Categories
Uncategorized

புதுக்கவிதை – கவிஞர் (கல்யாண்ஜி) வாழ்க்கை வரலாறு….

 புதுக்கவிதை – கவிஞர் (கல்யாண்ஜி) 

 


“வண்ணதாசன்
என்ற புனைபெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதுபவரின் இயற்பெயர்                                          “சி. கல்யாணசுந்தரம்”

இயற்பெயர்: S. கல்யாணசுந்தரம்

பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டம்

பிறந்த வருடம்: 1946 

புனைப்பெயர்கள் : வண்ணதாசன் (சிறுகதை), கல்யாண்ஜி (கவிதை).

 

கல்யாண்ஜி இதழ்:

கல்யாண்ஜி முதன் முதலில் “தீபம்” என்ற  இதழில் கவிதைகளை எழுதினார்.

 

கல்யாண்ஜி பற்றிய முக்கிய குறிப்புகள்:

1.  கல்யாண்ஜியின் தந்தை; தி. க. சிவசங்கரன் ஒரு “இலக்கியவாதி”.

2. இவரது தந்தைக்கு 2000ம் ஆண்டில் “சாகித்திய அகடமி விருது” வழங்கப்பட்டது.

3. கல்யாண்ஜி வங்கியில் பணிபுரிந்தார்.

4. கல்யாண்ஜி சிறுகதை எழுதுவதில் வல்லவர் ஆவார்.

5. கல்யாண்ஜி “1962ல் சிறுகதை எழுதத் தொடங்கினார்” என்பது குறிப்பிடத்தக்கது.

6. புதுக்கவிதைக் கவிஞர் கல்யாண்ஜியின் சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

7. நவீன தமிழ் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளர் புதுக்கவிதைக் கவிஞர் கல்யாண்ஜி ஆவார்.

 

கல்யாண்ஜி பெற்ற விருதுகள்:

* இவரது ஒரு “சிறுஇசை” என்ற சிறுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016ம் ஆண்டுக்கான சாகித்திய அகடமி விருது கிடைத்தது. 

* இலக்கிய சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன் என்கின்ற கல்யாண்ஜி.

* 2016ஆம் ஆண்டு “விஷ்ணுபுரம் விருது” இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

*  2018 – ல் கனடா தமிழ் இலக்கியத்தோட்டம் எனும் அமைப்பு தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை இவருக்கு வழங்கியது.2

* தமிழக அரசு வண்ணதாசனுக்கு (கல்யாண்ஜி) “கலைமாமணி” என்ற விருதை வழங்கியுள்ளது.

 

கல்யாண்ஜி எழுதிய நூல்கள்:

* கவிதை நூல்கள்:

1. மணல் உள்ள ஆறு

2. அந்நியமற்ற நதி

3. ஆதி

4. முன்பின்

5. புலரி

 

* கட்டுரைத் தொகுப்பு நூல்:

1. அகமும் புறமும்

 

* கல்யாண்ஜியின் கடிதங்கள்:

1. பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு “சில இறகுகள் சில பறவைகள்” என்ற பெயரில் வெளியானது.

2. வண்ணதாசன் கடிதங்கள்

 

* கல்யாண்ஜி எழுதிய புதினங்கள்:

1. சின்னு முதல் சின்னு வரை

 

* கல்யாண்ஜி எழுதிய சிறுகதை நூல்கள்:

1. சமவெளி

2. கிருஷ்ணன் வைத்த வீடு

3. மனுஷா மனுஷா

4. ஒளியிலே தெரிவது (உயிர்மை சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கிய 2011ஆம் ஆண்டின் சிறுகதைக்கான சுஜாதா விருதினை இந்நூல் பெற்றது) 

5. தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள்

6. பெயர் தெரியாமல் ஒரு பறவை

7. ஒரு சிறு இசை

8. கனிவு

9. சில இறகுகள் சில பறவைகள்

10. நடுகை

11. உயரப் பறத்தல்

12. கலைக்க முடியாத ஒப்பனைகள்

 

புதுக்கவிதைக் கவிஞர் கல்யாண்ஜி பற்றிய முக்கிய மேற்கோள்கள்:

“சைக்கிளில் வந்த

தக்காளி கூடை சரிந்து

முக்கால் சிவப்பில் உருண்டது

அனைத்துத் திசைகளிலும் பழங்கள்

தலைக்கு மேலே

வேலை இருப்பதாய்க் 

கடந்தும் நடந்தும்

அனைவரும் போயினர்

பழங்களை விடவும்

நசுங்கி போனது

அடுத்த மனிதர்கள்

மீதான அக்கறை”

       கவிஞர் கல்யாண்ஜி …..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *