு அவரது கவிதைகளுக்கான முழுத்தொகுப்பு தேவதேவன் கவிதைகள் என்ற பெயருடன் தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

12. தேவதேவன் “கவிதைபற்றி” என்ற உரையாடல் நூலையும், “அலிபாபாவும், மோர்ஜியானாவும்” என்ற நாடக நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். 

13. 1970 முதல் 1980 களில் தூத்துக்குடியில் கலைப்படங்களுக்கான திரைப்படச்சங்கம் ஒன்றையும் நடத்தி வந்தார்.

14. தேவதேவனைப் பற்றி ஜெயமோகன் முழுமையான திறனாய்வு நூல் ஒன்றை எழுதி இருக்கிறார்.

15. நவீன காலத்திற்கு பின் தமிழ் கவிதை “தேவதேவனை முன்வைத்து” என்ற அந்நூல் கவிதா பதிப்பகத்தால் 1998 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 

16. தமிழினி வெளியீடாக ஜெ.பிரான்ஸ் கிருபா இயக்கத்தில் தேவதேவனை பற்றி “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற செய்தி படம் 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

 

தேவதேவன் பெற்ற விருதுகள்:

* விஷ்ணுபுரம் விருது

* லில்லி தேவசிகாமணி விருது

* தேவமகள் அறக்கட்டளை விருது

* தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக்கான விருது

* விளக்கு விருது

* தூத்துக்குடி சாரால் – ராஜபாண்டியன் வாழ்நாள் இலக்கிய சாதனை விருது.

 

தேவதேவன் எழுதிய நூல்கள்:

1. மாற்றப்படாத வீடு

2. குளித்துக் கரையேறாத கோபியர்கள்

3. நட்சத்திர மீன்

4. அந்தரத்தில் ஒரு இருக்கை

5. சின்னஞ்சிறிய சோகம்

6. விடிந்தும் விடியாத பொழுது

7. மின்னற் பொழுதே தூரம்

8. பூமியை உதறி எழுந்து மேகங்கள்

9. விண்ணளவு பூமி

10. புல்வெளியில் ஒரு கல்

11. நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலங்கள்

12. விரும்பியதெல்லாம்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *