புதுக்கவிதை கவிஞர் – ஆலந்தூர் மோகனரங்கன்
இயற்பெயர்: கோ. மோகனரங்கன்
பிறந்த ஊர்: சென்னையை அடுத்து உள்ள ஆலந்தூரில் பிறந்தார்.
பிறப்பு: 01 – 06 – 1942
பெற்றோர் பெயர்: ம. கோபால் மற்றும் கே. மீனாட்சி.
சிறப்புப் பட்டங்கள்:
1. கவிவேந்தர்
2. முத்தமிழ் கவிஞர்
3. முத்திரை பாவலர்
ஆலந்தூர் மோகனரங்கன் பற்றிய முக்கிய குறிப்புகள்:
1. பத்தாம் வகுப்பு படிக்கும்போதே “புதிய பாதை” எனும் கையெழுத்து ஏட்டை நடத்தி உள்ளார்.
2. மரபுக்கவிதைகள் கவிதை நாடகம் நாவல்கள் சிறுகதைகள் படைத்துள்ளார்.
3. “தமிழ்ப்பா புனைவதில்” முத்திரை பதித்தவர் பெரும் பாவலர் ஆலந்தூர் மோகனரங்கன்.
4. “முத்திரை பாவலர்” என அழைக்கப்படுபவர் ஆலந்தூர் மோகனரங்கன் ஆவார்.
5. கிளை நூலகராகப் பணிபுரிந்தபடியே புகழ்பெற்றபாக்களையும், இசை பாக்களையும் எழுதியவர் ஆலந்தூர் மோகனரங்கன்.
6. எந்த நிலையிலும் உண்மை பேச வேண்டும் என்னும் கருத்தை முதன்மையாக வைத்து சிறுவர் கவிதை நாடகத்தை தமிழில் முதலில் எழுதியவர் என்ற சிறப்பை பெற்றவர் ஆலந்தூர் மோகனரங்கன் ஆவார்.
7. ஆலந்தூர் மோகனரங்கனாரின் “முதல் மெல்லிசை பாடல் “சென்னை வானொலியில் ஒலிபரப்பான ஆண்டு ஆகஸ்ட் – 15.
8. அசை, அழகு, ஓசை, உணர்வு, பூசை, புலமை முதலான காரணங்களுக்காக கவிதை எழுதியவர்.
9. நூற்றாண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் பணியில் ஈடுபட்டு ஆறுமுக நாவலர், சுன்னாகம், குமாரசாமிப் புலவர், சபாபதி நாவலர், பரிதிமாற்கலைஞர், அரசஞ் சண்முகனார் ஆகியோரின் நூல்களை வெளியிட்டார் ஆலந்தூர் மோகனரங்கன்.
10. அறிஞர் அண்ணா அவர்கள் 1942 முதல் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து முதல்முறையாக நூல்வடிவம் கொடுத்து 22 தொகுதிகளாக வெளியிட்டவர் ஆலந்தூர் மோகனரங்கன் ஆவார்.
11. மறைமலை அடிகள், திரு. வி. க, கா. சு. பிள்ளை, மயிலை சீனி வேங்கடசாமி, பன்மொழிப்புலவர், கா. அப்பாத்துரையார் உள்ளிட்ட அறிஞர்களின் நூல்களை மறுபதிப்பு செய்த பெருமைக்குரியவர் ஆலந்தூர் மோகனரங்கனைச்சேரும்.
12. தில்லியில் உள்ள தேசியப் புத்தக நிறுவனத்தார் இவர்தம் கவிதைகளை ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மொழி பெயர்த்து வந்துள்ளனர்.
13. ஞானபீட நிறுவனத்தார் இவர்தம் கவிதைகளை இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர்.
14. மோகனரங்கன் அவர்களின் பாடல்கள் பள்ளிப் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன.
15. தமிழக அரசின் பாட நூல்களில் மட்டுமன்றி கர்நாடக மாநிலத்தின் தமிழ்ப்பாட நூல்களிலும், சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் நாட்டு தமிழ் பாட நூல்களிலும் இவர் பாடல்கள் பாட நூல்களில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
16. மோகனரங்கன் வானொலியில் இசைப் பாடல்களையும், இசை நாடகங்களையும் எழுதி புகழ் பெற்றவர்.
17. தற்போது வசந்தா பதிப்பகத்தின் மூலம் அருமையான பழந்தமிழ் நூல்களை பதிப்பித்து வருகிறார்.
18. வானொலி, தொலைக்காட்சி, பாவரங்கம் மேடை இவற்றுள் ஏதேனும் ஒன்றனுல் இவர் தமிழ் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
click below here
புதுக்கவிதை கவிஞர் (சாலினி இளந்திரையன்) STUDY MATERIAL
ஆலந்தூர் மோகனரங்கன் பெற்ற விருதுகள்:
1. தமிழக அரசின் பாவேந்தர் விருது
2. குழந்தை இலக்கியம் மாமணி விருது
3. வி. ஜி .பி விருது
ஆலந்தூர் மோகனரங்கன் எழுதிய நூல்கள்:
1. 2009 – ல் முதல் “குறும்பா” என்னும் பெயரிலும், குறுந்தொகையின் குழந்தைகள் என்னும் பெயரிலும் ஹைக்கூ கவிதைகள் எழுதியுள்ளார்.
2. 1982ஆம் ஆண்டு இவர் வரதராசனார் பற்றி “வணக்கத்துக்குரிய வரதராசனார் கதை” எனும் தலைப்பில் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றுள்ளது.
3. தாத்தாவுக்குத் தாத்தா எனும் தலைப்பில் “மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை” வரலாற்றையும் இவர் எழுதியுள்ளார்.
4. இவருடைய “இமயம் எங்கள் காலடியில்” என்னும் கவிதைத் தொகுப்பு நூல் தமிழக அரசின் பரிசைப் பெற்றுள்ளது.
5. இவர் எழுதிய “பொன்னம்மா ஒரு புதுமைப்பெண்” என்ற நாடகம் ஏ.வி.எம் அறக்கட்டளையின் தங்கப்பதக்கம் பரிசு பெற்றது.
ஆலந்தூர் மோகனரங்கன் எழுதிய வேறு நூல்கள்:
1. ஆலந்தூர் மோகனரங்கன் கவிதைகள்
2. ஆலந்தூர் மோகனரங்கன் சிறுகதைகள்
3. ஆலந்தூர் மோகனரங்கன் மெல்லிசைப்பாடல்கள்
4. முத்தமிழ் கவிஞர் மோகனரங்கன் கவிதை நாடகங்கள்
5. கவிராயர் குடும்பம்
6. நாட்டு மக்களுக்கு நல்ல நாடகங்கள்
7. தாத்தாவுக்கு தாத்தா (வாழ்க்கை வரலாற்று நூல்)
8. வணக்கத்திற்குரிய வரதராசனார் கதை (வாழ்க்கை வரலாற்று நூல்)
9. பொன்னம்மா ஒரு புதுமைப்பெண்
10. நினைத்தால் இனிப்பவளே (நாவல்)
11. குப்பை மேட்டுப் பூனைக்குட்டி
12. பள்ளிப் பறவைகள்
13. குறுந்தொகையின் குழந்தைகள்
14. இதயமே இல்லாதவர்கள்
15. கவிதை எனக்கோர் ஏவுகணை
16. இமயம் எங்கள் காலடியில்
17. இளைஞர்களுக்கு ஓர் எச்சரிக்கை
18. பிறர் வாழப்பிறந்தவர்கள்
19. கொஞ்சு தமிழ் கோலங்கள்
20. நல்ல உலகம் நாளை மலரும் (மனித நேயம்)
21. சவால் சம்பந்தம் (உரைநடை நாடகம்)
22. கனவுப் பூக்கள் (காப்பியம்)
ஆலந்தூர் மோகனரங்கன் எழுதிய கவிதை நாடக நூல்:
1. கயமையைக் களைவோம்
2. வைர மூக்குத்தி
3. தலைவாசல்
4. அமைதி
5. புது மனிதன்
6. யாருக்குப் பொங்கல்
7. மனிதனே புனிதனாவாய்