புதுக்கவிதை – கவிஞர் கலாப்ரியா
இயற்பெயர்: தி. சு. சோமசுந்தரம்
பெற்றோர்கள்: கந்தசாமி மற்றும் சண்முகவடிவு
பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டம்
பிறந்த வருடம்: 30 – 07 – 1950
கலாப்பிரியா பற்றிய முக்கிய குறிப்புகள்:
1. அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம், வண்ண நிலவனின் கையெழுத்து இதழான பொருநையில் கவிதை எழுதும் போது தனக்கு தானே “கலாப்ரியா” என்று பெயர் சூட்டிக் கொண்டார்.
2. பின்னர் “கசடதபர” எனும் இதழில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார்.
3. கசடதபரவிற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய இதழ்களில் கவிதைகள் எழுதினார்.
4. நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணி நிறைவு பெற்றவர்.
5. தன்னைச் சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வருகிறார்.
6. கலாப்ரியா அவர்கள் குற்றாலத்தில் மூன்று முறை கவிதை பட்டறைகளை நடத்தினார்.
7. நிறைய புதுக்கவிதைகள் பழசும் இல்லாத புதுசும் இல்லாத “அலி” கவிதைகளாக இருக்கின்றன. ஆனால் கலாப்ரியாவின் கவிதைகள் ஆண் பிள்ளை கவிதைகள் அல்லது பெண் பிள்ளை கவிதைகள் என தி. ஜானகிராமன் ஆல் பாராட்டப்பட்டவர்.
8. “பொருனை” என்ற இதழை எழுதும் போது தான் தன் இயற்பெயரான சோமசுந்தரம் என்ற பெயரை கலாப்ரியா என்று மாற்றிக் கொண்டார்.
கலாப்பிரியா பெற்ற விருதுகள்:
1. தமிழக அரசின் “கலைமாமணி விருது”
2. கவிஞர் “சிற்பி இலக்கிய விருது”
3. 2010ஆம் ஆண்டு “விகடன் விருது”, “சுஜாதா விருது”
4. 2012ல் “கண்ணதாசன் இலக்கிய விருது”
5. 2017இல் கலைஞர் மு. கருணாநிதி “பொற்கிழி விருது”
6. 2017இல் “மனோன்மணியம் சுந்தரனார் விருது”
7. 2018 இல் “ஜெயகாந்தன் விருது”
கலாப்ரியா எழுதிய நூல்கள்:
* உலகெல்லாம் சூரியன்
* எல்லாம் கலந்த காற்று
* எட்டயபுரம்
* சுயம்வரம்
* வெள்ளம்
* நான் நீ மீன்
* அனிச்சம்
* மாற்றாங்கே
* தீர்த்த யாத்திரை
* வனம் புகுதல்
* கலாப்ரியா கவிதைகள்
கலாப்பிரியா அவர்களின் மேற்கோள்கள்:
“கொப்புகள் விளக்கி
கொத்துக் கொத்தாய்
கருவேலங்காய்
பறித்துபோடும் மேய்பனை
ஒரு நாளும்
சிராய்பதில்லை
கருவமுட்டுகள்”
“குழைந்தைகள் வரைந்தது
பறவைகளை மட்டுமே
வானம்
தானாக உருவானது”