Categories
Uncategorized

புதுக்கவிதை – கவிஞர் (சாலினி இளந்திரையன்) வாழ்க்கை வரலாறு….

 புதுக்கவிதை –  கவிஞர் (சாலினி இளந்திரையன்) 

 

இயற்பெயர்: கனகசவுந்தரி

 

பிறந்த ஊர்: விருதுநகர் மாவட்டம்

பிறந்த வருடம்: 22 – 12 – 1933

இறந்த வருடம்: 28 – 04 – 2000

பெற்றோர்கள்: வே. சங்கரலிங்கம் – சிவகாமி அம்மாள்

புனைப்பெயர்: சாலினி இளந்திரையன்

 

சாலினி இளந்திரையன் பற்றிய முக்கிய குறிப்புகள்:

1. சாலினி இளந்திரையன் தமிழ் பேராசிரியர், சொற்பொழிவாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், இதழாளர், அரசியல் செயல்பாட்டாளர், பொதுவுடமை தமிழ்தேசிய சிந்தனையாளர்.

2. சென்னையில் புகழ்பெற்ற மருத்துவர் களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

3. இவர் தன்னுடைய கல்லூரிக் கல்வியை மதுரை “டோக் பெருமாட்டி’ கல்லூரியில் தொடங்கினார்.

4. பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் 1952 முதல் 1954 வரை தமிழ் இலக்கியம் பயின்று கலை இளவர் சிறப்புப் பட்டம் பெற்றார்.

5. அப்போது இவருக்கு ஆசிரியராக இருந்தவர்கள் சரவண ஆறுமுகம்,          தெ. பொ. மீனாட்சி சுந்தரம், கொண்டல் சு. மகாதேவன், சு. ந. சொக்கலிங்கம் ஆகியோரிடம் பயின்றார்.

6. பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் “சிலப்பதிகார சொல்வளம்” என்ற தலைப்பில் பேராசிரியர் இரா. பி. சேதுப்பிள்ளையின் வழிகாட்டுதலில் 1954 முதல் 1956 வரை ஆய்வு செய்து இலக்கிய முதுவர் பட்டம் பெற்றார்.

7. 1956 முதல் 1958 வரை சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் அரசின் உதவி பெற்று “தமிழ் வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்” எனும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு மேற்கொண்டு 1973ஆம் ஆண்டிலேயே முனைவர் பட்டம் பெற்றார்.

8. பின்னர் இவர் மணிமேகலை காப்பியத்தை ஆய்வு செய்து “வாடாமலர்” எனும் தன்னுடைய முதல் கட்டுரையை எழுதிப் படித்தார்.

9. வாடாமலர் எனும் கட்டுரை அவ்வாண்டின் சிறந்த ஆய்வுக் கட்டுரையாக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

10. இதனைத் தொடர்ந்து எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் ஆசிரியராக இருந்த “ஆனந்த போதினி” எனும் இதழில் இலக்கியக் கட்டுரைகள் எழுதினார்.

11. சாலையாரின் பிளிறல்கள் (சாலை இளந்திரையன்) எனும் நூலையும், சாலை இளந்திரையனின் பற்றி அறிஞர்கள் பலர் எழுதிய கட்டுரைகளை தொகுத்து சாலை இளந்திரையன் நினைவு மலர் ஒன்றையும் வெளியிட்டார்.

12. சாலினி இளந்திரையன் அரசியல் செயல்பாட்டாளாராக இருந்த பொழுது அவரது கருத்துக்களை வெளியிடுவதற்காக 1987 ஆம் ஆண்டில் “மனித வீறு” எனும் இதழை வெளியிட்டார். இந்த இதழ் 12 வெளியீடுகளோடு நின்று விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

13. பின்னர் அறிவியக்கம் பேரவையின் கொள்கையான “வீரநடை அறிவியக்கம்” எனும் இதழுக்கு 1992 முதல் 1993 ஆசிரியராக இருந்தார்.

14. அதன் பின்னர் திராவிடத் தந்தை பெரியாரை தன் அரசியல் சமூக சிந்தனைக்கு வழி காட்டியாக சாலினி இளந்திரையன் ஏற்றுக்கொண்டார்.

 SALAI ILANTHIRAIYAN PDF DOWNLOAD

சாலினி இளந்திரையன்  புகழ் மொழிகள்:

* தமிழ்ப் பண்பின் உறைவிடம் பேராசிரியர் சாலினி இளந்திரையன். ஏற்றப் பொறுப்பை முழு ஈடுபாட்டுடனும் கடமை உணர்வுடனும் செய்தவர்.தமிழ் மொழியையும், இனத்தையும், நாட்டையும், நேசித்து இறுதி மூச்சு நிற்கும் வரை தொண்டாற்றியவர்.உறவினர்களுக்கும், மற்றவருக்கும் சேவையும் உதவியும் செய்வதில் மகிழ்ந்தவர் தான் சாலினி இளந்திரையன்.

        இப்படிக்கு – கு. வெ. கி. ஆசான். 

* உறவாலும் கொள்கையாலும் தங்களோடு தொடர்பு உடையவர்களும் இணைந்ததே குடும்பம் என்பது சாலை சாலினியின் கோட்பாடாக நெடுகிலும் இருந்து வந்தது. இப்பெரிய குடும்பத்திற்கு தலைமை ஏற்றவர் சாலினி இந்த குடும்பத்தை தன் கனிவான அன்பாலும், கடமை தவறாத செயல்களாலும், கடின உழைப்பாலும், ஈத்துவக்கும் இன்பத்தாலும் பேணிக்காத்தவரும் சாலினியே.

  இப்படிக்கு – முனைவர் இரா. ஞானபுசுபம்.

 

சாலினி இளந்திரையன் மேற்கோள்கள்:

1. மனிதன் நலிய தக்கதும் அறியத்தக்கதும் ஆன பொருள்களால் உருவானவன் அத்தகைய மனிதர்கள் உடனே பழகி வாழ்கிறவன் எனவே அவனுடைய நடையிலும் நலிவுகள் ஏற்படுவது இயல்பே அவற்றை உணர்ந்து திருந்திகிறவனே மனிதருள் உயர்ந்தவராக இருக்கிறான்.

2. நல்லவனை அமுக்கிப்போக வல்லவன் முனையும்போது அந்த முயற்சியை தடுக்க ஒரே ஒரு உள்ளம்தான் முனைகிறது அதுதான் கலையுள்ளம், கவி உள்ளம் என்னும் தலைமை தான் தாய் உள்ளம்.

3. அறிவார்ந்த சிந்தனையாலும் அதன் வழி சார்ந்த செயல்களாலும் உருவாவதே புகழ்.

4. பிறருக்காக செய்யும் தியாகம் புகழுக்கு உரியது; ஆனால்? அந்தப் புகழை, உயர்வுக்கு உரியவன் செத்த பிறகு, மணிமண்டபமாகவும், மாளிகையாகவும் எழுப்புவதில் பயனில்லை. அவன் முன்னேயே அவன் நெஞ்சு குளிர அவனுக்குரிய புகழை எட்டு திசைக்க வேண்டும் எட்டுதிசைத்து தளர்த்த நெஞ்சுக்கு ஊக்கம் ஊட்ட வேண்டும் அதுவே உயர்வுகள் தொடர்ந்து செழிக்க வழி அதை செய்வது மேதைகளால் மட்டுமே முடியும்.

5. புகழ்மொழி கேட்க இயலும் ஆசையை அடக்கும் ஆண்மையே பெரும் பேராண்மை.

6. மனிதன் வேறு அவனுடைய கொள்கை வேறு கொள்கையின் மீதுள்ள வெறுப்பை அந்த மனிதன் மீது காட்டக்கூடாது. இந்தத் தெளிவோடு அவர்கள் செயல்படும் இந்த தெளிவு இல்லாதவர்களுக்கு அது பெரிய ஆச்சரியமாக போய்விடுகிறது.

7. நமக்கு துன்பம் செய்பவர்களுக்கும் இன்பமே செய்வது தான் முழுமையான உயர்பண்பு என்கின்ற சான்றாண்மை.

8. மற்றவர்களின் நிலையை அனுசரித்து அதன் காரணமாக தனக்கு துன்பம் வந்தாலும் மற்றவர்கள் மனம் புண்பட்டு விடாதபடி நயமாக நடந்து கொள்வதுதான் பண்பாடு.

9. ஓர் உள்ளத்தின் உண்மையான தன்மையை தெரிந்து அதற்குரிய மதிப்பை அளிப்பதுதான் பண்பாடு களிலேயே மிகப்பெரிய பண்பாடு. இந்தப் பண்பாட்டை உணர்ந்து கடைபிடிப்போர் களின் வாழ்க்கையே சாதனை வாழ்வாக உயர்ந்து சிறக்கிறது. 

 

சாலினி இளந்திரையன் எழுதிய நூல்கள்:

1. சங்கத்தமிழரின் மனிதநேய நெறிமுறைகள்

2. ஆசிரியப் பணியில் நான்

3. களத்தில் கடிதங்கள்

4. குடும்பத்தில் நான்

5. வாழ்க்கை வரலாற்று இலக்கியம்

6. மதிப்பீடு

7. பண்பாட்டின் சிகரங்களாக கருதப்பட்டது

 

சாலினி இளந்திரையன் எழுதிய இலக்கிய கட்டுரைகள்:

1. தமிழ் தந்த பெண்கள்

2. தமிழனே தலைமகன்

3. இரண்டு குரல்கள்

4. தமிழ்க் கனிகள்

 

சாலினி இளந்திரையன் எழுதிய நாடக நூல்கள்:

1. படுகுழி

2. புதிய தடயங்கள்

3. எந்திரக் கலப்பை 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *