Categories
Uncategorized

புதுக்கவிதை – கவிஞர் சி. மணி வாழ்க்கை வரலாறு

 புதுக்கவிதை  – கவிஞர் சி. மணி 

பிறப்பு :1936 – 2009 

இயற்பெயர் : S. பழனிசாமி 

சி. மணியின் புனைப்பெயர்: சி .மணி , வே. மாலி.

பணி : ஆங்கிலப் பேராசிரியர் 

 

கவிஞர் சி. மணி பற்றிய சில முக்கிய தகவல்கள்:

1. எழுத்து காலகட்டத்தைச் சேர்ந்த கவிஞர்களில் முக்கியமானவர் சி. மணி.

2. தமிழில் புதுக்கவிதையை உருவாக்கி முன்னோடிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3. சி. சு செல்லப்பாவின் “எழுத்து இதழ்” புதுக்கவிதையை உருவாக்கும் வீச்சுடன் வெளிவந்த போது அதில் எழுதிய கவிஞர்களில் நகுலன், சி. மணி, பசுவய்யா, பிரமிள், இரா. மீனாட்சி, தி.சோ. வேணுகோபாலன் போன்ற கவிஞர்கள் முக்கியமானவர்கள. 

4. அவர்களில் கவிதை கொண்டு சி. சு. செல்லப்பா வெளியிட்ட புதுக்குரல்கள் என்ற கவிதைத் தொகுதி அக்காலத்தில் பரவலாக பேசப்பட்டது.

5. புதுக்குரல்கள் என்ற கவிதைத் தொகுதி தமிழின் முதல் புதுக்கவிதை தொகுதியாகும்.

6. யாப்பை உடைத்து புது கவிதை உருவான போது அதற்கான நியாயங்களை முன்வைத்து வாதாடி அவர்களில் முக்கியமானவர் சி. மணி. 

7.  கவிஞர் சி. மணி என்பவர் டி.எஸ். எலியட் சிந்தனைகளால் பெரிதும் கவரப்பட்டார்.

8. தமிழ் நவீன கவிதையில் அங்கதம் என்பது சி. மணியால் கொண்டுவரப்பட்டது.

9. இவர் இருத்தலின் வெறுமையை சிரிப்பும், கசப்பும் ஆக சொன்ன பல புகழ் பெற்ற கவிதைகளை எழுதி இருக்கிறார்.

10. வரிகளை ஓடித்தும், பிரிந்தும் பொருட்களை உருவாக்குவது அவரது வழிமுறையில் ஒன்று “சாதாரண வாழ்க்கை வாழும் மனிதன் இவன்” என்று ஞானக்கூத்தன் பரிசளிக்கிறார்.

 

கவிஞர் சி. மணி எழுதிய நூல்கள்:

1. கவிதை 

2. வரும் போகும்

3. ஒளிச்சேர்க்கை

4. இதுவரை

5. நகரம்

6. விமர்சனம்

7. யாப்பும் கவிதையும்

8. மொழிபெயர்ப்பு

9. தோண்டு கிணறும் அமைப்பும் 

10. டேனியா செயல்முறை திட்டம் (தமிழ்நாடு அரசு 1984) 

11. தாவோதேஜிஸ் 

கவிஞர் சி. மணியின் புதுக்கவிதை பற்றிய முதல் ஆய்வு நூல் “யாப்பும் கவிதையும் (1925)

டி.எஸ். இலியட் எழுதிய “பாழ்நிலம்” என்ற கவிதையின் நேரடித் தாக்குதலில் உருவானது. 

 

கவிஞர் சி.மணி பெற்ற விருதுகள்: 

1. இருமுறை (1983 & 1985) தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் விருது பெற்றார்.

2. ஆசான் கவிதை விருது

3. கவிஞர் சிற்பி விருது 

4. விளக்கு இலக்கிய பரிசு (2002) 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *