Categories
ஞானக்கூத்தன் பெற்ற விருதுகள்

புதுக்கவிதை – கவிஞர் (ஞானக்கூத்தன்) வாழ்க்கை வரலாறு….

 புதுக்கவிதை – கவிஞர் (ஞானக்கூத்தன்)

 

இயற்பெயர்: அரங்கநாதன்

பிறந்த வருடம்: 07 – 10 – 1938

இறந்த வருடம்: 27 – 07 – 2016 (சென்னை – திருவல்லிக்கேணி)

பிறந்த ஊர்: நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகே உள்ள           திருஇந்தளூர்.

 

ஞானக்கூத்தன் பணியாற்றிய இதழ்கள்:

*  இவரின் கவிதைகள் கல்கி, காலச்சுவடு மற்றும் உயிர்மை போன்ற இதழ்களில்  வெளிவந்துள்ளன.

* ராமகிருஷ்ணன், சா. கந்தசாமி , நா.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து ஞானக்கூத்தன் தொடங்கிய இதழ் “கசடதபற”.

* “கசடதபற” என்னும் இதழைத் தொடங்கியவர் கவிஞர் ஞானக்கூத்தன் ஆவார்.

* “கவனம்” என்ற சிற்றிதழை தொடங்கியவர் ஞானக்கூத்தன்.

* “ழ” இதழின் ஆசிரியர்களில் ஆத்மநாம் மற்றும் ராஜகோபாலன் உடன் இவரும் ஒரு ஆசிரியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இவர் மையம் விருட்சம் (தற்போது நவீன விருட்சம்) மற்றும் கணையாழி பத்திரிக்கைகளில் தன் பங்களிப்பை அளித்தார்.

* க.நா. சுப்பிரமணியத்தின் “இலக்கிய வட்டம்” சி. மணியின் “நடை” போன்ற சிற்றிதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளது.

 

ஞானக்கூத்தன் பற்றிய முக்கிய குறிப்புகள்:

1. 1968ல் இருந்து  முதன்முதலாக கவிதை எழுத ஆரம்பித்தார்.

2. இவர் “பிரச்சினை” என்கின்ற கவிதையில் மூலம் அறிமுகமானவர்.

3. 1998 இல் இவரது கவிதைகள் “ஞானக்கூத்தன் கவிதைகள்” என்கின்ற பெயரில் வெளியிடப்பட்டது.

 

ஞானக்கூத்தன் பெற்ற விருதுகள்:

1. 2010 கவிதைக்காக “சாரல்” விருதினை பெற்றார்.

2. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வழங்கும் இலக்கிய பங்களிப்பிற்காக “விஷ்ணுபுரம் விருது” 2014 இல் பெற்றார்.

3. 2004ஆம் ஆண்டு “விளக்கு விருது” பெற்றார்.

 

ஞானக்கூத்தன் எழுதிய நூல்கள்:

* கவிதை நூல்கள்:

1. இம்பர்  உலகம் 

2. அன்று வேறு கிழமை

3. சூரியனுக்குப்  பின்பக்கம் 

4. கடற்கரையில் சில மரங்கள்

5. ஞானக்கூத்தன் கவிதைகள்

6. பென்சில் படங்கள்

7. மீண்டும் அவர்கள்

8. என் உளம் நிற்றி நீ

9. அலைகள் இழுத்த பூமாலை

10. நம்மை அது தப்பாதோ?

11. கனவு பல காட்டல்

12. சொன்னதைக் கேட்ட ஜன்னல் கதவு.

 

ஞானக்கூத்தன் எழுதிய கட்டுரைகள்:

1. கவிதைக்காக(திறனாய்வு நூல்)

2. கவிதைகளுடன் ஒரு சம்வாதம்.

 

கவிஞர் ஞானக்கூத்தன் இவ்வுலகை விட்டு மறைந்த பின்னர் தமிழ் படைப்பாளிகள் சமூகவலைத்தளங்களில் பதிந்த அஞ்சலிக் குறிப்புகள்:

* கவிஞர் வண்ணதாசன்:

மகா ஸ்வேதா தேவி, வாலேஸ்வரன், ஞானக்கூத்தன்… முதிய பறவைகள் எல்லாம் இன்று கூடு திரும்பிவிட்டன. கிளைகளிலும் வானத்திலும் காணப்படாத கூடுகளுக்கு….

* கவிஞர் வசந்தபாலன்:

மிக முக்கிய கவி ஞானக்கூத்தன் மறைவுச் செய்தி மனதை பிசைகிறது..

* கவிஞர் ரவிக்குமார்:

தமிழின் சிறந்த கவிஞர்களில் ஒருவரும் நல்ல மனிதரும் ஆன ஞானக்கூத்தன் மறைந்த செய்தி மிகுந்த வருத்தத்தைத் தருகிறது..

* கவிஞர் சல்மா:

கவிஞர் ஞானக்கூத்தன் அவர்களது மரணம் பெரும் அதிர்ச்சியும் சோகமும் இன்றைய அதிகாலையை வெறுமையாக மாற்றி இருக்கிறது (:-கவிக்கு ஏது மரணம்?)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *